வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2021
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > ஆந்திரப்பிரதேச சட்டத்தை எதிர்த்த ஒரு மனுவில் என்ன வாதம் இருந்தது

ஆந்திரப்பிரதேச சட்டத்தை எதிர்த்த ஒரு மனுவில் என்ன வாதம் இருந்தது

அரசியலமைப்புக்கு ஆந்திரப்பிரதேசம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து அது நம் ஒவ்வாதது என மனுதாரர்கள் சார்பில் வைத்த வாதம் இதுதான். மதிப்பிற்குறிய வழக்கறிஞர்கள் வாதத்தின் சாராம்சம், அரசியலமைப்பு சட்டத்தின் 25ம், 26ம் பிரிவுகளின்படி சமயசுதந்திரத்திற்கான உரிமைகள் எல்லா குடிமக்களுக்கும் சமமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மதசார்பு நடவடிக்கைகள், சுதந்திரமாக சமய நெறி ஓம்புதலும், ஒழுகுதலும், ஓதிப்பரப்புதலும், குறிப்பிட்ட மதசம்பந்தப்பட்ட செயல்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளன. இந்துக்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். இந்துமதம் நம்நாட்டின் பெரும்பான்மை மதம். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பாரசீகர்கள் யாவர்க்கும் அதே சமமான உரிமைகள் நம் அரசியலமைப்பு 25ம் 26ம் பிரிவுகளில் காணப்படுகின்றன. அவர்களது மதசார்பு அமைப்புகள், அறக்கட்டளைகளின் நிர்வாகம் அல்லது கட்டுப்பாடு பற்றிய ஒழுங்குவிதி முறைகள் தனியாக இல்லாதபோது, இந்துமத அறக்கட்டளைகளையும், இந்துமத அமைப்புகள் பற்றிய நிர்வாக ஒழுங்குவித் முறைகள் மட்டும் ஏற்படுத்துவது சரியல்ல, 14ம், 15ம் பிரிவுகளில் காணப்படும் சட்டத்தின் முன் அனைவரும் சமம், சமயம் இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதல் கூடாது என்ற உத்திரவாதத்திற்கு எதிராக உள்ளது என்று வாதிட்டனர்.

மேலும் அந்த வாதத்தின்படி பெரம்பான்மை மதத்தில் ஒருபகுதிக்கு 26ம் பிரிவு தந்துள்ள உரிமையைப் பாதுகாத்துவிட்ட நிலையில் அந்த முழுமதத்தினர்க்கும் தந்ததாகவே ஆகும். உதாரணமாக வைணவ சம்பிரதாயத்தினருக்கு ஓர் உரிமை அரசியலமைப்பில் வழிவகை செய்திருந்தால் அது இந்துமதத்தினர் யாவருக்கும் பொருந்தும். ஏனெனில் வைணவர்கள் இந்துமதத்தில் ஒருபகுதிமட்டுமே. அவர்களுக்கான நிறுவனங்களை மட்டும் சட்டத்தின் ஒழுங்குமுறைகளின்கீழ் கொண்டுவருவது அவர்களது மதசம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதிப்பதாகும். இதுவே அந்த வாதத்தின் சாராம்சம்.

இப்போது உச்சநீதிமன்றம் என்ன கூறியது என்று பார்பபோம். அதில் அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களைப்பற்றிய வாதங்களும் இடம்பெற்றதை நினைவுகூறலாம். முதல் கேள்வி சட்டமன்றம் எல்லா மத,அறநிலைய ஆட்சித்துறை, அல்லது பொதுநல நிறுவனங்கள், எல்லா மதம் சார்ந்த மக்களுக்கும் பொதுவாக சட்டங்களை இயற்றுவது தேவைதானா என்பது. இந்த இடத்தில்தான் மதசார்பின்மை விவரணம் தொடங்குகிறது. இந்தியா போன்ற ஒருபன்மகசமுதாயத்தில் மக்கள் வெவ்வேறு மதங்களில், அவற்றின் கொள்கை கோட்பாடுகளில் திடநம்பிக்கை வைத்துள்ள நிலையில், நமது அரசியலமைப்பைத் தோற்றுவித்தவர்கள், வெவ்வேறு கொள்கைகள், மதக்கோட்பாடுடையவர்கள், சாதிமதம் வேறுபட்டவர், எல்லோரையும் ஒருமுகப்படுத்தும் முயற்சியில் மிகுந்த பிரயாசைப்பட்டனர். அரசுக்கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் பன்முகசமுதாயத்தை எதிர்பார்த்தும் சம உரிமைக்காகவும் ஒருமுகப்படுத்தும் நோக்கத்துடனே எல்லாவித மதசார்புடைய மக்களுக்கு சமமாக வழங்க முற்பட்டுள்ளன. ஒரு மாறுதல் இல்லாத சட்டம் யாவருக்கும் பொதுவாக இருத்தல் விரும்பத்தக்கதாக இருப்பினும், அதை ஒரே முயற்சியில் இயற்றுவது என்பது ஒற்றுமைக்கும் முழுமைக்கும் குந்தகம் விளைவிப்பதாகவே முடியும்.

ஒரு குடியரசில் சட்டத்தின் ஆளுகை மேலோங்கிநிற்க, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற சமுதாயநிலையே நன்மைபயக்கும். ஏனெனில் சில உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்கள் வேறு கருத்துக்களைவிட மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். சட்டத்தை இயற்றுவதோ அதைத்திருத்துவதோ மிகவும் பொறுமையான நடவடிக்கை. சட்டமன்றம் எதற்கான தேவை மிகஅவசியம் என்பதைப் பொருத்து செயல்படுகிறது. நீதித்துறை அந்த நடவடிக்கை இந்துமத நிறுவனங்களைப் பற்றியதானால், மேலும் தீவிர ஆய்வுக்குப்பின்னரே ஆமோதிக்கிறது. இது தர்க்கரீதியான செயல், இதுவே நமது பன்முகசமுதாயத்தின் அடிப்படைக்கோட்பாடு, இதுவே மதசார்பின்மை. இந்தமுறையில்தான் அரசியலமைப்புச்சட்டத்தின் உரிமைக்கட்டளைகளையும், கோட்பாடுகளையும் உச்சநீதி மன்றத்தின் வாயிலாக நிறைவேற்றுகிறோம்.

1966ம் ஆண்டில் எழுந்த பிரச்சினை 2016ம் ஆண்டிலும் பொருந்தும். நாம் கேட்கக்கூடிய கேள்வி ஒன்று உண்டு. இந்த 50 ஆண்டுகாலத்தில் வேறுபல சமுதாயங்களும், குடியேற்றங்களும் இம்மாதிரி சட்டங்களை அமுலாக்க முன்வரவில்லையா என்று. 1966ம் ஆண்டு என்பது நம் நாடு சுதந்திரம் அடைந்து 19 ஆண்டுகளே ஆயின. அப்போது இந்துமதநிறுவனங்களே பெரும்பாலும் தலையீடு செய்யத்தகுந்தவையாக இருந்தன. அந்த தீர்ப்புக்குப்பின் 50 ஆண்டுகள் கழிந்தபின்னரும் சமுதாய நிலைப்பாட்டின்படி இந்துமக்கள் மட்டுமே இத்தகைய தலையீட்டிற்கு உடன்படவேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.