புதன்கிழமை, செப்டம்பர் 23, 2020
Home > இலங்கை > சோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிராக பாண்டிய சிங்கள உடன்படிக்கை

சோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிராக பாண்டிய சிங்கள உடன்படிக்கை

காலச்சக்கிரம் உருண்டோடியவண்ணம் இருந்தது. வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் 11ம் நூற்றாண்டில் சோழவம்ச அரசின் எழுச்சியோடு துவங்கியது. பெரும்பாலும் தெரிந்த விஷயமேதான், சோழ சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியாவில் தாக்குதல் தொடங்கியது. ஏனென்று தெளிவாகப் புரியவில்லை. ஆனால் சூழ்நிலை சான்றுகளின் ஆதாரப்படி பலகாரணங்களில் ஒன்றாக இதைக்கூறலாம். சோழர்கள் சீனாவின் ஸாங்பேரரசுடன் ஏராளமான வர்த்தகம் செய்துகொண்டிருந்தனர். சீனக்கடற்கரைஓரம் இந்துகோயில்களின் எஞ்சிய பகுதிகள்பல அந்தகாலத்தைச்சேர்ந்தவை கிடைத்துள்ளன. ஸ்ரீவிஜயன் காலத்தில் சுங்கவரித்தீர்வை மிகவும் அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி வணிகத்தில் பெரும் பிரச்சினை உண்டாக்கியது. தற்போது நெடுஞ்சாலைகளில் தீர்வைவரி உயர்த்தினால் தினசரி ஏற்படும் கூச்சல் குழப்பங்கள் மாதிரி அப்போதும் ஏற்பட்டது.

எதிர்பார்த்தபடி அவர்கள் உடனே ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானித்தனர். நாகப்பட்டினத்தில் தோழமை கூட்டம் ஒன்று கூட்டினர். கடாரத்தில் ஓர் தாக்குதல் நடத்தினர். கடார அரசு தோல்வியுற்றது. அங்கிருந்த கஜானாக்களைக் காலிசெய்து யானை முதலிய படைகளையும் வெற்றி கொண்டு கைப்பற்றினர். ஆனாலும் இந்தப் போருக்குப் பின்னர் பெருத்த சிக்கல்கள் ஏற்படவில்லை. ஸ்ரீவிஜயனுடன் சோழஅரசின் உறவு சுமுகமாகவே இருந்தது. இது ஒரு சுவாரசியமான நிகழ்வு.

நிலவியல்சார்ந்த அரசியல் கண்ணோட்டத்தில், தென்னிந்தியா மற்றும் இலங்கை சார்ந்த வரலாற்றில், நமது பொதுவான உணர்வு சிங்கள தமிழர் முரண்பாடுகளும் சர்ச்சைகளுமே மேலோங்கி நிற்கும். இந்த தவறான அபிப்ராயம் தறபோதைய சூழலின் அடிப்படையில் அதாவது இலங்கையின் வடப்பகுதியில் தமிழர் தனியாட்சி கோரும் நிலைப்பாட்டினால் ஏற்பட்ட ஒன்று. உண்மையில் நீண்ட நெடுங்கால வரலாற்றில் சிங்களர்களுக்கும் பாண்டிய அரசர்களுக்கும் ஒரு உடன்படிக்கை இருந்துவந்தது. அது சோழர்களுக்கு எதிரான நடவடிக்கை. காவேரிப்பாசனப் பகுதியிலிருந்த சோழஅரசர்கள் தென்கிழக்கு ஆசியாவுடன் உடன்படிக்கை வைத்து ஆதிக்கம் செலுத்திவந்த காலம் அது. அந்த காலகட்டத்திய நிலவியல் அரசியல் இதுவேயாகும். பாண்டிய சிங்கள உடன்படிக்கை சோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாறிமாறி எடுக்கப்பட்டு வந்தது. இது ஒரு மதிநுட்பமான சுவாரசியமான நிலவியல் அரசியல் நிகழ்வாகும்.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.