ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17, 2021
Home > முக்கியமான சவால்கள் > ஒரு சிறு சுவாரசியமான கணி்ப்பு சபரிமலையைப்பற்றி ஜெ ஸாய்தீபக்

ஒரு சிறு சுவாரசியமான கணி்ப்பு சபரிமலையைப்பற்றி ஜெ ஸாய்தீபக்

சபரிமமலையைப் பற்றிய கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.ஏனென்றால் அதைவிட மோசமான உதாரணம் உங்களால் கொடுத்திருக்க இயலாது.மன்னிக்கவேண்டும்.நான் பதிலடி கொடுக்காமல் இருக்கமாட்டேன். புரிந்துகொள்ளுங்கள், தயவுசெய்து. சபரிமலை ஒரு கலாசாரத்தின் அடிப்படையிலான கேள்வி அல்ல, பாலியல் (ஆண்பெண்வர்க்கம்) பற்றிய கேள்வியும் அல்ல, தற்கால நாகரிகம் பற்றியதுமல்ல, அது பெண்வர்க்கத்தைப்பற்றிய வெறுப்புமல்ல. அது ஒர்  பாரம்பரியத்தைப்பற்றிய கேள்வி. தொடக்கத்திற்குப்பின் சிதைந்து விகாரமடைந்து பொதுமக்கள் பார்வைக்கு வேறுபட்டகோணத்தில் பரிணமித்துள்ளது.

இந்த சர்ச்சையைப்பற்றிப்பேசும் ஒவ்வொரு நபரையும் பார்த்து நான்கேட்கும் கேள்வி இதுதான். ஆணானாலும் பெண்ணானாலும், பெண்ணானாலும்ஆணானாலும், எந்தவரிசையிலும், இந்த பழக்கத்தைப்பற்றியோ, அதன் தொடக்கத்தைப்பற்றியோ, அதற்கானகாரணங்களைப்பற்றியோ, எந்த சாஸ்திரநூலின் அடிப்படையிலென்றோ, உங்களுக்கு என்ன தெரியும்.? நீங்கள் இந்த வழக்கத்தை பாலியல்சமத்துவத்தை எதிர்க்கும் வழக்கமென முன்கூட்டியே தீர்மானித்துவிட்டீர்கள். நீங்கள் முடிவை முன்கூட்டியே அறிவத்துவிட்டீர்கள். முதலில் நீங்கள் இந்த முடிவுக்கு நல்ல ஆலோசனையின்பேரில்தான் வந்துள்ளீர்கள்  என்பதைத்தெளிவுபடுத்த சற்றேபின்னோக்கிச்சென்று இந்த பெண்வர்க்கத்தின்மேல் உள்ள வெறுப்பை நன்கு அலசி, பின்பு இந்த வழக்கத்தை விமர்சித்துள்ளீர்கள் என்பதைத்தெளிவுபடுத்துங்கள்.

ஓ.கே., நான் இந்த கேள்விக்கு பதிலளிக்க விழைகிறேன்.ஏனெனில் நான் இதைப்பற்றி NDTV யில் பேசும் வாய்ப்பைப்பெற்றிருந்தேன். அந்த தொலைகாட்சியை தகுந்தவாயிலாகவும் (மன்றமாகவும்)கருதுகிறேன். இதோ எனது விளக்கம் இந்தகேள்விக்கு.

முக்கியமாக கேரளாவில் இரண்டுவகையான நடைமுறைகள் இருந்துவருகின்றன. சில இடங்கள் பெண்களுக்காகமட்டும்,சில இடங்கள் ஆண்களுக்காகமட்டும் என்றும், வேறு சில இடங்கள் எல்லோருக்கும் பொதுவாகவம் ஒதுக்கபடுவது வழக்கம். நீங்கள் பன்முகத்தன்மையைப்பாதுகாக்க விரும்பினால், இந்த பன்முகபாரம்பரியத்தையும் தயவு செய்துபாதுகாக்கவேண்டும். சில கோவில்களுள் ஆண்கள் செல்லத்துணியமாட்டார்கள், அதுவும் சில நாட்கள் ஆண்கள் யாவரும் அந்த தெருக்களிலிருந்து வெளியேற்றப்படுவர். ஆண்கள் அந்தத் தெருக்களில் கால்வைக்கத்தயங்குவர். ஏனெனில் அப்போது பெண்கள்மட்டும் அவர்களுக்கே உரியபாணியில் வணங்குவதற்கு ஒதுக்கப்பட்டுவிடும்.

இரண்டாவதாக இந்த விவாதம் தொடங்குவதற்குமுன் நாம் இந்த பாரம்பரியத்தைப்பற்றி அறிதல் மிகவும் அவசியம்.இந்த பாரம்பரியம் என்ன ? ஒவ்வொரரரு கோயிலுக்கும் ஆதாரமாக புராணங்களும் சரித்திரமும் உண்டு. அவற்றிலிருந்தே பாரம்பரியம் தொடங்குகிறது. சபரிமலையைப்பொருத்தவரை ஐயப்பசுவாமி தெய்வம். அவர் “நைஸ்திக பிரம்மச்சர்யர்”, அதாவது நித்திய பிரம்மச்சாரி விரதம் மேற்கொண்டவர். குறைந்தபட்சம் இதுவே மக்கள் நம்பிக்கை. “நைஸ்திக பிரம்மச்சர்யம்” என்பது நம் சாதுக்களின் (சன்யாசிகளின்) பாரம்பரியமும்கூட. அவர்கள்

பெண்களுடன் பழகுவதை முழுதும் தவிர்ப்பர். இது பெண்களைவெறுக்கும்நோக்குடன் ஆன அணுகுமுறை அல்ல. இதற்குநேர்எதிரே பெண்களுக்கான விதிமுறைகள்  ஆண்களைத் தவிர்க்கும் நோக்கில் இருக்கக்கூடும். இந்த ஏற்பாடு பெண்களுக்காக மட்டும் அல்ல அவர்களுக்கு எதிரான பாகுபாடும்  அல்ல. இதுஒருகீழானகட்டுக்கதை. கயிறுதிரிக்கும் போலிகள் மக்கள் மன்றத்தில்ஏற்படுத்திய ஒன்று. அந்த நோக்கில் ஆண்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெண்களுடன் பழகுவதைத் தவிர்க்கவேண்டும் என்ற விதிமுறைகளை உருவாக்கினர். இதையேமாறுபடுத்தி “மாதவிடாய்” என்பதின் மேலுள்ள வெறுப்பையோ அதையே களங்கமாகவோ கற்பிக்கத்தொடங்கினர். விவாதத்தின் கீழானநிலைஇது. நம் நாட்டில்சில கோயில்களில் “மாதவிடாய்”என்ற உடல்செயல்முறையை வணங்கும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது. “காமாக்யா” கோவில் யாருக்குத்தான் தெரியாது?எனவே ஒரு உதாரணத்தைக்கொண்டு அதுவும் ஒரு  கோயிலைப்பற்றிய அரைகுறை அறிவுடன் சமுதாயத்தின்மீது ஒரு முத்திரையிட்டு இந்த விவாதத்தை அணுகுவது சரியல்ல. இதுஅடியோடு நிறுத்தப்படவேண்டும். இது எனது அறிவுபூர்வமான பதில். எந்தவித உணர்ச்சிக்கும் இடமில்லை.

இரண்டாவதாக சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு  கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நான் முக்கியமாக சபரிமலை வழக்கைப்பற்றி எழுதியுள்ளளேன். ஆகவே இந்த விவாதத்திற்கு அழைக்கப்பட்டேன். அப்போதே சொன்னேன்.. எல்லா விவாதங்களிலும்,ஜாதி, பெண்மை இரண்டையும் சேர்க்கவேண்டாம், ஏனெனில் இவ்விரண்டைத்தவிர வேறுவிஷயங்களும் உள்ளன. உச்சநீதிமன்றம் அரசியலமப்பச்சட்டம்  165ம் விதியின்கீழ் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் குருக்கள் நியமனம் வழக்கில் இவ்வாறு கூறியது… ஆகம சாஸ்திரத்தை  மதிக்கவேண்டும் அல்லது கோயில்வழிபாட்டில் சாஸ்திரரீதியாகவும் இருக்கவேண்டும்.. அவை ஒன்றுக்கொன்று முரணாக  இல்லாதவரை. இதன் பொருள் சிலகுருக்களைத்தேர்வு செய்யும்போது, (கர்ப்பக்ரஹத்தில்) உள்ளே செல்வதற்கும், வெளியே இருப்பதற்கும் நேர்மறைகாரணங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இன்னஜாதி நபர் இந்த இடத்தில் செல்லக்கூடாது என்று கூறினால், அந்த பாரம்பரியம் இன்றைய புதிய அரசியலமைப்புச்சட்டத்தின்கீழ் செல்லுபடியாகாது. நீங்கள் யாதொரு பெண்மணியும் ஓரிடத்தில் நுழைய அனுமதியில்லை என்றுகூறினால் நான் அதை ஆமோதிப்பேன். ஆனால் அந்த விதிமுறையை மாற்றி, சிலவயதுவரம்புக்கு உட்படுத்தி,சிலலல பாரம்பரியத்தின் அடிப்படையில் சில அம்சங்களைப்புகுத்தி, அவற்றை பெரும்பாலான மக்கள் நம்பினாலும், நம்பமறுத்தாலும், (எவ்வாறு ஏற்பது?) உங்களுக்குத்தெரியுமா “தேவப்ரஸ்னா” என்ற பாரம்பரியம் சபரிமலையில் உள்ளது. “மேல்ஸாந்தி” (தலைமைபபூசாரி) ஐயப்பசுவாமியுடன் சம்பாஷணை புரிவார். ஜாதகம் உட்பட பல அம்சங்களின் பேரில் பூசாரிகளைத் தேர்வு செய்து ஐயப்பசுவாமியின் விருப்பப்படியும், சொற்படியும் நிர்ணயம் செய்வாராம். இது பல மடங்களில் மடாதிபதியாக சங்கராச்சாரியார் தேர்வு செய்யப்படும் பாரம்பரியத்தைப் போன்றது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: