ராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்.

இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ASI க்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் இந்த விவகாரமும் அடங்கும். எனது பேச்சை நிறைவு செய்யுமுன் இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி ஒரு அறிமுகம் செய்துவிடலாம் என நினைக்கிறேன். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியவை மிகவும் கோரமானவை. எப்படி இன்றும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டும் விஷயம். இடதுசாரரி வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து செயல்படும் முறைப்படி, அந்த பெரிய நால்வர் RS ஷர்மா, DN ஜா, ரோமிலா தாபர், இர்பான் ஹபீப், ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், சக உத்யோகஸ்தர்களையும், மாணவர்களையும் அனுப்பி அறிக்கை தாக்கச்செய்வர். இதிலிருந்து நீங்கள் ஊகிக்கலாம் அது எப்படிப்பட்ட நெருக்கமான குழு என்று.

நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த ஒருவர் சுப்ரியா வர்மா. அவர் ஷெரீன் ரத்னாகர் என்பவரின் கீழ் முனைவராவதற்குப் படித்தவர், அவருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். சுவீரா ஜைய்ஸ்வால் என்பவர் மற்றொரு இடதுசாரி வரலாற்று ஆசிரியர் RS ஷர்மாவிடம் படித்தவர். Rதக்ரான் ஸூரஜ்பான் என்பவரிடம் படித்தவர். சீதாராம்ராய் RS ஷர்மாவின் மாணவர். SCமிஸ்ரா முனைவராக DNஜாவிடம் பயின்றவர். இது ஒருநெருக்கமான குழு. இப்போது சில களிப்பூட்டும் செய்திகள் நீதிமன்றத்தில் நிகழ்ந்தவை, சொல்கிறேன்.

ஸுவீரா ஜைஸ்வால் JNU வில் பேராசிரியராக இருந்தார். அவர் நீதிமன்றத்தில் தான் பண்டைய வரலாற்றில் ஒரு நிபுணர் என்றும் எனவே ஒரு வல்லுநராக சாட்சி சொல்ல

வந்திருப்பதாகவும் கூறினார். முஸ்லிம் ஆட்சியாளர்கள் கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியதாகத் தான் படிக்கவில்லை என்றும் இந்த விஷயத்தைப்பற்றிய அறிக்கை ஒன்றும் தனக்குத்தெரியாது என்றும் கூறினார். மேலும் பாபர்மசூதியைப் பற்றிய வாக்குமூலத்தில் தனது கருத்தையே வெளியிட்டதாகவும் ஆழ்ந்த ஆய்வு செய்தபின்னோ அல்லது படித்ததன் பின்னோ அல்ல என்று கூறினார். அவர் பாபர்நாமாவையும் படிக்கவில்லை. அவருக்குத்தெரிந்தவரை பாபர்மசூதி ராமர்கோயிலைத் தகர்த்தபின் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் தெரியாது என்றார்.நான் பாபர்மசூதி வரலாற்றைப்படிக்கவில்லை. சர்ச்சைக்குரிய இடத்தைப்பற்றி வெளிவந்த செய்திகளையும், மற்றவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையிலுமே, அதாவது இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் சொன்னவற்றையுமே ஆதாரமாகக் கொண்டு ‘ராஜநீதி துஷ்பிரயோகம் – பாபர்மசூதி ராமஜன்மபூமி விவாதம்’ என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டேன். இந்த துண்டுப்பிரசுரம் செய்தித்தாள்கள் வெளியிட்டவை, மற்றும் எனது துறையில் இடைக்காலவரலாற்று வல்லுநர்களாக இருந்தவர்களோடு நடத்திய உரையாடல்களை மையமாகக் கொண்டு பிரசுரிக்கப்பட்டது.

நீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்தது. தங்களை வல்லுநர்கள் என்று கூறும் நபர்கள் சர்ச்சையின் மென்மை உணர்ச்சிகளை மனதில் கொண்டு, அறிக்கை விடுவதற்குமுன், சரியான ஆய்வு செய்யாமல், ஆராய்ச்சி மேற்கொள்ளாமல், அலசிப்பார்க்காமல், அறிக்கை தாக்கல் செய்வதால் சுமுகமான சூழ்நிலை உருவாக்குவதற்குப்பதில், மேலும்சிக்கல்களை விளைவித்து கருத்து மாறுபாடுகளுக்கே வழிசெய்கிறது என்று கூறியது. பேராசிரியர் அவரது புத்தகத்தில் கி.பி. முதலாம் 2ம் நூற்றாண்டில் ராம் மஹாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது உண்மை என்றார். இந்தப்பிரச்சினைக்கு முன் ராம் விஷ்ணுவின் அவதாரம் என்று அவரது ஆராய்ச்சியின்பேரில் வெளியிட்டதாகவும் ஆனால் இப்போது இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ராமனை வணங்குவது கி.பி.18ம் 19ம் நூற்றாண்டு நிழ்வு என்று குறிப்பிடுவது அவரது ஆராய்ச்சிக்கு மாறாக உள்ளது என்று ஒப்புக்கொண்டார்.

மற்றொரு நபர்  டில்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் SCமிஸ்ரா. இவ்வாறு தனிப்பட்ட நபர்களைப்பற்றி குறிப்பிடுதல் முறையல்ல என்றாலும், காலத்தின் கட்டாயத்தில் எல்லாவற்றிலும் நாஸூக்காக இருப்பது சரியல்ல என்று தோன்றுகிறது. அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சரித்திரம், தத்துவம், சம்ஸ்கிருதம் படித்தவர். முதுகலைப்பட்டப்படிப்பில் பண்டைய வரலாறு பயின்றவர். அவர் பாபர்மசூதியைப்பற்றி ஆழ்ந்து படித்ததாகக்கூறி உள்ளார்.

அவர் சொல்வதாவது  பாபர்மசூதியை மீர் பாஹி என்பவர் கட்டியதாகவும், கட்டும்போது எந்தவிதமான கட்டிடமும் தகர்க்கப்படவில்லை என்றும். அவருடைய ஆய்வின்படி பாபர்மசூதியின் கீழே ஒரு கோயில் இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்கிறார்.  அவருடைய  ஆராய்ச்சியில் ராமர் பிறந்த இடம்அயோத்தி பிரம்மகுண்ட்டுக்கும் ரிஷி மோச்சன்காட்டுக்கும் நடுவே  இருக்கிறது என்கிறார்.

அவர் தனது வரலாறு பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்கிறார். பிருதிவிராஜ் சௌஹான் கஜனியை ஆண்டபோது முகம்மத்கோரி அண்டை மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்தார். ஜாஸியா என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது ஏன் விதிக்கப்பட்டது என்று ஞாபகமில்லை, இந்துக்கள் மீது மட்டும் விதிக்கப்பட்டது அல்ல என்று நினைக்கிறேன் என நீதி மன்றத்தில் ஒரு டில்லி பல்கலைகழக சரித்திரப்பேராசிரியர் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகிறார்,  ஔரங்கசீப் விஸ்வநாத் கோயிலில் பாதியைத் தகர்த்துவிட்டு க்யான்வாபி மசூதியைக்கட்டினார் என்று கூறுவது தவறு என்று. ஆனால் உண்மையில் க்யான்வாபியின் பின்புறம் விஸ்வநாத் கோயிலின் பாதி இருப்பதை நாம்காணலாம்.பாபர்நாமாவிலிருந்து 1989வரை நான்  பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பாபர் மசூதிகட்டியதைப்பற்றி. ஆனால் இப்போது ஞாபகத்தில் இல்லை என்று நீதிமன்றத்தில்  சொல்கிறார். அதற்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

அவரது அறிக்கை சுயாதீனமான, நடுநிலையான,நியாயமான அபிப்ராயத்தைக்  கொண்டது என நம்ப முடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது. ஷெரீன் மஸ்வி எனபவர் B.Sc.,M.Sc., லக்னோபல்கலைக்கழகத்தில்படித்தவர் M.A. வரலாறு AMU வில் தனியார் மாணவராகப் படித்தவர். முனைவராகவும் தேர்வு பெற்றார். அவர் இடைக்கால வரலாற்றுப்பகுதியில் தனக்குத்தெரிந்தவரை பாபர்மசூதியை ஒரு கோயிலைத்தகர்த்து கட்டியதாக ஆதாரம் ஒன்றுமில்லை என்றார். அந்த வளாகத்தில் இருந்த கல்வெட்டில் பாபர்மசூதி மூன்று பகுதிகளாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது என்றும் சொன்னார். இதை நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்து கூறியது, இதுவே அவரது அறியாமையை விளக்குகிறது என்று. இது மிகவும் சங்கடத்திற்குரிய விஷயமாகிவிட்டது.

சுஷில் ஸ்ரீவத்ஸவா என்பவர் அலகாபாத் பல்கலைக்கழத்தில் B.A. வரலாறு, அரசியல் சாஸ்திரம் பயின்றவர். 11வருடங்களுக்குப்பின் முனைவராக பட்டம் பெற்றார்,

முதன்மந்திரி  முலாயம்சிங் காலத்தில். மற்றவை உங்கள் கற்பனைத்திறனுக்கு. அவர் தான் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மசூதி கோயிலை இடித்தபின் கட்டியதறகான ஆதாரம் ஏதும் இல்லை எனறார். அவருக்கு பெர்ஷியன் எழுதப்படிக்கத்தெரியாது. அராபிய மொழியும் தெரியாது. சம்ஸ்கிருத மொழியில் மிக்க தேர்ச்சி இல்லை. எனது மாமனார் பெர்ஷிய மொழியில் இருந்ததைப்படித்து சொன்னதன்பேரில் நான் புத்தகம் எழுதினேன்.குறிப்பிட்ட புத்தகங்கள் ஒன்றும் நான் படிக்கவில்லை. பாபர்மசூதியில் இருந்த கல்வெட்டுக்கள் பெர்ஷியன், அராபிய மொழிகளில் இருந்திருக்கக்கூடும். நான் கல்வெட்டியல் பற்றியும் படிக்கவில்லை என்றார். ஸூரஜ்பான் என்பவர் M.A. சம்ஸ்கிருதம் படித்தவர். வெகுகாலமாகப் பழக்கமில்லாததால் என்னால் அந்த மொழியில் பேசியலாது. படிக்கவும் சற்று சிரமமே, புரிவதும் கடினமாகவே உள்ளது.எனக்கு ஞாபகம் இருப்பதன்படி, பண்டைய வரலாறு, இடைக்கால இந்தியா, பகுதிகள்எனது கல்விப்பாடப்பகுதியில் இல்லை என்றார். இத்தகையோர் நீதிமன்றத்திற்குச் சென்று அறிக்கை சமர்ப்பித்தனர். நான் துளஸிதாசரின் ராமாயணம் படிக்கவில்லை. சிந்துநதிப்பள்ளத்தாக்கு நாகரிகம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியாது. நான்கல்வெட்டியல் நிபுணர் அல்ல. நாணய ஆய்வுத்துறை, கட்டிடக்கலை, சிற்பசாஸ்திரம், நிலவியல், இவை ஒன்றும் எனக்குத் தெரியாது. இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.

D.மண்டல் என்பவர், மிகவும் சுறுசுறுப்பானவர், கூறுகிறார், நான் அயோத்தி சென்றதில்லை. பாபர் 16ம் நூற்றாண்டில் ஆண்ட முகலாயமன்னர் என்பதைத்தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. கம்யூனிஸ்ட் கட்சியின் சிகப்பு அட்டை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மதநம்பிக்கை இல்லை. படித்துப்பட்டமோ, டிப்ளமாவோ வாங்கவில்லை. தொல்பொருளியலைப் பற்றிய கேள்வி அறிவே எனக்குத் தெரிந்தது.

இதிலிருந்து தெரிவதென்னவென்றால் இந்தமாதிரி நபர்கள் வல்லுனர்களாக இல்லாமல்  உண்மைக்குப்புறம்பாக தங்களது கருத்தைத்திணிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அவர்களது குறிக்கோள் ராமஜன்மபூமி இயக்கத்திற்கு எதிராக, பரிகசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது மட்டுமே. பாபர்மசூதி குழுவிற்கு சாதகமாக ஏதேனும் செய்து ஜெயிக்கவைக்கவேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய முன்வந்தனர்.

You may also like...

1 Response

  1. Colrama சொல்கிறார்:

    Good translation. Looking forward to more on such topics to counter the propoganda and lies spread by communists and communalists.

Leave a Reply

%d bloggers like this: