ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17, 2021
Home > வேதங்களும் புராணங்களும் > இராமாயணம் > ராமாயணத்தை கலைவடிவங்களாக சித்தரித்தல்

ராமாயணத்தை கலைவடிவங்களாக சித்தரித்தல்

வெகுகாலம் முன்பே ராமாயணக்காட்சிகளை கலைவடிவங்களாகச் சித்தரித்ததை நாம் பார்த்துள்ளோம். முதன்முறையாக கி.மு.2ம்நூற்றாண்டில் ராமாயணகாட்சியைச் சித்தரித்த ஒரு ‘டெராகோட்டா’ ஓவியம் உள்ளது. அதில் ராவணன் சீதையைக் கடத்திச் செல்லும்போது, சீதை தனது ஆபரணங்களைக்கழற்றி, யாரேனும் ஒருவர் அதன்மூலம் தன்னைக்கண்டுபிடிக்கக்கூடும் என எண்ணி, கீழே வீசி எறியும் காட்சி, சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கி.மு.2ம்நூற்றாண்டில் வரையப்பட்ட ராமாயணக்காட்சி.

பல்வேறு கலைவடிவங்கள் பலநூற்றாண்டுகள் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றன என்பது நமக்குத்தெரியும். ஆனால் இந்த ராமாயணக்காட்சி இவ்வாறு இத்தனை காலம் கலைவடிவில் வாழ்ந்துவர முக்கிய காரணம் ராமாயணம் பெற்றிருக்கும் ஜனாபிமானமே. மக்களால் விரும்பப்படும் ஆய்வுப்பொருளாக இல்லாவிட்டால் ஏன் இந்தக்காட்சிக்கு ஒரு கலைவடிவம் கொடுக்கவேண்டும்?

அடுத்த ஆதாரம் கி.பி. 2ம்-3ம் நூற்றாண்டுகால சில கலைவடிவங்கள்.ஒர் முத்திரை ‘காஷ்மீர் ஸ்மஸ்த்’ ல் இருந்து வெளிவந்தது. அதில் ‘ராம் ஸீயா'(சீதா) என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒரு சுவையான தகவல். அமெரிக்காவில் ஒரு அருங்காட்சியகத்தில் ஒரு சிறிய டெராகோட்டா ஓவியம் உள்ளது. அதில் ராமன் ஒரு ஆயுதந்தாங்கியில்(அம்புராதூணி) பல அம்பகளைச்சுமந்து, ஆடையில் ‘ராம்’ என்ற பெயருடன் காணப்படுகிறான்.

இந்த மூன்று கலைவடிவங்கள் ராமாயணக்காட்சிகளிலிருந்து சித்தரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களாக உள்ளன. மேலும் வெகுகாலமாகவே ராமாயணம் பரவலாகத் தெரிந்திருந்தது என்பது தெளிவாகிறது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: