இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தறபோதைய ஒரிஸ்ஸா, மேற்கு வங்கப்பகுதிகளில் ஓர் திடீர் எழுச்சியாக கடல் சார்ந்த வாணிபமும் செயல்பாடுகளும் நடக்கத்தொடங்கின. கங்கைநதியின் மேற்குக்கோடியான வடிகால், இப்போது ஹூக்ளி எனப்படும் இடத்திலிருந்து கீழே தெற்கில் சில்லிகாஏரி வரை, இந்த மாகாணத்தில்  ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெகுசமீப காலத்தில்,சிலவாரங்களுக்கு முன்பு என்றே கூறலாம், புவனேஸ்வர் நகருக்கு சற்று வெளியே,  சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய  சிற்றூர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தகிழக்கு கடற்கரை ஓரம் பல்வேறு  சிறு துறைமுகங்கள் இருந்தன. ஒடியாக்கள் நீண்ட கடல்பயணங்களில் பங்கேற்கத்தொடங்கினர்.

முதலில் மெதுவாக கரையோரமாக ஒடியா மாலுமிகளும் வணிகர்களும் தெற்கேசெல்லத் தொடங்கினர், பின்னர் சுமார் 5ம் 6ம் நூற்றாண்டுகளில், இலங்கைக்கரை வந்தடைந்தனர். இது ஒரு சுவாரசியமான விஷயம், ஏனெனில், சாதாரணமாக நாம் நினைக்கக்கூடும், இலங்கையில் குடியேற்றங்கள் தமிழர்களோ அல்லது கேரளதேசத்தவரோ அருகிலேயே இருந்ததால் சாத்தியக்கூறு அதிகம் என்று. ஆனால் அவர்கள் வடக்கே சென்றனர். தெற்கே இலங்கைக்கு மிக தூரத்திலிருந்து ஒடியாக்களே முதல் குடியேற்றங்களாக வந்தனர்.

அங்கு ஏற்கனவே இருந்த வெட்டாஸ் என்ற மக்கள் பலரும், மேலும் தெற்கே செல்லாமல் தென்கிழக்கு ஆசியக்கரை நோக்கிச்சென்று இஸ்தாமஸ்க்ரா என்ற இடத்தை அடைவர். இது மலேஷியாவின் ஒரு ஓரப்பகுதி. அங்கிருந்து தாய்லாந்து வழியே ஒரு தாவலில்  சிலர் வியட்நாம் கடற்கரை அடைந்து தெற்குவியட்நாம் கம்போடியா வந்து சேருவர்.

நம்மிடம் இப்போது சில ஆவணங்களும் சரித்திர  ஆதாரங்களும், கல்வெட்டு போன்றவை, புராணக்கதைகள் இவற்றிலிருந்து  நடந்தவற்றை ஊகிக்கமுடிகிறது. இலங்கை சிங்களவர்கள் கதையின் ஆரம்பமாக ஓர் இளவரசன் விஜயன் என்பவன் ஒருசிங்கத்திற்கும் இளவரசிக்கும் வாரிசாக,பேரனாகக் கூறுகின்றனர். அவன் தன்னுடன் சுமார் 400 பேர் பின்தொடர, தன் தந்தையினால் விரட்டியடிக்கப்பட்டு, கடலோரமாகவே இலங்கை வந்தடைகிறான். பெரும்பாலான இன்றைய மக்கள் இந்த விஜயனின் வம்சாவளிகள் என்றும் பற்பல குடியேற்றங்களுக்குப்பின் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதற்கான பல முத்திரைகளும் கலாச்சார பொருட்களும் இன்றும் காப்பாற்றப்பட்டுவருகின்றன.

உதாரணத்திற்கு சிங்கத்தை எடுத்துக்கொள்வோம். இலங்கை நாட்டுக்கொடியில் சிங்கம் உள்ளது, எங்கிருந்து வந்தது? ஒரிஸ்ஸாவிற்குச் சென்றால், புராதனமான இடங்களில் சுற்றினால் நரசிம்மர் கோயில்கள் பல காணக்கிடைக்கும். இது ஆந்திர மாநிலத்திற்கும் பொருந்தும். பூரியிலும் பழைய கோயில் ஜகந்நாதர் கோயில் அல்ல ஆனால் நரசிம்மர் கோயிலே ஆகும். இன்றும் அந்த கோயிலில் ‘போக்’பிரசாதம் முலில் நரசிம்மருக்கு பின்னரே ஜகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

எனவே நரசிம்ம உபாசனை அதாவது, சிங்கத்தை வழிபடுவது அந்த இடங்களின் கலாச்சாரத்தில் ஊறியுள்ளது. இது ஒரு விந்தையான செய்தி, ஏனெனில் அங்கெல்லாம் புலியே மிகவும் பிரசித்தி பெற்றது. வங்கத்திலும் புலியே பிரசித்தம் ஆனாலும் இன்றும் சிங்கத்தை வழிபடுதல் உள்ளது, ஏனெனில் துர்க்காதேவியின் வாகனம் சிங்கம். அப்போதைய சூழ்நிலையில் புலியை விட சிங்கத்தை உயர்வாகக் கருதினார்களோ    சீதோஷ்ணம் காரணமாக சிங்கம் அதிகமாக  இருந்தததோ தெரியவில்லை. ஆனால் உலகின் அப்பகுதியில் உருவச்சிலைகளுள் சிங்கம் ஒரு முக்கிய பங்கு  வகித்தது. அது இன்றுவரை  இலங்கைக்கொடியில்  காணப்பட்டுவருகிறது.