வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2020
Home > வரலாறு > கடற்பகுதி வரலாறு > சரஸ்வதி நதியும் குஜராத் துறைமுகங்களும்

சரஸ்வதி நதியும் குஜராத் துறைமுகங்களும்

 

நான் குஜராத்திலிருந்து தொடங்குகிறேன் ஏனெனில் இந்த விவரணம் ஹாரப்பாநாகரிகம் காலத்திய குஜராத் கடற்கரை ஒரப்பகுதியில் தொடங்குகிறது. அது தற்சமய நிலையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது. பொதுவாக கடல்மட்டங்கள் நேர்க்கோடுகளில் உய்வதும் தாழ்வதுமாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் அந்த பெரிய உயர்தல் தாழ்தலுக்கு இடையே பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

ஹாரப்பா காலகட்டத்தில் கடல்மட்டம் தற்போதுள்ள நிலையைவிட உயரமாக இருந்தது. சௌராஷ்ட்ரம் தீபகற்பத்திற்கு ‘கம்பா’வளைகுடா வழியாக கப்பல் செல்லத்தக்க நீர்வழிமூலம் ‘கட்ச் பாலை’ செல்ல வழி இருந்தது. உண்மையில் கட்ச்பாலைத்தீவிற்குச்செல்ல கப்பல்வழியும் இருந்தது.  அது மட்டுமல்ல இரண்டு நதிகள் 19ம்நூற்றாண்டு வரை பாய்ந்துகொண்டிருந்தன. ‘இண்டஸ் நதி’ ஒன்று, இரண்டாவது ‘சரஸ்வதி ‘என்ற மிகப்பெரிய நதி. செயற்கைக்கோள்களின் உதவியோடு இப்போதும் இந்த இரண்டு நதிகள் ஓடிய பாதையை ஊகிக்கமுடிகிறது. வானிலை சீதோஷ்ணநிலை மிகவும் வேறாகி இருந்தது, குளிர்ச்சி இப்போதைவிட அதிகமாக இருந்தது.

இப்போதைய பலுசிஸ்தான் அங்கும் இங்கும் மரங்கள் மிகுந்து பெரிய பசும்புல்தரை போல் காணப்பட்டது. பெரும்பாலான மனிதகுடியேற்றங்கள் பலுசிஸ்தான் வழியாகவே தோன்றின. இது ஒரு முக்கிய தகவல், ஏனெனில் இப்போது அது ஒரு கடந்துசெல்ல முடியாத பாலைவனமாகத் தோன்றும் நிலையில், மக்கள் போக்குவரத்து இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நாம் நினைக்கலாம்.  நவீனகாலத்திற்கு முன்புவரை இரானிலிருந்து இந்தியா செல்வதற்கு ஆப்கானிஸ்தான் வழியாகவே வரவேண்டும். ஆனால் பண்டைய வரலாற்றின்படி அதுசரியல்ல.

எது எப்படியாயினும் சுமார் கி.மு 3000 அல்லது 4000 ஆண்டுகளில் இத்தகைய கடற்கரைஓரப்பகுதி இருந்தது. அதில் மெதுவாக நகரங்கள் தோன்றத்தொடங்கின.  அவற்றில் ஒரு பெரியநகரம் ‘தோலாவீரா’. அது கட்ச் வளைகுடாவிலிருந்து உள்ளே நிலப்பரப்பில் இருந்தது. கட்ச் ஒரு உப்புசமவெளியாக இப்போது உள்ளது. மழைகாலத்தில் சதுப்புநிலமாக மாறுகிறது. ‘தோலாவீரா’ ஒரு குன்றுப்பிரதேசமாக இந்த உப்புசமவெளியில் இருந்தது. ஹாரப்பா காலத்தில் ஒரு தீவாக இருந்திருக்கவேண்டும். பிறகு ஒரு முக்கிய துறைமுகமாக மாறியது. மற்றொரு துறைமுகம் ‘லோதால்’, பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கலாம், வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து. உலர்ந்த வட்டுகள் உடைய துறைமுகம். இந்தவரைபடம் ‘லோதாலிலிருந்து’ தோலாவீராவிற்கு நீர்நிலை மார்க்கமாகப் படகுகளில் செல்லக்கூடிய வழி இருந்திருப்பதைக் காட்டுகிறது. அதேபோல் மறுபக்கம் அதாவது வடக்குப் பகுதியிலிருந்து இப்போதிருக்கும் ‘துவாரகா’ பெட்துவாரகா என்ற தீவாக இருந்தது. ஹாரப்பாகால கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாம் ஊகிப்பது என்னவென்றால் ஒரு துறைமுகங்களின் பிணையம் குஜராத்தில் இருந்ததாகவும் கடல்பயணம் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கவேண்டும் எனவும், தெற்கிலிருந்து  லோதால் மூலம் அங்கே சுங்கச்சாவடி வழியாக தோலாவீரா சென்று வாணிபம் செய்தபின்னர் அங்கிருந்து  ‘இண்டஸ்’ ‘சரஸ்வதி’ நதிகள்வழியே வடக்கே சென்றிருக்கவேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: