ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > தொல்பொருள்துறை ஆய்வின் சான்றுகள் ராம் ஜன்மபூமி பாபர்மசூதியைப் பற்றி தெரிவிப்பது என்ன?

தொல்பொருள்துறை ஆய்வின் சான்றுகள் ராம் ஜன்மபூமி பாபர்மசூதியைப் பற்றி தெரிவிப்பது என்ன?

 

இவற்றில் எதுவும் இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. எனவே கடைசியில் 2003ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ASI யிடம் பாபர்மசூதி இடத்தைத்தோண்டி அதன்கீழே ஒருகோயில் உள்ளதா என பார்க்கக் கோரியது. உயர்நீதி மன்றம் ASI க்கு சில கண்டிப்பான செயல்முறை விதிகள் வகுத்தது. அந்த வளாகத்தில் ஒவ்வொரு நாளும் பாபர்மசூதி செயல்குழுவின் பிரதிநிதி ஒருவரும், ராம் ஜன்மபூமி குழு நபர் ஒருவரும் இருத்ல் அவசியம். என்னவெல்லாம் தோண்டுதலில் கிடைக்கிறதோ, அவற்றை ஒரு விவரப்பட்டியல் ஏட்டில் எழுதி, இருதரப்பு நபர்களும் கையொப்பமிடவேண்டும். ASI இந்த செயல்முறை விதிகளை அவ்வாறே அனுசரித்தது.

கி.மு.2ம் நூற்றாண்டிலிருந்து அந்த இடத்தில் குடியிருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. அது ஒரு புனித இடமாகவே இருந்தது. மக்கள் வாழும் இடமாக இல்லை. தில் வேறு என்ன கிடைத்தது? பழைய பகுதிக்குச் செல்லாமல் நேராக வட்ட வடிவமைப்பில் இருந்த கோயில் கண்டுபிடிப்புக்கு வருவோம். அது குப்தர்கள் ஆண்ட காலத்திற்குப்பின் அமைந்தது. அது ஒருமாதிரி சிவலிங்கத்திற்கு ஒப்பாக இருந்தது. அதற்கு அபிஷேகம் செய்ய நீர் அமைப்பு ஒன்றும் காணப்பட்டது.

அதன்பின் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய கோயில் ஒன்று அங்கே கண்டெடுக்கப்பட்டது. அது வெகு காலம் இல்லை எனவும் சில காலத்திற்குள் அழிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. ஸோமநாதர் கோயில் மீண்டும் மீண்டும் இடித்துத்தள்ளப்பட்டது போல் இதுவும் இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

எனவே கேள்வி எழுகிறது, இதுதான் 10-11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலோ என்று. சாத்தியயக்கூறுகள் உண்டு, ஏனெனில் துருக்கியர்கள் நடமாட்டம் அங்கு அப்போது மிக அதிகமாக இருந்தது. இந்த கோயிலின் இடிபாடுகள் மீது 12ம் நூற்றாண்டில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அது 16ம் நூற்றாண்டுவரை தப்பியது. ஆனால் அதன்பின் பாபர்மசூதிக்காக இடித்துத் தள்ளப்பட்டது. பாபர்மசூதிக்கு அடித்தளம் ஒன்றுமில்லை, இந்தக் கோயிலின் சுவர் மீதே கட்டப்பட்டது.

Leave a Reply

%d bloggers like this: