சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > விஷ்ணுஹரி கல்வெட்டும் உண்மையை ஒடுக்க இடதுசாரி வரலாற்றுவல்லுனர்களின் முயற்சிகளும்

விஷ்ணுஹரி கல்வெட்டும் உண்மையை ஒடுக்க இடதுசாரி வரலாற்றுவல்லுனர்களின் முயற்சிகளும்

 

1992ம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அப்போது மசூதியின் சுவர்களிலிருந்து ஒரு பகுதி 5 அடிக்கு 2 அடி கீழே விழுந்தது. அதிலிருந்த கல்வெட்டு ‘விஷ்ணுஹரி கல்வெட்டு’ என அழைக்கப்படுகிறது. அது கோயிலின் வரலாற்றைத் தெரிவிக்கிறது. அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வியல் கல்வெட்டியல் இலாகாவை, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து எழுத்தை அர்த்தப்படுத்துமாறு பணித்தது. எனவே இந்திய  தொல்பொருள் ஆய்வியல் தலைமை கல்வெட்டியல் நிபுணர் திரு.k.v. ரமேஷ் அந்த கல்வெடடில் உள்ளபடியே அர்த்தப்படுத்திக் கொடுத்தார். அந்த வாசகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவே இப்போது அதிகாரபூர்வமான விஷ்ணுஹரி கல்வெட்டு வாசகமாகும்.

இந்த விஷ்ணுஹரி கல்வெட்டில், இந்த கோயில் யாரால் எப்போது கட்டப்பட்டது போன்ற எல்லா விவரங்களும் உள்ளன. எனவே இந்த கல்வெட்டு இருப்பதனால் அயோத்தியைப்பற்றிய சர்ச்சைகள் தீர்ந்தன என்று எண்ணத்தோன்றும். ஏனெனில் இடது சாரி வரலாற்று வல்லுநர்கள் இததுவரை பாபர்மசூதி காலிஇடத்தில் கட்டப்பட்டதாகவே கூறிவந்தனர். இப்போது மசூதி மதில்சுவர்களிலிருந்து கல்வெட்டு கிடைத்துள்ளது. இடதுசாரி சரித்திர ஆசிரியர்களுக்கு இது போதுமானதாக இல்லை. மேலும் அவர்கள் விஷ்ணுஹரி கல்வெட்டிற்கு எதிராக பிரசாரம் தொடங்கினர். இந்த விஷ்ணுஹரி கல்வெட்டு பாபர்மசூதியிலிருந்து விழவில்லை என்றும் அங்கே கொணர்ந்து வைக்கப்பட்ட ஒன்று என கூறத்தொடங்கினர். மசூதி இடிபடும்போது, ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருக்கும்போது, தேசீய சர்வதேச ஊடகங்கள் மத்தியில் எவ்வாறு ஒரு கல்வெட்டை வைத்திருக்க இயலும்? வெளியிலிருந்து கொணர்ந்ததானால் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது.

பேராசிரியர் இர்பான் ஹபீப் இந்த கல்வெட்டு தனியார் தொகுப்பிலிருந்து வந்த ஒன்று என்றார். ஆனால் இவ்வளவு பெரிய கல்வெட்டைப் பற்றிய தகவல் ஏதுமில்லை. 3-4 வருடங்களுக்குப்பின் அவர் தனது வாதத்தை மாற்றிக்கொண்டார். இது லக்னோ அருங்காட்சியகத்திலிருந்து கொணர்ந்து வைக்கப்பட்ட ஒன்று என்று கூறினார். இதுவரை இர்பான் ஹபீபை மறுத்து வாதிட  முடியவில்லை. கல்வெட்டு மசூதியிலிருந்து விழுந்தது தெரியும், ஆனால் லக்னோ அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்டதாகக்கூறப்படும் கல்வெட்டை யாரும் பார்க்கவில்லை. அவர் கூறிய கல்வெட்டானது த்ரேதா-கா-தாகுர் எனும் கல்வெட்டாகும். அயோத்தியில் த்ரேதா-கா-தாகுர் என்ற  மற்றொரு கோயில் இருந்தது, அதை ஔரங்கசீப் மன்னன் இடித்துத்தள்ளினான். அந்த கோயில்  கல்வெட்டு ஒன்றை ஆங்கிலேயர் கைப்பற்றி பைஜாபாத்திலும்  பிறகு லக்னோ அருங்காட்சியகத்திலும் வைத்தனர்.

போனவருடம் கிஷோர்குனால் என்ற ஒரு அதிகாரி, திரு.வி.பி.சிங், திரு.சந்திரசேகர் அவர்களிடம் சிறப்பு கடமை அதிகாரியாகப்பணியாற்றியவர். அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி லக்னோ அருங்காட்சியகம் சென்று, த்ரேதா-கா-தாகுர் கல்வெட்டின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டார். அதை நானும் எனது புத்தகத்தில்  வெளியிட்டுள்ளேன்.. இந்த த்ரேதா-கா-தாகுர் கல்வெட்டு விஷ்ணுஹரி கல்வெட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட  ஒன்று. அவர் மேலும் லக்னோ அருங்காட்சியகத்தின் நுழைவு ஆவணத்தையும் பார்த்து இவ்விரண்டும் வெவ்வேறு என தெளிவுபடுத்தினார். இத்தகைய ஆவண வெளிப்பாடுகள் இடதுசாரி வரலாற்று வல்லுனர்களுக்கு சாதகமாக இல்லை எனில் அவற்றைப்புறக்கணிப்பர். ஆகவே  இந்த கல்வெட்டைப்பொருட்டாகவே மதிக்கவில்லை. இவ்வாறு மக்களை ஏமாற்றுகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: