வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2020
Home > வரலாறு > கடற்பகுதி வரலாறு > மாறிவரும் நிலத்தோற்றங்களும் வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகளும்

மாறிவரும் நிலத்தோற்றங்களும் வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகளும்

இந்துமகா சமுத்திரத்தின் நிலத்தோற்றத்தைப்பற்றி முதலில் தெரியவேண்டியது அது ஜீவனுள்ளது எனவும் பட்டுப்போனது அல்ல எனவும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அந்த கடற்கரை ஓர எல்லைப்பகுதிகள் தொடர்ந்து காலப்போக்கில் மாற்றம் கண்டுவந்தன. புவியமைப்பு தோற்றவியல் காரணமாகவும், கடலோர ஏற்ற இறக்க வரைகள் காரணமாகவும். இதையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம். நான்சொல்லப்போகும் விஷயத்தில் இவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு. உலகின் இந்தப் பகுதிக்கு நாம் வருவோமாயின் கடந்த பனிப்பாறை காலத்தின் இறுதிகட்டத்தில், 8அல்லது9 ஆயிரம் ஆண்டுகள் முன் நீர்வட்டவிளிம்பு முடிவுற்றது. ஆயினும் இதற்கும் முன்பே சுமார் 14ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வாகும்.

நாம் காணும் கடற்கரைஓர எல்லைப்பகுதி வெகுவாக வேறுவிதமாகவே இருந்திருக்கவேண்டும். பெரும்பாலான நீர்நிலைகள் இந்த பிரம்மாண்டமான பனிப்பாறைகளின்கீ்ழ் புதைந்து கிடந்து பெரும்பகுதி வடக்கு பூகோளத்தை மறைத்திருக்க வேண்டும். அதுவுமில்லாமல் தென்பூகோளத்திலும் சில பகுதிகளை மறைத்து, நீர்நிலை இப்போது உள்ள மட்டத்திலிருந்து சுமார் 100-150 மீட்டர் கீழே இருந்திருக்கவேண்டும். உதாரணத்திற்கு பெர்ஷியன்வளைகுடா ஒருசமவெளியாகவும் இப்போதைய குஜராத் மிகவும் உள்ளடங்கிய நிலப்பகுதியாகவும்,கடற்கரை ஒரப்பகுதி தெற்கே நேர்கோட்டில்செல்வதாகவும் அமைந்திருக்கக்கூடும்.

இலங்கைப்பகுதி இந்தியாவின் பெரும்நிலப்பகுதியின் ஒருபாகமாகவும், பல்வேறு தென்கிழக்கு ஆசியத்தீவுகளும் ஒன்றாக ஒரு விசாலமான நிலப்பகுதியாக இருந்தது எனலாம். இப்போது அதை சுண்டாலேண்ட் என்று கூறுகிறோம். ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தென்கிழக்கு ஆசியாவின் பலபகுதிகளில் திரிந்து ஒரு தாவலில் ஆஸ்திரேலியாவை அடைந்தனர். அவ்வாறு நிலத்தோற்றத்தை ஊகிக்கமுடிகிறது.

சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன், உருகும் பனிப்பாறைகளும், பனிஉரைகளும் பல்வேறு கடற்கரைஓர எல்லைப்பகுதிகளில் பாய்ந்து நிலப்பரப்புகளை நிறப்பிவிட்டன. பெர்ஷியன் வளைகுடாவில் வெள்ளப்பெருக்கு, இந்திய வளைகுடா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, இவற்றுடன் இலங்கை தீவாகி, இந்தியாவின் நிலப்பகுதியிலிருந்து பிரிந்தது. இவை யாவும் நம் நினைவிலிருந்து மாறாத பேரழிவு நிகழ்ச்சியாக நிலைத்திருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகள் உலகின் பல்வேறு சமுதாயங்களிலும் உருவாகின. ‘நோவா’வின் கதை, சுமேரியாவில் ‘கில்காமேஷ்’கதை, ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் ஒரு வெள்ளப்பெருக்கு கதை, தென்கிழக்கு ஆசியாவில் ‘லாவோஸ்’ களின் கதை, நம் இந்தியாவில் வெள்ளப்பெருக்கில் பிரசித்திபெற்ற ‘மனு’வின் கதை,மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமான ‘மத்ஸ்ய’அவதாரம் இவையும் இடம்பெறும்.

இந்த வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகளிலிருந்து சரியாக சரித்திர நிகழ்வுகளைக் கூற முடியாவிட்டாலும், அவை அந்த காலகட்டத்தில் நம் ஆவலைத்தூண்டி, அதன் ஞாபகார்த்தமாகவேனும் இருந்துவருகின்றன.ஆனால் கண்டிப்பாக சுமார் கி.மு. 5000 ஆண்டுஅளவில் இந்த கடற்கரை ஓர எல்லைப்பகுதிகள் ஒருமாதிரி இப்போது இருக்கும் நிலையில் மாறியிருக்கக்கூடும். சிறிதளவு மாற்றங்கள் பின்னர் தோன்றியிருக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: