திங்கட்கிழமை, நவம்பர் 11, 2019
Home > இஸ்லாமிய ஆக்ரமிப்பு > இந்தியாவின் பொருளாதாரம் துருக்கியர்களின் ஆக்கிரமிப்புக்குப்பின் ஏன் சிதைந்து போயிற்று

இந்தியாவின் பொருளாதாரம் துருக்கியர்களின் ஆக்கிரமிப்புக்குப்பின் ஏன் சிதைந்து போயிற்று

சுமார் 11 ஆம்நூற்றாண்டில் தொடங்கி 12ம் 13ம் நூற்றாண்டில் நிச்சயமாக திடீரென்று மொத்த கட்டமைப்பும் கலைக்கப்பட்டது. இந்தியாவில் அப்போது துருக்கியர்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு எல்லாம் அழிக்கப்பட்டன. அது ஒரு அரசியல் ஆதிக்கம் மட்டுமல்ல, கோயில்கள் இடிக்கப்பட்டன, எல்லாவகை பொருளதார வரைமுறைகளும் கூட்டமைப்புகளும் நாசமாக்கப்பட்டன.

நான் பலமுறை யோசித்ததுண்டு, ஏன் துருக்கிய ஆக்கிரமிப்புக்குப் பின் இந்திய வாணிபத்தில் அசாதாரண வீழ்ச்சி ஏற்பட்டது என்று. அதுவரை இந்துக்கள் மிகுந்த வணிகப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தனர். சரித்திரக் கண்ணோட்டத்தில் கிடைத்த விளக்கம். சாதி சம்பந்த தடைகள், பிராமணர் சமூகத்தைப்பற்றிய தாழ்வான கருத்து, கடல்கடந்து செல்லக்கூடாது போன்ற தடைகள், இவை காரணமாகக் கூறப்பட்டன.

ஆனால் அது வாதத்திற்கு ஒவ்வாதது. ஏனெனில் உயர்ந்தகுலத்தவரே வணிகம்மூலம் கிடைத்த வருமானத்தை அனுபவித்தனர். வணிககுலத்தவரும் இதில் பயனடைந்தனர். மேலும் நாட்டைஆளும் க்ஷத்திரியர்களும் பலகாலகட்டங்களில் இந்த வாணிபங்களில் கிடைத்த வருவாயில் பங்குபெற்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக பிராமணர்களுக்கே மிக்க பலன் கிடைத்தது. கிழக்கு ஆசியப்பகுதிகளின் சபைகளில் மிக்க மரியாதைக்கு உரியவர்களாய் இருந்தனர். அதற்காகவே பலரும் கடல்பயணம்  மேற்கொண்டனர்.

ஏற்கனவே கூறியிருந்தேன்   முன்னோடியான கௌண்டின்யன் ஒரு பிராமண குலத்தவனே என்று. ஆகவே அவர்களே வணிகத்தை நிறுத்த ஒரு தகுந்த காரணமும் இல்லை. இந்த வாணிபத்தின் பெரும்பாலான பகுதி ஒருங்கிணைந்த பொருளாதாரக் கட்டமைப்பைச் சார்ந்தே நடந்து வந்ததால் அது சிதைந்துபோனதே முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: