செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > உல்லால் ராணி அப்பக்கா போர்ச்சுகீசியர்களின் சக்திவாய்ந்த கடற்படையை வெகு தீரத்துடன் எதிர்த்தாள்

உல்லால் ராணி அப்பக்கா போர்ச்சுகீசியர்களின் சக்திவாய்ந்த கடற்படையை வெகு தீரத்துடன் எதிர்த்தாள்

இதைத்தவிர வேறுஉள்நாட்டு முயற்சிகளும் அன்னியர்களை எதிர்த்து வெற்றி கண்டனர். இதில் அனேகமாக யாவரும் மறந்துவிட்ட மாவீர அரசி அப்பக்காவும் அடங்குவள். அவளும் அவளது பெண் மற்றும் பேத்தி உட்பட சுமார் 80 ஆண்டுகாலம் போர்ச்சுகீசியர்களை மங்களூர் அருகே உல்லால் என்ற இடத்திலிருந்து எதிர்த்துப் போராடினர். அந்தக்கரை பிரதேசத்தில் அவள் தாய்வம்ச வழியில் வந்த தீரமான ராணி. அந்த வம்சத்தில் பெண்கள் தலைமைப்பொறுப்பு ஏற்பதும் மரபாகும். அவள் பெரும்பாலும் போர்ச்சுகீசியக் கப்பல்களை கண்ணிவைத்துப் பிடிப்பதுபோல மடக்கி மூழ்கடிக்கவும் செய்வாள். அவர்களைக் கைப்பற்றி பலமுறை தோற்கடிக்கவும் செய்தாள். ஓர்முறை ராணி  அப்பக்காவும் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டாள். பின்னர் அவளது மகளும் பேத்தியும் தளராது இந்த சண்டையில் ஈடுபட்டனர்.

இந்தக்கடற்கரைப்பகுதி நாட்டுப்புறக்கதைகளில் ராணிஅப்பக்கா இடம்பெறுவதோடு நடனநாடகங்களும் யக்ஷகானம் முதலியவைகளும் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். ஆனாலும் அப்பக்காவின் சரித்திரம் துளு பாஷையில் சில இடம்பெற்றிருந்தாலும், நிச்சயமாக ஆங்கிலத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை. இது ஒரு அதிர்ச்சிக்குறிய தகவல். ஐரோப்பியர்  கண்ணோட்டத்தில் இந்தக் கதையைப் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும், அவர்கள் அப்பக்காவின் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும், நாம் அனேகமாக ஒன்றும் பேசுவதுகூட இல்லை. எனவே நான் இந்த கடற்கரை சார்ந்த வரலாற்றின்மூலம்  இம்மாதிரி சில கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைத்துள்ளேன்.

Leave a Reply

%d bloggers like this: