செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2021
Home > அயோத்தி ராமர் கோயில் > அயோத்தியில் முதலாவது ஆயுதமோதல்

அயோத்தியில் முதலாவது ஆயுதமோதல்

 

அயோத்தி சர்ச்சைக்கு வருவோம். அயோத்தியைப்பொருத்தவரை 1822ம்ஆண்டு முதல் இந்த சர்ச்சையைப்பற்றி மாவட்ட நீதிமன்றங்களில் காணப்படுகின்றன. முதலாவது ஆதாரம் கிடைப்பது ஹபீஸுல்லா என்ற நீதிமன்ற அதிகாரி சமர்ப்பித்த ஓர் குறிப்பு. அவர் பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த குறிப்பி்ல், ராமர்கோயிலைத் தகர்த்துவிட்டு சீதாவின் சமையலறைக்குஅருகே பாப்ரி மசூதி கட்டப்பட்டதாகத்  தெரிவிக்கிறார். அந்த குறிப்பு ராமர்  கோயில் சீதாவின் சமையலறை  இரண்டையும் குறிப்பிடுகிறது. பைஜாபாத் மாவட்டநீதிமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பபட்டதாகத்  தெரிகிறது.

1855ம் ஆண்டு ஒரு சுவாரசியமான  நிகழ்வு. ஓர்  ஆங்கிலேயப்பிரஜை அவாத்  நவாப்பிற்கு கடிதம் ஒன்று எழுதுகிறார். நவாப் அப்போது இருக்கிறார்.இன்னும் ராஜ பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. அது 1857ம் ஆண்டு புரட்சிக்குப்பின் நடந்தது. எனவே அவர் எழுதுகிறார். குலாம் ஹூஸேன் என்ற சுண்ணி தலைவன் ராணுவசக்தியைத் திரட்டிக்கொண்டிருக்கிறான். ஹனுமான் கார்ஹியைத்தாக்கப் போகிறான். எனவே அவாத் நவாப்பிடம் முறையிடுகிறார்… குலாம் ஹுஸேனைத் தடுத்து நிறுத்துங்கள் ராணுவ வலுவூட்டங்களை ஹனுமான்கார்ஹிக்கு அனுப்புங்கள். நவாப் சும்மா இருந்துவிடுகிறார். ஒருசிறிய சண்டை நிகழ்கிறது.

ஜூலைமாதம் (1855ம்ஆண்டு) இந்த பூசல் தீவிரமடைந்து ஒரு சிறியபோர் துவங்குகிறது. குலாம் ஹூஸேன் குழுவினர் ஹனுமான் கார்ஹியையும், அங்குஉள்ள இந்துக்கள்மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 70 முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முதலில் ஹனுமான்கார்ஹியின் மீது முஸ்லிம்கள் ஏன் தாக்குதல் நடத்தவேண்டும் ? ஏனெனில் அவர்கள் பிரகாரம் ஹனுமான்கார்ஹியில் ஒரு மசூதி உள்ளது. அதனால் ஹனுமான்கார்ஹியை மசூதியுடன் எங்களுக்கு ஒப்படைக்கவேண்டும் என்று. இந்த இரண்டாவது சண்டையில் 70 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அதற்குப்பின் ஆங்கிலேயபிரஜை இரண்டு பத்திரங்களை அவாத் நவாப்பிடம் சமர்ப்பிக்கிறார். இவையிரண்டும் ஹனுமான்கார்ஹி யார்வசம் இருந்ததோ அந்த பைராகியிடமிருந்து பெறப்பட்டது. முதல்  பைராகி குறிப்பிடுகிறார், எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் முஸ்லிம்களிடத்தில் இல்லை. நட்புஉணர்ச்சியே மேலோங்கி உள்ளது, அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியபோதும். நாங்கள் அவர்கள்மீது  தாக்குதலுக்கு முன்பிருந்த நட்புணர்வுடனே இனிமேலும் இருப்போம். இரண்டாவது பத்திரத்தில் அவர்கள் கூறுவது யாதெனில், ஒரு பாரபட்சமில்லாத சுதந்திர விசாரணை மேற்கொண்டு ஹனுமான்கார்ஹியில் மசூதி ஒன்று இருப்பது முடிவாகத் தெரியவந்தால், முழு ஹனுமான்கார்ஹியையம் அவர்களிடம் சண்டை ஏதும் போடாமல் ஒப்படைக்கத்தயார் என்று. மேலும் அவர்கள் சொன்னது, அவாத் நவாப்பின் மூதாதையர் ஹனுமான்கார்ஹியை எங்களுக்குக்கொடுத்தனர். ஏதேனும் மசூதி இருப்பின் கொடுத்திருக்கமாட்டார்கள். மசூதி இருப்பதைப்பற்றி தெரிவிக்கவுமில்லை. பிறகு நவாப்பின் முன்னோர்கள் கொடுத்த ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

அவாத் நவாப்பிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே அவர் கூறுகிறார்.. ஒரு சமரசமாகச்செல்வோம், அதன்படி ஒரு மசூதி ஹனுமான்கார்ஹியின் அருகே கட்டப்படட்டும். ஆனால் ஹனுமான்கார்ஹி சாதுக்கள் அதற்கு ஒப்புதல் தரவில்லை. சுதந்திரமாக செயல்பட்ட குழுவும் ஆய்வுக்குப்பின் மசூதி ஒன்று அங்கே எப்போதுமே இல்லை என்ற முடிவுக்கே வந்தது. இந்த குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வந்தவுடன், முஸ்லிம் ஜிஹாதிகுழுவினர் மிகவும் ஆத்திரமடைந்தனர். ஒரு புதிய தலைவன் அமீர்அலி முளைக்கிறான். அவன் ஆயுத சக்தியைத்திரட்டி ஹனுமான்கார்ஹியைத்தாக்க முற்படுகிறான். ஆங்கிலேயர் பேச்சு வார்த்தை மூலம் தடுக்க முற்படுகின்றனர். ஆனால் அவன் ஒப்புக்கொள்வதாக இல்லை. எனவே அயோத்திமேல் தாக்குதல் நடத்தும் முன் அவன் கொல்லப்படுகிறான். 1855ம் ஆண்டு பதிவுபெற்ற முதல் ஆயுதமோதல் இதுவே அயோத்தியில் நடந்தது.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.