புதன்கிழமை, ஜனவரி 22, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்

பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்

நாம் சுதந்திரம் அடைந்த சிறிது காலத்தில் இது நடந்தது. பலருக்கும் தெரியாமலிருக்கலாம். இந்துமக்கள் சமுதாயம் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட கோரிக்கை விடுத்தது. உத்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உ.பி. அரசாங்கம் அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. சமூகத்தின் மனோபாவம் கோயில் கட்டவேண்டும் என்றே உள்ளது. ஆனால் 1949ம்ஆண்டு டிசம்பர் 23ந்தேதியன்று பாலகன் ராமன் உருவச்சிலை ஒன்று பாபர்மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் நபரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நமாஸ்தொழுகைக்கு இடையூறு விளைவிக்கும் என்று கூறவில்லை. ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி முதல் தகவல் அறிக்கை FIR தாக்கல் செய்தார்.

இந்த உருவச்சிலை வைத்தபின் முஸ்லிம் சமூகத்தின்மீது எந்தவித தாக்கமும் இல்லை. இதை எதிர்த்தோ, நமாஸ் தொழுகைக்கான இந்த இடம் எங்கள் உரிமை என்றோ, முஸ்லிம்கள் குரல்கள் எழுப்பவில்லை. ஆனால் இதன் தாக்கங்களும், எதிர்முழக்கங்களும், நமது தேசிய தலைநகர் டில்லியில் எழுந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உ.பி. மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். இந்த நடவடிக்கை காஷ்மீரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுத்தும் என்றும், நமது உறவுகள் பாகிஸ்தானுடன் பாதிக்கப்படும் எனறும் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு கூறினார் என்று புரியவில்லை. இவ்விரண்டிற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை. அவர் எழுதியபின் இந்த நிலையை மாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பைஜாபாத் கமிஷனர் உடனே K.K Nair நாயர் என்ற உதவி கமிஷனருக்கு ஒரு யோசனை சொன்னார். நாம் இந்த சிலையை அமைதியாக வெளியேற்றி விடுவோம் என்று. ஆனால் நாயர் உ.பி.தலைமை செயலாளருக்கும், முதன்மந்திரிக்கும் திட்டவட்டமாக பதிலளித்துவிட்டார்.. நான் இதை முற்றிலும் எதிர்க்கிறேன். இந்துமக்கள் மனநிலையையும், இந்த விவகாரத்தில் உள்ள தீவிர உணர்ச்சிவேகத்தையும் அறியாத ஒருவரே இந்த யோசனை சொல்லியிருக்கக்கூடும். மேலும் என்னால் இந்த காரியம் செய்ய இயலாது. ஒரு பூசாரியும் அயோத்தியில் இதற்குஉடன்படமாட்டார் என்று.

பதிலாக அவர்  ஒரு யோசனை சொன்னார். பாலகன்ராமன் உருவச்சிலைக்குப்பூஜை நடக்கட்டும். இந்துமுஸ்லிம் இரண்டு அணிகளுக்கும், வளாகத்தினுள் வரும் நுழைவு வழியை மறுத்துவிடுவோம். நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.. என்று கூறினார். இந்தப்பிரச்சினை இவ்வாறு நேர்ந்தது. அதிகாரபூர்வமாகத் தெரியவருவது  என்னவென்றால் பாலகன் ராமன் உருவச்சிலையை அந்த வளாகத்திலிருந்து அகற்ற திட்டம் ஒன்று இருந்தது, ஆனால் நாயர் என்ற அதிகாரி அதை மறுத்து நிராகரித்துவிட்டார்.

Leave a Reply

%d bloggers like this: