ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > பல்லவஅரசன் 2ம் நந்திவர்மனும் அவனது தென்கிழக்கு ஆசிய வம்சமும்

பல்லவஅரசன் 2ம் நந்திவர்மனும் அவனது தென்கிழக்கு ஆசிய வம்சமும்

பொதுவாக இந்தியர்கள் நினைப்பது இந்தியாவின் தாக்கம்தான் எப்போதும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் என்று. ஆனால் உண்மை அதுவல்ல. தென்கிழக்குஆசியா ஒன்றும் இந்தியாவின் வருகைக்காகவும் அதன் கொள்கைகளுக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. 8ம், 9ம், 10ம் நூற்றாண்டுகளில் அவர்களும் தங்களாலான ஆய்வுப்பயணம்மேற்கொண்டிருந்தனர்.

வெளிநாட்டுக்குடியிருப்புகள் மடாகாஸ்கர் பகுதியில், ஆப்பிரிக்க கடற்கரை ஓரம் நிறுவிய முதல் தேசம் இந்தோனேஷியாதான். மனிதசமுதாயத்தின் ஆரம்பகட்டம் ஆப்பிரிக்காவில் துவங்கியிருந்தும் வெகுஅருகே இருந்த மடாகாஸ்கரில் குடியிருப்புகள் இந்தோனேஷியா அமைத்தது, ஆப்பிரிக்கர் தென்கிழக்கு ஆசியா செல்லவில்லை, குடியிருப்புகள் அமைக்கவில்லை. இந்தோனேஷியா இந்தியாவுடன் பரஸ்பர தொடர்புகொண்டிருந்தது, கொடுக்கல்வாங்கல்கள் இருந்தன. சுமத்ரா அரசின் ஸ்ரீவிஜயன் வம்சத்தினர், நாம் பெருமைப்படும் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு பொருளுதவி செய்துவந்தனர். வெளிநாட்டுப் பொருளுதவி இந்திய பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல.

சில பிரசித்தி பெற்ற இந்திய அரசர்கள் உண்மையில் தென்கிழக்கு ஆசியப்பகுதியில் தோன்றியிருக்கக்கூடும். இந்திய வடகிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியாவின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அது கடற்கரைப்பயணங்கள் சார்ந்த விஷயமல்ல. எனவே மற்றொரு அவையில் அதுபற்றி பேசலாம். தென்னிந்தியாவின் புகழ்வாய்ந்த பல்லவ அரசர்களுள் ஒருவனான 2ம் நந்திவர்மனின் கதை மிக்க சுவாரசியமான ஒன்று. காஞ்சியில் வைகுண்ட பெருமாள் கோயிலின் கல்சுவர்களில் நந்திவர்மனின் வரலாற காணப்படுகிறது. 8ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல்லவ வம்சத்தின் அரசன் இளம்வயதில் வாரிசு இல்லாமல் காலமானான். சாளுக்கியர்கள் அந்த அரசைக் கைப்பற்ற முனைந்தனர். இதனால் பெருங்குழப்பம் ஏற்பட்டு இந்த நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க ஒர் அவசர ஆலோசனை சபை கூட்டப்பட்டது. தலைமை அதிகாரிகளும் அறிஞர்களும் கூடி இச்சபையில் ஓர் தீர்மானம் செய்தனர். அதன்படி வெகுகாலத்திற்கு முன் பல்லவ வம்சத்திலிருந்த மற்றுமொரு வாரிசு வெளிநாடு சென்றதை ஆராய்ந்து தற்போது உள்ள அந்த வம்சத்தில் ஒருவனைக் கண்டுபிடித்து பட்டம் சூட்டவேண்டும் என தீர்மானித்தனர்.

அதன்படி நூறாண்டுகளுக்குமுன் இருந்த பல்லவ அரசனின் இளைய சகோதரன் வெளிநாட்டுக்குச்சென்று அங்குள்ள ராஜகுமாரியை மணந்து பட்டம் சூடி அரசை ஆண்டு வந்ததாகத் தெரியவந்தது.அந்த வம்சத்தில் வந்த வாரிசு ஒன்றைத் தேர்ந்ததெடுத்து அழைத்துவர திட்டமிட்டனர். ஒரு அறிஞர்கள் குழு மகாபலிபுரத்திலிருந்து பறப்படது. பீமன் வம்சத்தில் வந்த அரசனிடம் தங்கள் கோரிக்கையை சமர்ப்பித்து நான்கு புதல்வர்களில் ஒரவனைக் கேட்டனர். 12 வயதான கடைசி புதல்வன் ஒப்புக்கொள்ளவே அவனை காஞ்சிக்கு அழைத்துவந்து பட்டம் சூடினர். அவனே 2ம் நந்திவர்மன் என பெயர் பெற்றான். அவன் மிகவும் பிரசித்திமிக்க அரசனாக இருந்து அவன் காலத்தில் கட்டிய பல கோயில்கள் அவனை நினைவு கூறுகின்றன.

இந்த 2ம் நந்திவர்மன் யார்? எங்கிருந்து வந்தான்? இந்த வைகுண்டப்பெருமாள் கோயிலுக்குச் சென்றால், அங்குள்ள கற்சுவர்களில் வரையப்பெற்ற உருவங்களைப் பார்த்தால் சற்று வினோதமாகத்தோன்றும். பெரும்பாலானவை கீழ்திசை ஆசிய நாடுகளைச் சார்ந்தவை, சில சீனதேச முகங்களும் காணப்படும். எனது ஊகம் இதுதான். பல்லவர்கள் நாகர்களின் பெண்வர்க்க வம்சாவளியைப் பெருமையாக நினைத்தனர். சில கல்வெட்டுக்குறிப்புகளில் காணப்படுகிறது. நமக்கு பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என தெரியாது. ஆனால் நாகர்களின் பெண்வர்க்கத்தில் பெருமை கொள்வதைப்பார்த்தால் தென்கிழக்கு ஆசியப்பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. மேலும் பல்லவர்களுக்கு மிகுந்த தாக்கம் அப்பகுதியில் இருந்தது. பல்லவர்களின் எழுத்துப்படிவங்கள் பலமொழிகளில் இடம் பெற்றுள்ளன உதாரணத்திற்கு, தாய்லாந்து.மலேயாவில் 2ம் நந்திவர்மனைப்பற்றிய கல்வெட்டுகள் புஜங்கப்பள்ளத்தாக்கில் உள்ளன. புஜங்கமென்றால் நாகம். எனது ஊகப்படி அவன் கம்போடியாவை அல்லது மலேயாவைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும்.  8ம் நூற்றாண்டில் இந்தியா வந்து பல்லவ அரசை நிலைநாட்டியிருக்கவேண்டும். எனவே தென்னிந்தியாவின் புகழ்பெற்ற அரசர்களுள் ஒருவன் தென்கிழக்கு ஆசிய மாநிலத்தைச் சார்ந்தவன் என்பது ஓர் வியப்புக்குரிய தகவலாகும்.

Leave a Reply

%d bloggers like this: