2002ஆம் ஆண்டில்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குறிய இடத்தைத் தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. இது முதல் தோண்டுதல் அல்ல, இதற்கு முன் ஒருபகுதி தோண்டப்பட்டது. 1970ம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் BB லால் மூலமுதலான கோயிலின் அடித்தளங்களையும், அவற்றின் கூறுகளையும் கண்டுபிடித்திருந்தார். எனவே மீண்டும் தோண்டும்போது என்ன தென்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆயினும் இம்முறை மிகவும் முழுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி தோண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.

நிச்சியமாக எதிர்பார்த்தபடி கோயிலின் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உண்மையில் தேவையான ஆதாரம் யாவும் கோயில்  இருந்ததற்கான அடையாளமாகக் கிடைத்தன. இப்போது அதை நிராகரிக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது அதிகாரபூர்வமான விஷயம். நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் தஙகள் விவாதத்தை முழுவதுமாக இழந்தனர். அவர்கள் முறியடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் விசாரணையின்போது  அவர்களை சாட்சியாளர்களாக அழைத்தது. சாட்சிக்கூண்டில் முற்றும் தகர்க்கப்பட்டநிலையில் அவர்கள் இவ்வாறெல்லாம் சொல்லத்தொடங்கினர், “நான் தொல்பொருள் ஆய்வாளர் அல்ல, நான் அயோத்திக்குச் சென்றதில்லை,,இது எனது துறையல்ல”. என்று ஒருவர்பின் ஒருவராக. நீங்கள் இவற்றை மீனாக்ஷிஜெயின்புத்தகத்தில் விவரமாகக் காணலாம். ஆனால் ஊடகங்கள் இந்த நடுநிலை வரலாற்று ஆசிரியர்களை சங்கடமான தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றின. இந்த வழக்கைப்பற்றி முழுவதும் படிக்கவில்லையெனில்  இந்த விஷயங்கள் உங்களுக்குத்தெரிய வாய்ப்பில்லை.

அதேவிதமாக மேற்கத்திய அறிஞர்கள் ஒன்றுமே நடக்காதமாதிரி இருந்துவிட்டனர். வழக்கை முற்றிலும் பின்பற்றவில்லை என்றால் சர்ச்சைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்டபோது இருந்திருந்தால், இது தீவிர இந்துக்கள் மேற்கொண்ட நாசவேலை, கோயில் இருந்தது என்பது  ஒரு கட்டுக்கதை என்றெல்லாம் அந்த அறிஞர்கள் கூறினார்கள். மற்றவர்களும் அவ்வாறே நினைத்தனர். நான் ஒருவன் தனிமரமாக நின்றேன். கலிபோர்னியாவில் பிரபலமான பேராசிரியர்கள் என்னை மிகவும் கண்டித்தனர். அது ஒருவிதத்தில் சரிதான். எனது கல்வித்துறை பொறுப்பை இழக்க நேர்ந்தது. எவ்வாறாயினும் எனது கொள்கைநிலைப்பாடு நிரூபணம் ஆனபின் அவர்கள் வேறுபக்கம் பார்க்கத்தொடங்கினர். அயோத்தி விவகாரத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டனர்.