செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021
Home > உங்களுக்குத் தெரியுமா > இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “The Periplus of the ErethraeanSea” என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது.

எங்கிருந்து புறப்பட்டனர்? இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால் நைல்நதி வழி சிறிது தூரம் சென்று, ஒரு கால்வாய் வழியே சென்று கெய்ரோ வந்தடைவர். இது தற்போதைய சூயஸ் கால்வாய்க்கு அருகே. இன்றைய சூயஸ் கால்வாய் முதல் பதிப்பல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் ஒருகால்வாய் இருந்தது. ஆனால் மிகவும் மணற்பாங்கான இடமாக இருந்ததால், சுத்தமாக வைத்திருக்க மிகவும் பாடுபடவேண்டியிருந்தது. பலமுறை முயற்சி செய்து நடவவடிக்கைகள் எடிக்ககப்பட்டன.

மற்றொரு வழியில் ஒரு நீர்வீழ்ச்சி வரை சென்று ‘பெர்ணிகா’ என்ற இடம்வழியாக நைல்நதியிலிருந்து ஒட்டகம் மூலம் பயணம் செய்து கடற்கரையை அடையலாம். வேறொரு வழியில் லெபனானிலிருந்து தற்போதைய இஸ்ரேல் வழியாக பாலைவனம் வழியாக ‘பெட்ரா’வை அடைவர். பெட்ரா செழிப்படைந்ததற்கான காரணம் இந்தவித பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் அதிகமாக இருந்ததே. அங்கிருந்து ‘அக்காபா’ செல்வர். எந்தவழி வந்தாலும் கடைசியில் ‘செங்கடல்’வந்து சேரவேண்டும் மிகவும் குறுகிய கடலாதலால் அதன் இருபுறமும் வாணிபம் செய்தல் எளிதாயிற்று. உண்மையில் ‘எரித்ரேனியன்’என்ற கிரேக்க சொல்லிற்கு சிவப்பு என்று பொருள். செங்கடல் என்பதே அது.

செங்கடலுக்குப்பின் அவர்கள் ஏமன் வருவர். அங்கிருந்து ஒரு சிறிய தாவலில் ‘ஸொகாட்ரா’ என்ற தீவிற்கு., ஏன் அந்த தீவுக்கு அப்பெயர்? துவக்கத்தில் த்வீபா சுக்தாரா என்று அழைக்கப்பட்டது. இந்தியர்களும் அராபியர்களும் ஏராளமான வாணிபத்தில் ஈடுபட்ட இடம். இன்றும் அங்கே இந்திய மாலுமிகள் விட்டுச்சென்ற பல்வேறு வரைதல்கள் அங்குள்ள குகைகளில் காணப்படுகின்றன.அங்கிருந்து இந்தியா செல்ல இருவழிகள் இருந்தன. பழையவழியில் வடக்கே சென்று ஏமன் அடைந்து பலுசிஸ்தான் கரைவழியாக வந்து குஜராத் வந்தடைவர். மேலும் தெற்கே செல்வர்.

சுமார் கிபி முதலாம் நூற்றாண்டில் ஒரு புத்திசாலி ‘ஹிபப்பாலஸ்’என்பவன்  இந்த சுற்றுப்பாதையைத் தவிர்த்து, பருவக்காற்றின் உதவியோடு கடல்பயணம் மேற்கொண்டு நேராக கேரளக்கரையை அடையலாம் என கண்டுபிடித்தான். அதன் விளைவாக சீக்கிரமே கேரளத்தில் ஒரு பெரிய துறைமுகம்’முச்சிரி’என்ற இடத்தில் தற்போதைய கொச்சிக்கு சற்றுவடக்கே தோன்றியது. அதனருகே பட்டணம் என்ற கிராமத்தில் ஏராளமான தொல்பொருள் ஆய்வு  கண்டுபிடிப்புகள் அக்காலத்தியவை கிடைத்தன. இந்த வழிகளே வாணிபத்திற்காக ஏற்பட்டவையாகும். இது ரோமாபுரிப் பேரரசுக்கும் முன்பாக,அது ஜனநாயகமாக இருந்த காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டன. இது யூதர்களின் பெரிய கோயில் தகர்க்கப்பட்டதற்கும் முன்னமே. அதனால் ஏராளமான யூதர்களும் இந்த கடற்கரைவழி பூராவும் குடியேறினர்.

அடுத்த கேள்வி என்னென்ன பொருட்கள் பண்டமாற்றுசெய்யப்பட்டன? ‘பெரிப்ளஸ்’கையேட்டின்படி இந்தியர்களின் ஏற்றுமதியில் பருத்தி ஒரு முக்கியமானபங்கு வகித்தது. ஏனெனில் அதிக விலைமதிப்புள்ளதாக இருந்தது. குஜராத்திலிருந்து பருத்தியைத்தவிர இரும்பு எஃகுப்பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இரும்பு இந்தியக்கண்டுபிடிப்பு மட்டுமல்லாமல் தரம் வாய்ந்ததாகவும் கருதப்பட்டது. பல்வேறு இரும்புத்தாதுவகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. கேரளம் முச்சிரி துறைமுகத்திலிருந்து பல நறு மணப் பொருட்கள், முக்கியமாக கருப்பு மிளகு ஏற்றுமதியில் முக்கியபங்கு வகித்தது. இதைத்தவிர தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தோனேஷியர்கள் நறுமணப்பொருட்களை முச்சிரிவரை எடுத்துவந்து இந்தியர்கள் மூலம் ரோமானியர்களுக்கு விற்பனைசெய்தனர். இவ்வாறு ஏற்றுமதி வாணிபம் நடைபெற்றது.

அடுத்தபடி இந்தியர்கள் என்ன இறக்குமதி செய்தார்கள் என பார்ப்போம். இத்தாலிய ஒய்ன்கள்,மதுபானங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதைத்தவிர இறக்குமதியில் ஒருபங்கு அரசர்களின் அந்தப்புரங்களுக்காக அழகிய பெண்கள் இருந்தனர். இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கிய விஷயம் என்னவென்றால்,புராதன கப்பலோட்டம் சார்ந்த வரலாற்றின்படி மூன்றாம்நிலை தேசங்களும் வெளிநாட்டு மதுபானங்கள், வெளிநாட்டு வழித்துணைவர்கள் ஆகியவை கலந்த வாணிபம் செய்துவந்தனர்.

இவ்வளவு வணிகப் பண்டமாற்றங்களினால் பல சிக்கல்கள் ஏற்பட்டன.இந்தியர்கள் வெளிநாட்டு மதுபானங்களும்,பெண்களும் இறக்குமதி செய்தும் முடிவில் வியாபாரம் உபரியாகவே இருந்தது. இதற்குப்பதில் தங்கம் கிடைத்துவந்தது. தங்கம் ஏராளமாக வெளியேறிவிட்டதால் லட்சக்கணக்கில் தங்க நாணயங்கள் கொணர்ந்து குவித்த ரோமானியர்களுக்கு காசோலை அச்சிடுதல் பாதிக்கப்பட்டது. ரோமாபுரியில் சுமார் கிபி 2ஆம்நூற்றாண்டில் பெரிய பொருளாதார நெருக்கடி உருவானது. மந்திராலோசனை சபையில்’ப்ளிமி’ போன்ற வல்லுனர்கள் இந்திய வணிகர்கள்மீது கடின நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினர். பேரரசர் ‘வெஸ்வேஸியன்’ இந்திய வாணிபத்தின்மீது ஒருதடை விதிக்கத் தீர்மானித்தான். பிச்சினை இந்தியர்களையும் யூதர்களையும் சார்ந்தது. அவன் புதிய பல கடத்தல் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து தோல்வியுற்றான்.

எனவே மீண்டும் வாணிபம் தொடங்கிற்று. இந்தியர்களுக்கு ரோமானியர்கள் தரும் தங்கக்காசுகளில் தங்கத்தின் சேற்கையைக் குறைக்கத் தொடங்கினர். காசோலையின் மதிப்பு தாழ்த்தப்பட்டது. ஆனால் இந்தியர்கள் இந்தக்காசுகளை ஏற்றுக்கொண்டனர். தொல்பொருள் ஆய்வுக்கூடங்களில் இந்திய கடற்கரைஓரம் உள்ள இடங்களில் ஏராளமான நாணயங்கள் கிடைக்கப்பெறும். அவற்றின் காலத்திற்குத்தக்கவாறு தங்கத்தின் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தது தெளிவாகிறது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: