வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021
Home > உங்களுக்குத் தெரியுமா > பண்டைய இந்திய பொருளாதாரத்தில் கோயில்களின் வர்த்தக மையங்களின் பங்கு

பண்டைய இந்திய பொருளாதாரத்தில் கோயில்களின் வர்த்தக மையங்களின் பங்கு

இப்போது எழும் கேள்வி இந்த வாணிப போக்குவரத்துக்கான அடிப்படைக்காரணம் யாது, பொருளாதாரக்கட்டமைப்பு என்ன? உங்களுக்குத் தோன்றலாம், இதற்கெல்லாம் அந்தநாளைய சாகசமிக்க வணிகர்களும் வியாபாரிகளும் காரணம் ஏனெனி்ல் அவர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து நீண்ட கடல்பயணங்களை மேற்கொண்டு தங்கள் பணத்தையும் முதலீடு செய்தனர். ஆனால் உண்மையில் அதுமட்டுமல்ல, மிகவும் மதிநுட்பமான ஒரு ஏற்பாடு இருந்தது.  பெரும்பாலான கடல்பயணங்கள் வெறும் தனிமனிதர்களின் போக்குவரத்தாக மட்டுமின்றி கூட்டுநிறுவனங்கள் மூலம் நடைபெற்றன. தற்போதைய வணிக நிறுவனங்கள் போல ஆனால் அவை ஜாதி அடிப்படையில் ஏற்பட்டிருந்தன. அவற்றில் சில 500 என்றெல்லாம் பெயரிடப்பட்டிருந்தன. அனேகமாக அவை பன்னாட்டு நிறுவனங்களாகவும் கம்பெனிகளாகவும் பல நூறாண்டுகாலம் இந்த கடல்பயணவாணிபத்தில் செயல்பட்டுவந்தன. சிலர் கூலிப்படைகளைத் தங்கள்வசம் வைத்து கடல்பயணவழிகளை பாதுகாத்து வந்தனர். அதனால் மிக்க சக்தி வாய்ந்தவர்களாய் இருந்தனர். அவர்களில் பலர் தென்னிந்தியாவில் இருந்தனர். அதனினும் சுவாரசியம் என்னவென்றால், வாணிப முதலீட்டுத்தொகை பெரும்பாலும் கோயில்களே வழங்கிவந்தன.

நமது ஊகம் என்னவென்றால், கோயில்கள் ஏராளமான செல்வம் மிக்க உள்ளதாக இருந்தன. ஏனெனில் அரசர்கள் நிறைய பொருளுதவி செய்துவந்தனர். ஆனால் இவை விதைப்பணம் மட்டுமே. ஏராளமமான தங்கசேமிப்பும் கோயில்களிடம் இருந்ததற்கான காரணம் அவை கூட்டு நிறுவனங்களுக்கு வங்கிகளாகப் பங்கேற்றதனால்தான். இதற்கு ஆதாரமாக பல தாமிர செப்பு தகடுகளில் ஒப்பந்தங்களாகக் கிடைக்கப்பட்டுள்ளன. வணிகநிறுவனங்களும் தொழில்நிபுண நிறுவனங்களும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன, வியாபார நிறுவனங்களும் கோயில்களும் மூலதன ஒப்பந்தங்கள் செய்துவந்தன. இவ்வாறாக ஒரு அடிப்படை கட்டமைப்பு இந்த கடலபயண வணிகத்திற்கு அநுகூலமாக இருந்திருக்கிறது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: