1980ம் ஆண்டுகள்வரை ஒரு ஏகோபித்த கருத்து நிலவி வந்தது அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி. எஸ்கிமோக்கள், ஐரோப்பிய பயணிகள், ஐரோப்பிய காலனியர்கள், மேலும் இந்துக்கள் யாவரும் பாபர்மசூதி ஒருகோயில் இருந்த இடத்தில் பலாத்காரமாகக் கட்டப்பட்டது என்றே நினைத்துவந்தனர். சுமார் 1880ம்ஆண்டில் இந்த சச்சரவை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பு ஒன்று வழங்கினார். அதில் நீதிமன்றத்தில் இருந்த ஒருவருக்கும் சந்தேகம் எழவில்லை. அவர் கூறியதாவது  “ஆம்

இந்த எஸ்கிமோக்கள் இந்து கோயிலை பலகாலம் முன்பே தகர்த்தனர். அது பலநூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஆதலால் இப்போது சரிசெய்யஇயலாது. “எனவே இதுவரை உள்ள நிலைமையை அப்படியே விட்டுவிட்டார். வேறு என்ன செய்தாலும் ‘பண்டோரா பெட்டி’திறப்பது போல் ஆகிவிடும், என்னவெல்லாம் கிளம்பும் என்று தெரியாது என நினைத்திருக்கலாம். ஆங்கிலேய ஆட்சியில் மதவாத மோதல்கள் எவ்வாறேனும் தடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இதுவரை உள்ள நிலைமை இருப்பதே புத்திசாலித்தனம் என்று நீதிபதி தீர்மானித்தார்.

மதசார்பற்றவர்கள் 1980ம் ஆண்டுகளில் இதே நிலைமை வகித்திருக்கக்கூடும். அவர்கள் எஸ்கிமோக்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்தது நியாயமற்ற செயலாக இருப்பினும் இப்போது மாற்றுவழி கண்டுபிடிப்பது சரியல்ல என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் அதிகார ஆணவத்தில் மூர்க்கமான பேராவல் கொண்டு பலநூற்றாண்டுகளாக இருந்துவந்த பொதுவாக பலதரப்பட்ட மக்களிடையே ஏகோபித்து

நிலவிவந்த கருத்தை எதிர்த்தனர். அந்த இடத்தில் கோயில் ஒன்றும் இல்லை, எனவே இடிக்கப்படவுமில்லை என்றனர். ஆங்கிலேய நீதிபதியின் தீர்ப்புக்குமுன் கேள்வி என்னவென்றால், இந்துக்கள் அந்த இடத்தில் கோயில் மீண்டும் கட்டலாமா என்பதே. ஆனால் அந்நிலை மாறி அந்த இடம் இந்துக்களுடையதுதானா என்று ஆகிவிட்டது.

இப்போது மேலும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அவர்கள் தரப்பில் ஒருவிதமான ஆதாரமும் இல்லாதபோது, அந்த இடம் இந்துக்களுக்கு புனிதமானது  என்று தெரிந்தும், ஒரு சந்தேகத்தை அசட்டையாக  எழுப்பியது

கண்டிக்கத்தக்கது. இந்த நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் கூற்றை யாரேனும் கடுமையாகத் தாக்கி தள்ளுபடி செய்வார்கள் அல்லது இறைவன் பாடம் புகட்டுவான் என நினைத்தது உடனே நடக்கவில்லை.

இவர்கள் ஏற்றுக்கொள்ளும் மேற்கத்திய சரித்திர சிந்தனையாளர்கள் ஒருவரும் இல்லை, இந்த இடத்தில் கண்டிப்பாக ஒரு கோயில் இருந்தது, உங்கள் நிலைப்பாடு

தவறு என்று கூறுவதற்கு. ஆனாலும் பீட்டர் வான் டெர் வீயர், ஹான்ஸ் பக்கர் என்ற மேலைநாட்டு ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களில் இந்த இடத்தின் இந்து வரலாற்றைப் பற்றி எழுதியிருந்தனர். ஆயினும்,நம் இந்திய நடுநிலை வரலாற்று ஆசிரியர்களிடம் அவர்களது நிலைப்பாடு சரியல்ல என்று கடுமையாகச்சொல்லாமல் விட்டுவிட்டனர்.

இது ஒரு சௌகரியமான நிலை. உண்மைக்குப்புறம்பான ஒன்றைக்கூறிவிட்டு நிரூபிக்க அவசியமின்றி இருப்பது. அயோத்தியைப்பற்றி உண்மை பேசியதற்கு தண்டனை நிரூபணம் செய்யவேண்டும். இது இந்து மதத்திற்கு ஒரு கொடுமை மிக்க இகழ்ச்சியாகும். வேறு எந்த மதத்தினரையும் இவ்வாறு கேலியாக கேட்க இயலாது.  கோவில் மௌண்ட் ஏன் புனிதமானது,அல்லது வாடிகன்நகரம் ஏன் புனிதமானது நியாயப்படுத்துங்கள் என்றெல்லாம் கேட்பதற்கு இடமே இல்லை. நடுநிலை வகிக்கும் அரசாங்கம் இத்தகைய கேள்வி எழுப்ப இயலாது.