வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019
Home > அயோத்தி ராமர் கோயில் > அயோத்தியைப்பற்றி ஐரோப்பிய பயணிகளின் கருத்து

அயோத்தியைப்பற்றி ஐரோப்பிய பயணிகளின் கருத்து

இரண்டு ஐரோப்பிய கணிப்புகள் உள்ளன. முதலாவதாக வில்லியம் பிஞ்ச் என்ற நபர் அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட 85 ஆண்டுகளுக்குள் வந்திருந்தார். அவர் கூறுவதாவது.. இந்துக்கள் இங்கு வந்து ஸரயு நதியில் நீராடிச் செல்கின்றனர். அந்தணர்கள் வந்து இங்குவரும் யாத்ரிகர்களின் பெயர் முதலிய விவரங்களைச் சேகரித்துவருகின்றனர். வில்லியம் பிஞ்ச் முஸ்லிம்கள் இருந்ததைப் பற்றியோ நமாஸ்தொழுகையைப்பற்றியோ ஒன்றும் கூறவில்லை. இந்துக்களைப்பற்றி மட்டுமே சொல்கிறார்.

இரண்டாவதாக, ஒரு ஜேஸுவிட் பாதிரி ஜோஸப் டிப்பின் தேலா என்பவர் ஒரு அசாதாரணமான மனிதர். அவர் இந்தியாவில் 40 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மிக முக்கியமான தகவல்களைச் சேகரித்தவர். பூகோள மற்றும் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் மதிப்புள்ள விஷயங்கள் கூறியுள்ளார். அவர் அயோத்தியில் அவாத்தில் 7-8 ஆண்டுகள் தங்கி இருந்து, பல கட்டிடங்களைப்பற்றிய வரைபடங்களைக்கூட சேகரித்தார். அவர் சொல்கிறார்.. உங்களுக்குத்தெரியமா, நான் இங்கு அயோத்தியில் கண்டேன், இந்துக்கள் ஒர் தொட்டில் (பேடி அ. வேடி) கட்டியுள்ளார்கள். நான் சென்ற வளாகத்திற்குள் இந்துக்கள் இதை வலம் வருகிறார்கள். ராமநவமி உற்சவத்தின்போது ஏராளமான மக்கள் ராமர் பிறந்த தினத்தைக்கொண்டாட வருகின்றனர்.. என்று. இதே ஜோஸப் டிப்பின் தேலா முஸ்லிம்கள் அங்கிருந்ததைப்பற்றியோ, நமாஸ் தொழுகையைப்பற்றியோ ஒன்றும் குறிப்பிடவில்லை.

%d bloggers like this: