திங்கட்கிழமை, மார்ச் 30, 2020
Home > வரலாறு > கடற்பகுதி வரலாறு > ஓமான், ஜிராப்ட் தேசங்களில் ஹாரப்பா வாணிபம்

ஓமான், ஜிராப்ட் தேசங்களில் ஹாரப்பா வாணிபம்

யாருடன் வாணிபம் செய்தனர் என்ற கேள்வி எழுகிறது. சரியான சில ஆதாரங்கள் பல்வேறு முத்திரைகள் ஹாரப்பா கால பொருள்கள் மூலம் இந்த இடங்களிலிருந்து கிடைத்துள்ளன. ஓமான் ஒருதேசம், இரான் ஒரு தேசம், மேலும் பாஹ்ரேன், இந்த இடங்களில் பல ஹாரப்பா கலைப்பொருள்கள் பரவலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாஹ்ரேனின் உள்நாட்டுப்பகுதியிலும் இரானின் நேர்கி்ழக்கே ஜிராப்ட் என்ற இடத்தில் கலாச்சாரம் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மக்களின் பெயர் தெரியவில்லை. இரானின் கிழக்கு கோடியிலிருந்தது. பலுசிஸ்தானில் கண்டெடுக்கப்ட்ட ஹாரப்பா புதைபாடுகளுக்கு அருகில் இருக்கலாம். கலாச்சாரத்தொடர்புகள் இருந்திருக்கக்கூடும், அல்லது இந்திய இரான் தொடர்பமாக இருந்து பின்னர், மெஸபொடேமியா வரை சென்று, சுமேரியாவுக்கும் குடியிருப்புகள் சென்றிருக்கலாம். அங்கெல்லாம் பலமுத்திரைகளும் ஹாரப்பா கலைப்பொருள்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

உண்மையில் அங்கே ‘மேலுஹா’ என்ற ஜாதிமக்களின் ஆவணங்கள்பல கிடைத்துள்ளன. சுமேரியா மக்கள் அவர்களுடன் வாணிபம் செய்ததாகத் தெரியவருகிறது. அவர்கள் இந்தியர்களாகவும் இருக்கலாம். ஹாரப்பா குடியிருப்புகள் அங்கிருந்ததாகவும், வாணிபம்செய்ததற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. எனவே மத்தியகிழக்குஆசியா பகுதியில் இந்தியர்கள் வாணிபம் ஆச்சரியமான விஷயமல்ல.புதியதுமல்ல. நாம் வெகுகாலமாகவே அங்குசென்று குடியிருப்புகளும் தோன்றின. இவ்வாறு வாணிப குடியேற்ற மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் திடீர்திருப்புமுனையாக ஒரு கேடு நேர்ந்தது.

Leave a Reply

%d bloggers like this: