வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > தென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்

தென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்

ஒரு நூற்றாண்டுக்குப்பின் அதாவது 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெனரல் ஜெங்ஹி என்ற சீனஅலியின் தலைமையில், மிகப்பிரம்மாண்டமான கப்பல்கள், மிகப்பெரியவை மட்டுமல்ல, மிகநவீனமானவையயும் கூட, வரத்தொடங்கின. இந்தப்பிரம்மாண்ட பணக் குவியல் கப்பல்களின் வரிசை 14ம் நூற்றாண்டு துவக்கத்தில் தென்கிழக்கில் பயணம் தொடங்கி இந்தியாவை நோக்கி வந்து தென்னாப்பிரிக்கா சென்றன. இவைபோன்று பல வரிசைக்கப்பல்கள் ஜெனரல் ஜெங்ஹி தலைமையில் வந்தன. அவை கண்டுபிடிப்புக்கப்பல்கள் அல்ல நான் முன்கூறியபடி ஏற்கனவே வகுக்கப்பட்ட பழகிய கடல்பயண வழிகளிலேயே பின்பற்றி வந்தன.

இந்தக் கடல்பயணங்கள்மூலம் சீனாவின் ஆதிக்கம் வெளிப்படுத்தப்பட்டது. முக்கியமாக அத்தகைய பெரும் அளவில் பிரம்மாண்ட கப்பல் வரிசைகள் உள்ளூர்வாசிகளைப் பிரமிக்க வைத்தது. மேலும் வெகு சீக்ககிரமே சீனாவின் தலையீடு உள்ளூர் அரசியலில் அதிகரித்தது. இலங்கையில் அரசபதவிக்குப் போட்டியிட்ட ஒருநபரைக் கைப்பற்றி கூட்டிச்சென்று மீண்டும் அழைத்துவந்து சிம்மாசனத்தில் அமர்த்தவும் முயற்சி செய்தனர். கேரளத்திலும் ஜமோரின் [அ] சமுத்திரியை கோழிக்கோட்டில் மாற்றம் செய்திருக்கக்கூடும். அங்கும் அவர்கள்  தலையீடு இருந்தது.  இவ்வாறு சீனாவின் ஆதிக்கம் பல இடங்களில் அரசியலில் தங்கள் வலிமையைக் காட்டி தலையெடுத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவின் தாக்கம் அதிகமாக தென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவதில் இருந்தது, ஏனெனில் அதுவே உண்மையில் அவர்களது திட்டம்.

நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டியது 12ம் 13ம் நூற்றாண்டுகளுக்குப்பின் இந்திய நாட்டு இந்துக்களின் முக்கியத்துவம் வெளிநாட்டு வணிகத்தில் குறையத் தொடங்கியது. ஆயினும் தென்கிழக்குஆசிய இந்துக்கள் முக்ககியமாக ஜாவாவில் வாழ்ந்தவர் மிகவும் அதிக அளவில் பங்கேற்றனர். உண்மையில் 13ம் 14ம் நூற்றாண்டுகளில் ஒரு

மாபெரும் விரிவாக்கம் ஏற்பட்டு மஜாபஹித் சாம்ராஜ்யம் ஜாவாவிலிருந்து தற்போதைய இந்தோனேஷியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, தற்போதைய மலேஷியாவின் சில பகுதிகளையும் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி சீனாவின் ஜெங் தலைமையிலான பெரும் கப்பல் வரிசைகளை மிகவும் நுணுக்கமாகக் கண்காணித்து முன்னெச்சரிக்கையாக அவற்றில் சிலவற்றைக் கைப்பற்றி ஒருபாடம் கற்பிக்கவும் செயல்பட்டனர்.  இதை வெறுத்த சீனர்கள் மாற்றுவழியில் அதிகாரம் செலுத்த மலேஷியாவில் இருந்த, சிங்கப்பூருக்கு வடக்கே, மலாக்காபகுதியை, ஊக்குவித்தனர். அங்கிருந்த பரமேஸ்வரா என்ற அரசனை இஸ்லாமுக்கு மாறும்படு ஊக்குவித்து, சீனப்பேரரசர் அவனைச் சந்தித்து ஏராளமான பொருளுதவி தந்தனர். இந்த ஒத்தாசையால் மலாக்கா அரசு மிகவம் வலிமை மிக்கநாடாக வளர்ந்து, மஜாபஹித் பின்வாங்கத் தொடங்கினர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் மதக்கலவையில் ஒரு தெளிவான மாற்றம் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டது.

Leave a Reply

%d bloggers like this: