செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > எவ்வாறு ஆங்கிலேய வருவாய்த்துறை அறிக்கைகள் அயோத்திவழக்கில் ஆதரவு தருகின்றன

எவ்வாறு ஆங்கிலேய வருவாய்த்துறை அறிக்கைகள் அயோத்திவழக்கில் ஆதரவு தருகின்றன

ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய்த்துறை அறக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு இடத்திலிருந்தும் எவ்வளவு வருவாய் வசூல் என்றும் யார் கொடுக்கவேண்டும் என்றும் இவ்வாற் திட்டவட்டமாக அறிக்கைகள் தொகுக்கப்பட்டு வந்தன. பாபர்மசூதியைப் பொருத்தவரை 1861ம் ஆண்டு முதன்முறையாக தீர்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலைமையைப்பொருத்து திருத்தப்படும். ஆனால் 1861ம் ஆண்டிலிருந்து ராமர்கோட் கிராம வருவாய் அறிக்கையில் பாபர்மசூதியைப்பற்றிய குறிப்பீடே இல்லை. அந்த நிலம் அரசாங்க நிலம் என்றும் அங்குள்ள மஹந்த் சொந்தக்காரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தவரை இதை ஒருவரும் எதிர்க்கவில்லை. இந்த அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு உட்பட்டதாகும். பாபர்மசூதியிலிருந்து ஒருவரும் இதை அரசாங்க நிலம் என்றும் மஹந்த்கள் சொந்தம் என்றும் கூறியபோது எதிர்க்கவில்லை.

ஆனால் ஒரு சுவாரசியமான தகவல். ஒருசமயம், எப்போது என்று குறிப்பிட இயலவில்லை, அரசாங்க அலுவலக பதிவேடுகளில் சில திருத்தங்கள் காணப்பட்டன. எங்கெல்லாம் ஜன்மஸ்தான் {ஜன்மபூமி} என்று உள்ளதோ அதனருகே பாபர்மசூதி என்று பிற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. எப்படித் தெரியும்? அந்த மசி வேறு அந்த பேனாமுள்ளின் கனம் வேறு, அந்த மசியின் வர்ணம் வேறு என்று தெளிவாகத் தெரிகிறது. அரசாங்க பதிவேடுகளில் யாரும் இத்தகைய திருத்தங்களைச் செய்யமுடியாது. இந்த கோப்புகள் சுலபமாக இக்காரியத்தைச்செய்ய மேசைமீது இருந்திருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் இதை திட்டமிட்டு செய்திருக்கவேண்டும்.

எப்போது, எவ்வாறு? நமக்குத்தெரியவில்லை. மேலும் சுவாரசியமான தகவல். இந்தக்கோப்பின் நகல்கள் மற்றொரு அலுவலகத்தில் உள்ளன, ஆனால் இந்த திருத்தங்கள் அங்கு காணப்படவில்லை. இதிலிருந்து இந்த ஆதாரங்களை வெகு திறமையாகக் கையாண்டிருப்பது தெரியவருகிறது.

மேலும் ஒரு சுவையான தகவல். 1944ம் ஆண்டில் நமது ஐக்கியமாகாணங்கள் அரசாங்கம், பல்வேறு மாகாணங்களிலும் உள்ள மசூதிகள், பள்ளிவாசல்கள் பற்றிய பட்டியல் ஒன்று வெளியிட்டது. அதில் கட்டிடத்தின் பெயர், எப்போது கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது, கடைசியாக எந்த ‘வக்ப் ‘கட்டிடத்தின் பராமரிப்பை மேற்கொண்டுள்ளது என்ற விவரங்கள் அதிலடங்கும். பொதுவாக மசூதிகளின் பராமரிப்பிற்கு ஒரு வக்ப் ஏற்படுத்தி அதன் வருமானம் மூலம் கட்டிடத்தின் பராமரிப்பை மேற்கொள்வர். ஆனால் பாபர்மசூதியைப்பொருத்தவரை, இந்த நான்காவது பத்தி காலியாக உள்ளது. அரசாளும் மன்னர் பாபர் என்றும், வருடம் 1528 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் வக்ப் எதுவென்று தெரிவிக்கவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபர்மசூதி கட்சிக்காரரிடம் கேட்டது. ஏன் இந்த பத்தி காலியாக உள்ளது என்று. அவர்களால் திருப்திகரமாக பதில் அளிக்க இயலவில்லை. எனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் சொன்னது… இது உங்கள் தரப்பு வாதத்தின் பெரிய வலுக்குறைவு.. கட்டிடத்தின் பராமரிப்புக்கான வக்ப் ஒன்றைக்குறிப்பிடாதது.

Leave a Reply

%d bloggers like this: