செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > ராமர்கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயங்கள்

ராமர்கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயங்கள்

அயோத்தியில் ராமர் கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயம் என்ன உள்ளது ? 18ம் 19ம் நூற்றாண்டுகளில் பல்வேறு சரித்திரங்கள் அரபுமொழியிலும், பெர்ஷியமொழியிலும், உருதுமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில்கூட பாபர்மசூதி காலி இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறவில்லை. பெர்ஷியன்,உருது,அராபிய சரித்திரங்கள் 18ம் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டயாவும் சொல்வது என்னவென்றால், பாபர் ராமர்கோயிலை அழிக்க உத்தரவிட்டதாகவும், அதன்பின்,அந்த இடத்தில் மசூதி ஒன்றைக்கட்ட உத்தரவிட்டதாகவும் தெளிவாகக் காணப்படுகிறது.இதற்குமாறாக ஒரு புத்தகத்திலுமில்லை.நான் குறிப்பிடுவது பல

அறிஞர்கள் ஆய்ந்த அராபிய,பெர்ஷிய,உருது மொழி ஆதாரவிஷயங்கள்.

1869ம் ஆண்டு எழுதி ஆனால் நூறு ஆண்டுகளுக்குப்பிறகு 1969ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் நூலைப்பற்றி இங்கே குறிப்பிட விழைகிறேன்.அதன் பெயர் தாரிக் ஏ அவாதி. அதை எழுதியவர் ஒரு நேரில் கண்டசாட்சி. அயோத்தியை ஆண்டகடைசி நவாப்  காலத்தில் வாழ்ந்த அவர் அப்போது நிகழ்ந்த பல நிகழ்வுகளை நேரில் கண்டவர். அவர் சொல்வதாவது.. பாபர்மசூதி யார் பொறுப்பில் இருந்ததோ அவர்களிடம் லஞ்சம் கொடுத்துவிட்டு இந்துக்கள் அங்கேயும் கும்பிடத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு எனவே அராபிய,பெர்ஷிய, உருது மொழி சரித்திரங்கள் யாவும், ராமர்கோயிலை பாபர் அழிக்க உத்தரவிட்டபின் மமசூதிஒன்று அந்த இடத்தில் கட்டப்பட்டதாகவுமே குறிப்பிடுகின்றன. அதிலும் இந்த கடைசியில் குறிப்பிட்ட நூலானது இந்துக்கள் பாபர் மசூதி அதிகாரரிகளுக்கு, முஸ்லிம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு மசூதிக்குள்ளேயும் வணங்க முற்பட்டதாகத் தெரிவிக்கிறது.

வேறு என்ன குறிப்புகள் பெர்ஷிய மொழியில் உள்ளன என்று பார்ப்போம்.  அக்பரைப் பற்றி எழுதிய அப்துல் பஸல் என்ற அரசாங்க சரித்திர நூலாசிரியர் என்ன கூறுகிறார். அவர் சொல்கிறார்.. அயோத்தி ஒரு புனிதமான பூமி ஏனெனில் ஸ்ரீராமர் பிறந்த இடமானதால். எனவே ராமநவமியன்று ஏராளமான மக்கள் அயோத்தி வந்து  அஞ்சலி சமர்ப்பிக்கின்றனர். இது ஒரு பெர்ஷிய குறிப்பு. மேலும் ஒரு சுவாரசியமான தகவல். 1600ம் ஆண்டு அக்பர் 6பீகாக்கள் நிலம் ஹனுமான் டீலாவுக்கு கட்டிட அமைப்புக்கு வழங்கினார். நூறு வருடங்களுக்குப்பிறகு அந்த அக்பர் கொடுத்த மானியம் புதுப்பிக்கவந்தது. எனவே 1723ம் ஆண்டு எல்லா ஆவணங்களையும் சோதித்தபின் அப்போதுஇருந்த முகலாய மன்னர் மானியத்தைப் புதுப்பிக்க ஒப்புதல் அளித்தார். இதை  ஆவணத்தில் வரைபடுத்தும் நபர் சொல்கிறார்.. 1600ம் ஆண்டு அக்பரால் வழங்கப்பட்ட மானியம் இப்போது 1723ம் ஆண்டு புதுப்பிக்கப்படுவதாக ராமஜன்மபூமியில் நான் எழுதுகிறேன் என்று பெர்ஷிய மொழியில் .. ஆனால் ராமஜன்ம பூமி என்று குறிப்பிடுகிறார். இது பெர்ஷிய சரித்திர நூலாசிரியர் உட்பட அயோத்தியை ராமஜன்மபூமியாகவும் ஒரு புனிதஸ்தலமாகவும் ஏற்றுக்கொண்ட ஒரு ஆதாரமாகவே கருதவேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: