ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2019
Home > அயோத்தி ராமர் கோயில் > ராமாயணத்தைப்பற்றி சில சிறந்த பிரமுகர்களின் அபிப்ராயங்கள்

ராமாயணத்தைப்பற்றி சில சிறந்த பிரமுகர்களின் அபிப்ராயங்கள்

இந்திய நாகரிகத்தில் ராமாயணத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி தொன்றுதொட்டே மத தலைவர்களும், பொது சிந்தனையாளர்களும் பெருமைபடுத்திப் பேசியுள்ளார்கள். ராமாயணம் என்பது என்ன? அது ஒரு அறநெறிகளின் கையேடு, அது மக்களுக்கு நன்னடத்தை, நற்பண்புகள் என்பன புகட்டும் ஒரு தேசிய கோட்பாடு. ராமன் ஓர் உதாரண புருஷன், தர்மமே வடிவானவன். ராமாயணம் தரும் உபதேசம் ஒரு தெய்வீக புருஷன் மானிட உறவுகளைக் கையாளுவதைப்பற்றி. 1899ம் ஆண்டு    RC Dutt ஆர்.சி. தத், இந்தய தேசிய காங்கிரஸ் லாஹூர் மாநாட்டில் பேசும் முன்பாக, ராமாயணத்தை , மேற்கத்திய வல்லுநர்களுக்காக, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.  அதில் அவர் கூறினார்.. ராமாயணம் இந்துசமய சிரத்தை, நன்னெறி இவை பற்றி துல்யமாகப் பிரதிபலிக்கிறது.. என்று. இந்தியாவில் ராமாயணம் இன்றும் வாழும் பாரம்பரியமாகவும், வாழும் கோட்பாடாகவும், வாழ்க்கையின் நன்னெறிகளின் ஆதாரமாக இருப்பதாதவும், நாட்டின் 100கோடி மக்களுடன் ஒரங்கிணைந்தே வழிகாட்டி வருவதாகவம் குறிப்பிடுகிறார்.

C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய ராமாயண நூல் 6 மாதத்திற்குள் 2ம் பதிப்பு வெளியிட நேர்ந்தது. அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.. ஒருவர் இந்து தர்மத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமாயின், ராமன், சீதை, பரதன், லக்ஷ்மணன், ஹனுமான் இவர்களைப்பற்றி நன்கு புரிந்துகொள்ளவேண்டும். அவர்  இளைஞர்களை ராமாயணமும் மஹாபாரதமும் படிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர் சொன்னார்.. இவ்விரண்டிலும் ஒவ்வொரு பக்கத்தைப் படித்தபின்  அதிக தைரியம், வலுவான மன உறுதி, அல்லது தூய்மையான சிந்தனை பெறுவார்கள் என்பது  நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ராமாயணம் என்பது நமது மூதாதையரின் மனோபாவம், ஆத்மாவைப் பற்றிய விஷயம், ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தங்கள் சுகத்தைவிட மிக அதிகமாக நல்லதையே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீஅரவிந்தர் வால்மீகி ராமாயணத்தின் வாயிலாக நம் கலாசாரத்தை உருவா்கித்தந்ததாக கூறுகிறார். நம் எல்லோருக்கும் தெரிந்ததே, மகாத்மா காந்திக்கு சுயராஜ்யம் என்பது  ராமராஜ்யம்.

Leave a Reply

%d bloggers like this: