கம்போடியா, வியட்நாம் தேசங்களின் கேமெர்,சார்மே கலாச்சாரத்தின் இந்தியத்தொடர்பு

கம்போடியா, வியட்நாம் தேசங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் மூலம் ஒரு கதை தெரியவருகிறது. இதற்குப் பின்னரே  அங்கோர், சார்மே கலாச்சாரங்கள் தோன்றின. இந்தக்கதை பின்வருமாறு. கௌண்டின்யன் என்கிற பிராமணன் தற்போதைய தெற்குவியட்நாம், தெற்குகம்போடியா பகுதிகளில் மேகாங் என்ற இடம் வழியாக கடற்பயணம் மேற்கொண்டான். கப்பலில் அவனுடன் பல வணிகர்கள் இருந்தனர். அப்போது கடல்கொள்ளையர்கள் தாக்கினர். அவன் மிகவும் வீரத்தன்மையுடன் எதிர்த்து அவர்களை விரட்டிவிட்டான். இந்த சண்டையில் கப்பலில் கசிவு ஏற்பட்டது. அதை மராமத்து செய்ய அவனும் கப்பல்குழுவும் கரையில் ஒதுங்க நேர்ந்தது. அப்போது அங்கிருந்த உள்ளூர்வாசிகள், பாம்பாட்டி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், கௌண்டின்யனின் குழுவைத்தாக்கத் தொடங்கினர். மிக்க தைரியசாலியான அவன் மீண்டும் தன் வாளைச் சுழற்றி அவர்களை வீழ்த்தத்தொடங்கினான். அதை நேரில் கண்ட அந்த இனத்து இளவரசி, சந்திரனை ஒத்த முகம் படைத்த அவளுக்கு ‘ஸோமா’ என்ற பெயரும் இருந்தது., அவள் கௌண்டின்யன் மேல் காதல் கொண்டாள். அவள் விருப்பப்படியேகௌண்டின்யன் அவளை மணந்து கொண்டு ஒரு புதிய வம்சம் உருவாகக் காரணம்  ஆனான். அதன்பின் சார்மே பாரம்பரியம் தென்வியட்நாமில் தொடங்கப்பெற்றது.

இந்த கலாச்சாரங்களின் ஓர் அற்புத விஷயம் என்னவெனில், எல்லா வம்சஙகளும் தாய்வழி வந்தவை. ஆணவர்க்கம் அனுசரிக்கப்படவில்லை. அவை யாவும் தாய்வழி வம்சங்களாகவே தொடர்ந்து கொண்டிருந்தன.. இது நியாயமானதும்கூட ஏனெனில்,  கௌண்டின்யன் ‘ஸோமா’வை மணந்த காரணத்தினால் மட்டுமே அரசபரம்பரையைச் சார்ந்தவனாக முடிந்தது. இது பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் நினைவில் நின்று கேமெர், சார்மே பரம்பரைகளும் தாய்வழி வர்க்கமாகவே நீடித்தன. இந்தக்கதை எனவே தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது தாய்வழிப்பரம்பரை மற்றும் நாக உருவச்சிலைகளின் வெளிப்பாடும்கூட.

வடக்கு மலேசியாவில் இதற்கென ஒரு விசாலமான தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புஜங் பள்ளத்தாக்கில் கடாரம் என்ற தேசம் ஒன்று உள்ளது. புஜங் என்பதன் பொருள் நாகம் அல்லது பாம்பு. வெகுகாலத்திற்குப் பின்னர் சோழர்கள் ஆண்டகாலத்தில் தென்கிழக்கு ஆசிய தேசங்களுடன் வாணிபம் அதிகரிக்கத் துறைமுகங்கள் உண்டாக்கினர். அவற்றுள் ஒன்று நாகப்பட்டினம் என்று பெயரிட்டனர்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: