கடல்பயணங்கள் ஒடியாக்கரையிலிருந்து தென்கிழக்குஆசியாவை நோக்கிச்செல்வது மிகவும் கடினமக இருப்பது சிலகாலத்திற்குப்பின் தெரியவந்தது. அதனால் சிலர் குளிர்காலப் பருவ மழையின்போது தென்திசையில் இலங்கையை நோக்கிச்செல்வது சற்று எளிதாக இருப்பதை உணர்ந்தனர். அங்கிருந்து பூமத்தியரேகை நீரோட்டத்தை அனுசரித்து சுமத்ரா,ஜாவாவை நோக்கி  பயணம் செய்வது மேலும் எளிது என்று அறிந்தனர்.

இந்த மாறிய கடல்பயணவழி இந்தியாவின் தென்கிழக்கு ஆசியாவுடன் இருந்த உறவுகளை முற்றிலுமாக வேறுபடுத்தியது. முன்னர் தாய்லாந்து, இஸ்தாமுஸ்கிரா மூலம வியட்நாம் சென்றுவந்தது மாறி இலங்கைக்குச்சென்று நீரோட்டத்தின் உதவியோடு ஜாவா, பாலி, சுமத்ரா தீவுகளுக்குச்சென்றடைந்தது. இந்துகலாச்சாரத்தின் வெளிப்பாடும் அச்சமயம் ஏற்பட்டது. பாலி, ஜாவா தேசங்களுக்குச்சென்றால் வெகுதெளிவாகப்புரியும், எவ்வளவு கலாச்சாரப்போக்கிவரத்துகள் இருந்தன என்பதற்கான அடையாளங்கள். வெகு காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தமிழ்கலாச்சாரத்தின் தாக்கமே இதற்குக் காரணம் என்று நாம் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல.

உண்மையான முன்னோடிகள் கிழக்குவங்கக்கடல்பயணங்களில் ஒடியாக்களே. அதுமற்றும் பல்வேறு விஷயங்களிலிருந்து தெரியவருகிறது. கொச்சையாக இந்தியர்களை தென்கிழக்கு ஆசியாவில் “கிளிங்” என்று கூறுவர் இன்றுவரை. இப்போது சற்றே தாழ்வான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. எனினும் “கிளிங்” என்ற சொல் ‘கலிங்கர்’ என்ற சொல் மருவி இந்தியர்களைக் குறிக்கக்கூடும். மலேயா மொழியில் மேற்கத்திய திசைக்கு ‘பாரத்’ என்று பெயர்.எனவே இந்தோனேஷியாவில்  அவர்கள் தேசத்தின் பெயரை இந்தியாவுடன் இணைத்துப்பெயரிட்டனர். இவையனைத்தும் தென்கிழக்கு ஆசியா பக்கத்திய நினைவுகள்.

நம்நாட்டுப் பக்கத்திய நினைவுகள் யாவை? பலவும் நம் கண்கள் முன்னால் வெகுசமீபகாலம் வரை பலதரப்பட்ட வழியில் காணக்கிடைத்தும் நாம் அவற்றை முழுவதுமாகப் புரிந்து அனுபவிக்கவில்லை என்றே கூறவேண்டும். ஒடியாவில் ஒரு மிக முக்கியமான பண்டிகை கார்த்திகைப் பௌர்ணமி விழா. அதிகாலையில் எழுந்து நீராடி பெண்களும் குழந்தைகளும் ஆற்றங்கரைக்கு அல்லது கடற்கரைக்குச்சென்று சிறிய தீபங்கள் ஏற்றி அவற்றை நீரில் மிதக்கவிடுவர். இதன் முக்கிய நோக்கம் என்ன? கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி காற்றின்திசையும் வேகமும் மாறுபடும். தெற்கிலிருந்து வடக்கே வீசிய காற்று வடதிசையிருந்து தெற்கே வீசும். ஒடியாவிலிருந்து மாலுமிகள் கப்பல்பயணம் மேற்கொள்ளத் தொடங்குவர். குடும்பத்தினர் அவர்களை வழியனுப்புவது இந்தப்பண்டிகையின் சிறப்பு அம்சம். இப்போதும்கூட கட்டாக் நகரில் ‘பாலியாத்ரா’ என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன்அர்த்தம் பாலிசெல்லும்பயணம் என்பதே.

இந்த நிகழ்வுகள் யாவும் பண்டைய கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே நம் கண்முன் நடந்துவருகின்றன. நானே 2,3 ஆண்டுகளுக்கு முன்பு கோனாரக் கடற்கரையில் ஒரு சுவைமிக்க நகழ்ச்சியைக்கண்டேன். அங்கே நாடகங்கள் நடத்தப்படும். ஒடியாக்களுக்குத் தெரிந்திருக்கும் ‘தபோய் கதை’. ஓர் இளம்பெண் அவளது சகோதரர்களின் மனைவிகள் பொறுப்பில் விட்டுச்செல்லப்படுகிறாள் ஏனெனில் அவளது தந்தையும் சகோதரர்களும் நீண்ட கால கடல்பயணம் மேற்கொள்வர். அவளை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர்

அவளது சகோதரர்களின் மனைவியர். ‘மானஸா’ தேவியை வழிபட்டு வந்த அந்த இளம்பெண்ணை சரியான நேரத்தில் அவளது சகோதரர்கள் காப்பாற்றுகின்றனர். இது ஒரு நாட்டுப்புறக்கதையானாலும், வெளிநாட்டுக்கடல்பயணம், வாணிபம் இவற்றோடு சமுதாயத்தில் அதன்தாக்கம் என்பவை, கோனாரக் கோயில்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.