ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 25, 2021
Home > அயோத்தி ராமர் கோயில் > அலகாபாத் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அயோத்தியா வழக்கில்

அலகாபாத் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அயோத்தியா வழக்கில்

 

இது ஒரு சுவாரசியமான விஷயம். ஜன்மஸ்தான் மஹந்த்களுக்கும் பாபர்மசூதி கண்காளிப்பாளருக்கும் இடையே நடந்த மோதலின்,போட்டியின் நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டத்திலும், பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது எல்லா ஆவணங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டன. இதில் முதல் ஆவணம் 1858ம்ஆண்டு நவம்பர் 28ந் தேதியிட்ட அறிக்கை. இது அவாத் தாணேதார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை FIR. அவர் கூறுகிறார்..25 சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர், பாபர்மசூதியுள் புகுந்து ஹோமம் பூசை முதலியன செய்கின்றனர்.

கரிக்கட்டை,கோய்லாகரி இவற்றால் அவர்கள் ‘ராம் ராம் ‘ என்று மசூதியின் எல்லா சுவர்களிலும் எழுதியுள்ளார்கள். மேலும் அவர் கூறுகிறார், மசூதியின்வெளியே ஆனால் அந்த சுற்றிடத்திலேயே ராமர்பிறப்பிடம் (ராமஜன்மபூமி) இருப்பதாகவும் இந்துக்கள் தொடர்ந்து நீண்டகாலமாக அங்கு வணங்கிவருவதாகவும், ஆனால் இப்போது அவர்கள் மசூதிக்குள்ளும் வந்து அங்கும் வணங்குவதாகவும் கூறுகிறார்.

அலகாபாத்  உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த அறிக்கையை ஒரு முக்கியமான ஆவணமாகக்கருதுகிறது, ஏனெனில் அந்தக்காகிதம் இன்றும் இருக்கிறதல்லவா? தாணேதார் (போலீஸ்அதிகாரி) தாக்கல் செய்த வழக்கு(புகார்மனு)அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே அலகாபாத் உயர்நீதி மன்றம் கூறியது, இது ஒரு முக்கியமான ஆவணம், ஏனெனில் அயோத்தியிருந்து வெளிப்படும் முதல் தனிப்பட்ட குரலாக இது இருப்பதால். இந்தக்குரல் இந்துக்கள் அந்த சுற்றிடத்திற்குள் மசூதிக்குள்ளேயே வந்திருப்பதாகவும், எதுவாயினும், மசூதிக்கு வெளியே சுற்றிடத்தில் வந்திருப்பதாகவும் அறிவிக்கிறது. இது ஒருகாலத்தில் இந்துக்கள் சரளமாக பாப்ரிமசூதிக்குள் வந்துபோயிருப்பதைத் தெரிவிக்கிறது. அதன்பின் தாணேதார் சில வாரங்களுக்குப்பிறகு பாப்ரிமசூதியிலிருந்து சீக்கியர்களை வெளியேற்றுகிறார் நான் இப்போது வேறுசில முக்கியமான வழக்குகள்பற்றி கூறுகிறேன். 1860ம்ஆண்டு பாபர் மசூதி மேற்பார்வையாளர் ஒருவர் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கிறார். அந்த மனுவில் பாபர் மசூதிக்குள் ஒரு “சாபுத்ரா” உள்ளது. அதை இடித்துத்தள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அப்போது ஆங்கிலேய அதிகாரிகளிடம் கட்டிடம் கட்டுவதற்கும் இடிப்பதற்கும் அனுமதி பெற வேண்டி இருந்தது. எப்போதெல்லாம் மௌல்வி நமாஸுக்கும் ஆஸானுக்கும் அழைப்பு விடுக்கிறாரோ, அப்போதெல்லாம் சங்கு ஊதப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இதனால் பதட்ட நிலவரம் காணப்படுகிறது . இடதுசாரி வரலாற்று வல்லுனர்கள் கூறுவர் .. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்து முஸ்லிம் பதட்டநிலை, அரசாங்கத்தின் பிளவு செய்து ஆளும் நோக்கத்தின் அடிப்படையிலேயே ஏற்பட்ட ஒன்று என்று. ஆனால் அயோத்தியில்  உண்மையில் பலதரப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே காண்கிறோம். பாபர்மசூதியில் மேற்பார்வையாளருக்கும் மஹந்த்களுக்கும் இடையே ஆன மோதலே  ஆகும். எனவே அவர்  கூற்றின்படி அவர்கள் அந்த இடத்தை மீட்கொள்வதில் மிக்க   ஆர்வம் காட்டியதாகத்தெரிகிறது. இது ஒரு மாதிரியான வழி அந்த குரல் கொடுக்க. வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் ஆஸான் தொடங்கும்போது சங்கு ஊதத்தொடங்கினர். இது ஒன்றே செய்யமுடிந்தது. 1866ல்  மீண்டும் ஒரு புகார் எழுப்பப்பட்டது. அதில் பாபர் மசூதி மேற்பார்வையாளர் கூறுகிறார்.. மஹந்த்கள் வளாகத்தின் உள்ளே ஒரு “கோத்ரி” சட்டத்திற்குப்புறம்பாக கட்டியுள்ளனர். இந்த கோத்ரியின் நோக்கம் என்ன? அவர்கள் இதனுள்ளே சிலைகளை வைத்து வணங்கும் நோக்குடன். ஆங்கிலேய அதிகாரிகளின் தலையீட்டை வரும்பும் அவர் கூறுகிறார்.. நாங்கள் இவ்வளவு காலம் உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே இங்கு இருக்கமுடிகிறது ஏனெனில் ஜன்மஸ்தான் பூசாரிகள் எங்களை துன்புறுத்துகிறார்கள்.

பிறகு 1877ம்ஆண்டு பாபர்மசூதி மேற்பார்வையாளர் மீண்டும் ஒரு புகார் எழுப்புகிறார். இம்முறை அவர் சொல்கிறார்.. 5ஆண்டுகளுக்குமுன் ஒரு புகார்மனு அளித்தோம். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.என்ன காரணம்? இப்போது அவர்கள் சரண்பாதுகா சட்டவிரோதமாக காலடிகள் வைத்துள்ளார்கள். அதை அகற்றுங்கள் என்று. மேலும் நீங்கள் ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியும். ஏனென்றால் நீங்கள் அழைப்பாணை summons கொடுக்க வருவதற்கு முன்பே அந்த ஜன்மஸ்தான் மஹந்த்கள் தலைமறைவாகிவிடுகிறார்கள். 5ஆண்டு காலமாக உங்களால் இந்த ஆணையைக் கொடுக்க முடியவில்லை. ஆலய வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது வளாகத்தின் உள்ளே ஒரு ‘சூல்ஹா’வும் அமைத்துள்ளார்கள். முதலில் சிறியாக இருந்தது, இப்போது ஒரு பெரிய சூல்ஹா அமைத்துள்ளனர். எனவே, சபுத்ரா, கோத்ரி, சூல்ஹா இவற்றின் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இடையறாது மோதல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தது தெரியவருகிறது. இந்துக்கள் சமூகம் அவ்விடத்தின் உரிமையை எக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்பதும் அதை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்தனர் என்பதும் தெரியவருகிறத. இவை சாதாரணமாக  மின்னணு ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ நமக்குத்தெரிய வருவதில்லை. வெளிவரும் ஆதாரம் எல்லாம் ஒரு கட்சிக்கு சாதகமாகவே இருந்ததால்  சிலவேளை நமக்குத்தோன்றும்.. எப்படி மற்றகட்சிக்கு சாதகமாக ஒன்றும் வெளிவருவதில்லை என்று. ஏனென்றால் அது அப்படித்தான். 1877ம் ஆணடில் பைஸாபாத் துணை கமிஷணர் நீதிமன்றத்தில் சொல்கிறார்.. நான் ஒரு தனிவழி வளாகத்தில் கட்டியுள்ளேன், ஏனெனில், ராமநவமி உற்சவத்தின்போது ஏராளமான யாத்ரீகர்கள் வருவதால், அவர்கள் வருகையை சமாளிக்க தனி வழி தேவைப்படுகிறது என்று. இதிலிருந்து என்னதெரிகிறது. இந்துக்கள் சும்மா இல்லாமல் துணிந்து வளாகத்தினுள் நுழைந்து வலம் வந்து வணங்கவும் செய்தனர் என்பது தெளிவாகிறது. இதற்கு அடுத்த புகார் ஒரு சுவையான விஷயம். இது 1882ம் ஆண்டு பாபர்மசூதி மேற்பார்வையாளர் ஆங்கிலேய அதிகாரியிடம் அளித்தது. அதில் என்ன கூறுகிறார் எனில், ராமநவமி உற்சவத்தின்போது நாங்கள் கடைகள் வளாகத்தில் அமைத்து பிரசாதம், பூக்கள் முதலியன வியாபாரம் செய்ய அனுமதி வழங்குவோம். வழக்கமாக அந்த வியாபாரத்தை மஹந்த்களும் பாபர்மசூதி மேற்பார்வையாளரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்வோம். ஆனால் இம்முறை பங்குவிகிதத்தை மாற்றிவிட்டனர். மீண்டும் பழைய பங்கு விகிதப்படி மாற்றித் தாருங்கள் என்று. பைஜாபாத் நீதிமன்றம் கூறியது..பங்கு விகிதாதாரத்தை மாற்ற இயலாது, ஏனெனில் அந்த வளாகம் முழுவதும் உங்களுடையது அல்ல என்றும், உங்கள்வசம் இல்லை என்றும் கூறியுள்ளீர்கள். மேலும் ராமநவமி உற்சவத்தின்போது நமாஸ் தொழுகை இல்லாமல் போகும் என்றும் கூறியுள்ளீர்கள். ஆகவே.

1855ம் ஆண்டு ஜன்மபூமி மஹந்த் ஒருவர் ஆங்கிலேய அதிகாரிக்கு எழுதுகிறார்.. என்வசம் உள்ள ‘ராம் ‘சாபுத்ரா’21அடிக்கு 17அடி சதுரத்தில் உள்ளது, அதன்மேல் கூரைஒன்றும் இல்லை, திறந்தவெளியில் உள்ளது. கோடையிலும், மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நானும் எனது சகமஹந்த்களும் பெருத்த சிரமத்திற்கு உட்படுகிறோம். ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. எங்கள்வசம் உள்ள இந்த இடத்தில் ஒரு கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும்.. இந்த விண்ணப்பத்தை ஆங்கிலேய நீதித்துறையில் மூன்று கட்டத்தில் விசாரித்தது. அவர்கள் யாவரும் மஹந்த்கள் கோரிக்கை மிகவம் வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். ஆனாலும் இந்த இடத்தில் ஒரு கட்டிடமும் அனுமதிக்க முடியாது ஏனெனில் இது ஒரு நாஸூக்கான உணர்ச்சிவயப்படும் பிரச்னை. இதுவரை உள்ள நிலையைமாற்ற இயலாது. நாங்கள் இந்துக்களுக்கு 350 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காயத்தை அறிவோம்,எனினும் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.

1885ம்ஆண்டு அமீன் கமிஷன் நிறுவப்பட்டது. இந்த கமிஷன் ‘சீதா ரஸோயி’, ‘சாபுத்ரா’, ‘ஜன்மஸ்தான்’, ‘சூல்ஹா’ எல்லாமே பாபர்மசூதி வளாகத்தின் சுற்றுப்புற சுவரிலேயே இருப்பதாகக் காண்பித்தது.அந்தச்சுவரின் வெளியே ஒரு ஆழமான தாழ்வுப்பகுதி சுவரின் சுற்றிலும் காணப்பட்டது. அது இவ்வளவு நூற்றாண்டுகாலமாக இந்துக்கள் வலம்வந்த அடிச்சுவடுகளே ஆகும். எனவே அந்த இடம் முழுவதும் ஒரு புனிதமான ஸ்தலம் இந்துக்களுக்கு.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.