ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2019
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை அவமதித்தல் > தெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்

தெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்

ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரிக்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்றில், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில்  சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ  காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும் காரணமாயிற்று. வெற்றிகொண்ட அரசன் தனது நாட்டில் கோயில்களில் அந்த சிலைகளை வைப்பதும், தோல்வியுற்ற அரசன்  வேறு சிலைகளை வைத்து வழிபாட்டைத் தொடர்வதும்  வழக்கமாயிற்று.

ஆனால் இது எஸ்கிமோக்களின் உருவச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அதன் குறிக்கோள் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களை இழிவுபடுத்தி கடைசியில் அந்த மதத்தை ஒடுக்குவதுதான். தெய்வச்சிலைகளை வேறொரு இடத்திற்கு எடுத்துச்சென்று வழிபாட்டைத் தொடர்வதற்காக அல்ல. கோயில்கத்தகர்த்து அழிப்பதற்கும் அதே காரணம். எனக்குத் தெரிந்தவரை இதுவே அவர்கள் லட்சியம். உங்களுக்குத் தெரியும் ஸோமநாதர் கோயிலை எஸ்கிமோக்கள் அழித்தனர் என்று. சிவலிங்கத்தை எடுத்துச்சென்று வேறு எஸ்கிமோ இடத்தில் வழிபடுகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா. அவர்கள் கொள்கையின்படி இது சாத்தியமல்ல. உண்மையில் தெய்வச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் கொள்கையை மூடிமறைக்க முயற்ச்சிகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் அயோத்தி சச்சரவு எழுந்தவுடன் மதசார்பற்ற அறிஞர்களும்கூட முற்றிலும் மறுக்கும் அளவுக்குச் செல்ல முற்படவில்லை.

எனவே இப்போதெல்லாம் தெய்வச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கை வழிமுறைகளை மிகவும் சாதாரணமாகவே குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இந்தியஅரசர்களே அதற்கு வழிகாட்டினார்கள் என்றும் கூறுகின்றனர். ரிச்சர்ட்ஈடன் கூட ஒப்புக்கொள்கிறார்.. முகம்மத் கோரி வாரனாசி படையெடுப்பில் வெற்றிகண்டபோது 1194ஆம் ஆண்டில் அவனது படைவீரர்கள் ஈடுபட்ட தீவிர உருவச்சிலை, கோயில்கள் அழிவுகளில் சுமார் ஆயிரம் கோயில்கள் அடங்கும். இது ஒரு நடவடிக்கையில் ஏற்பட்ட அழிவு. மதசார்பற்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் சுமார் 80முறை இம்மாதிரி ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கோயில் அழிவுகள் ஏற்பட்டன என்று கூறுகின்றனர். அப்படியானால் 80 நடவடிக்கைகளில் பல ஆயிரக்கணக்கான கோயில்களும் சிலைகளும் அழிக்கப்பட்டதாகவே ஆகும். ஏனெனில் ஒரு நடவடிக்கையில் மட்டும் குறைந்தபட்சமாக ஆயிரம் கோயில்கள்,சிலைகள் நாசமாக்கப்பட்டன என்று தெரியவருகிறது. கில்ஜித்பலுசிஸ்தான் ஆகிய குறைந்த மக்கள்தொகை உள்ள நாடுகளில் சுமார் 10 ஆண்டு காலகட்டத்தில் 80 கோயில்கள்அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், விசாலமான பாரததேசத்தில் ஓராயிரம் ஆண்டுகளில் தெய்வச்சிலைகள், கோயில்கள் எதிர்ப்புக்கொள்கையின் அடிப்படையில், நாசவேலைகள் ஏராளமாகவே நடந்திருக்கவேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: