இந்திய வரலாறு என்பது கண்டநிலப்பரப்பு மட்டுமல்ல கடல்சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது

இன்றைய எனது பேச்சின் மையக்கருத்து கடல்சார்ந்த பகுதிகளின் இந்திய வரலாறு. இது ஒரு சுவாரசியமான விஷயம், ஏனெனில் இந்தியா உலகளவில் கடல்சார்ந்த பகுதிகளின் வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்றாகத்திகழ்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் வரலாற்றுப் புத்தகங்களில் பெரும்பாலும் கண்டநிலப்பரப்பு சம்பந்தமாகவே படித்து வந்துள்ளோம். எனவே ஒருவர் இந்தத்துறையில் வல்லுனராக இல்லையேல் இந்தியவரலாறு முக்கியமாக அந்த காலத்தில் பாடலிபுரத்திலிருந்து இன்றைய டில்லி வரை ஆண்டுவந்த ராஜபரம்பரைகளைப் பற்றியது எனநினைத்தால் தவறில்லை.

நான் இங்கு பேசப்போகும் வரலாறு வேறுவிதமான சுவைமணத்துடன் கூடியதாக, வெறும் உணரச்சிபூர்வமான கருத்தியல் ஆய்வாக மட்டும் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில் அது இன்று நாம் உலகத்தைப்பார்க்கும் கண்ணோட்டத்தை மெய்யாகவே பாதிக்கவல்லது. உதாரணத்திற்கு இன்று நாம் டில்லியை மையமாகக்கொண்டு அண்டை மாநிலங்களாகக் கருதுவது சீனாவும்,பாகிஸ்தானும். இது கண்ட, உபகண்ட நிலப்பரப்பின் வரலாற்றுக் கண்ணோட்டம். ஆனால் கடல்சார்ந்த கண்ணோட்டத்தில் உலகஅளவில் நமது அண்டை மாநிலங்கள் இந்தோனேஷியா ஒருபக்கம், ஓமான் மறு பக்கம். நான் இலங்கையையும், மால்தீவுகளையும் கணக்கில்கொள்ளாமல், மேலும் வியட்நாம் தேசம்வரை உள்ளடக்கிய சூழ்நிலை மண்டலத்தை இந்த வரலாற்றுக் குறிப்பில் காணலாம். இது மிகவும் சுவையான மாறுபட்ட கண்ணோட்டம்.

எனது பேச்சை ஓரங்க நெடியுரையாக இல்லாமல், சுருக்கமாகத் தேர்ந்தெடுத்து, இந்த விவரிப்பைச் சுவைபட கோர்வையாகச் சொல்ல விழைகிறேன். மேலும் நான் கூறப்போகும் தகவல்கள் பல எனது வெளிவரப்போகும் புத்தகத்தில் காணப்படும். இந்தவருட முடிவில் வரப்போகும் புத்தகத்தின் பெயர் ‘ஒரு சுருக்கமான இந்தியாவின்பூகோள வரலாறு’ Brief  History of Indian Geography’. தீர்மானமாக முடிவாகவில்லை, ஆனால் அதில் இந்திய பூகோளத்தின் சரித்திரம் அடங்கும்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: