ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2021
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > அரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது

அரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது

அரசியலமைப்புச்சட்டத்தின் 25ம் 26ம் விதிகளில் கூறப்பட்டுள்ள சமய சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பொருத்தவரை அரசாங்கத்திற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. 25ம் விதியில் தனிமனித சுதந்திரம் பற்றியும், 26ம் விதியில் மதசம்பந்த நிறுவனங்களது சுதந்திரம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு விதிகளிடையே இருமுனைப் பயன்விளைவு / தாக்கம் உள்ளது. 25ம் விதியின்கீழ் ஒரு நேர்த்தியான வழிமுறை 25(2)(a) விதியாக அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மதசார்பற்ற, பொருளாதார, அரசியல் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்த அவசியமான சட்டங்கள் இயற்ற உரிமை உண்டு. இவை யாவும் சமயம் சார்ந்த நடவடிக்கைகளை நிர்வகிக்கும் விஷயங்களில் தோன்றுபவை. இத்தகைய சட்டத்தின் குறிக்கோள் என்ன? இதை நாம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். ஆசீஷ் எனது நல்ல நண்பன். அவன் தனது சொத்துக்களை ஒரு கோயிலுக்கு எழுதிவைக்க விரும்புகிறான். இந்த சொத்து யாவும் இந்த கோயிலுக்கு மானியம் / அறக்கட்டளை என்று அறிவிக்கிறான். ஆசீஷ் விரும்புவது இந்த சொத்து எப்பொழுதும் இந்த கோயிலின் நலனுக்காக, தேவைகளுக்காக, இந்த கோயில் சம்பந்தமாக, இந்த கோயில்பற்றிய செலவினங்களுக்காக, பராமரிப்புக்காக, வளர்ச்சிக்காக மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், வேறு எதற்கும் அல்ல. இதுவே அவன் எப்போதும் எதிர்பார்ப்பது. கோயில் நிர்வாகத்தினர் ஒருவேளை வேறு காரியங்களில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு செலவு செய்தாலோ, அரசியலமைப்பு விதி 25(2)(a)ன் கீழ் சட்டத்தின் உதவி கிடைக்கும். அவன் கேட்கலாம், எனக்கு சட்டத்தின் அதிகாரம் மூலமாக நான் அளித்த மானியத்தை நான் விரும்பிய கோயிலின்தேவைக்கு மட்டும் பயன்பட வழிவகை செய்யுங்கள் என்று. இந்த சொத்து, பணம் யாவும் சமுதாயநலனுக்காக, கோயில் வளர்ச்சிக்காக, ஒரு சமயநிறுவனத்தின் குறிக்கோள் செயல்பட என்று ஒதுக்கீடு செய்வதை ஆதரித்து, அந்த விருப்பத்திற்கு மாறாக ஏதும் நடக்காமல் தடுக்கவே விதி 25(2)(a) அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ளது.

இப்போது இந்த விதியின் வழிமுறையை எவ்வாறு பொருள்விளக்கம் செய்தோம் என்று பார்க்கலாம். இங்கேதான் வழக்கறிஞர்களின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. நீதிமன்றத்தின்படி, மதசார்பற்ற நடவடிக்கைகள் மதசம்பந்தப்பட்ட விஷயங்களில் தொடர்பு இருந்தாலும் பொருளுதவி பெறும் தொடர்பை துண்டிக்கக்கூடாது. இது ஒரு புனிதமான தொப்புள்கொடி சம்பந்தம் போன்றது. நீதிமன்றம் ஒரு யோசனை கூறியது. அதன்படி மதசார்பற்ற நடவடிக்கைகளை ஒரு புறம் வைப்போம். சமயம்சார்ந்த நடவடிக்கைகளை மற்றொரு புறம் வைப்போம், இவ்வாறு இரண்டையும் பிரித்துவிடுவோம், எதற்காக? நாங்கள் உங்கள் சமயம்சார்ந்த சுதந்திரத்தை மதிக்கிறோம், அதை தொந்தரவு செய்யமாட்டோம், அது உங்களது தனிச்சிறப்புரிமை. ஆனால் அந்த மதசார்பற்ற நடவடிக்கைகளைப் பொருத்தவரை, அரசாங்கம் அரசியலமைப்பின்கீழ் அதிகாரம் செலுத்தவும் தலையிடவும் உரிமை பெற்றுள்ளது.

ஏன் இந்தப் பொருள்விளக்கம் களங்கமானது? இதற்கு விடை நான் தருகிறேன். உங்களால் ஒரு பூஜை பொருளுதவி இல்லாமல் செய்யமுடியுமா? ஒரு கோயிலின் உள்ளே ஏதேனும் நிகழ்ச்சிகள் பொருளுதவி இல்லாமல் நடக்க இயலுமா? அன்னதானம் செய்வதற்கு பணம் தேவை அல்லவா? விசேஷபூஜை செய்வதற்கு பணம் வேண்டுமே. அகண்ட பஜனைகள் செய்யவேண்டும், நாமசங்கீர்த்தனங்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும், பணமின்றி இவை சாத்தியமா? சமயம் சார்ந்த எல்லா நடவடிக்கைகளுக்கும் பணம் எங்கிருந்து கிடைக்கும்? மதசார்பற்ற பெட்டகத்திலிருந்து, ஆனால் அதன் திறவுகோல் அரசாங்கத்திடம். சமயம்சார்ந்த நடவடிக்கை பொம்மலாட்டத்திற்கு ஒப்பிடலாம், அதன் எல்லா நூல் முனைகளும் மதசார்பற்ற பொம்மலாட்டக்காரரான அரசாங்கத்திடம்.

எனவே யார் ஆட்டிவைக்க யார் ஆடுவர்? சமயம்சார்ந்த நடவடிக்கைகள், சமயவழிமுறைகள், பழக்கவழக்கங்கள் யாவும் மனம்போனபோக்கில் அரசாங்க அதிகாரத்திற்கு உட்பட்டு, பொம்மலாட்ட பொம்மைகள் போல ஆடத்தொடங்கும். அதுவே ஒரு சர்வாதிகார உரிமையைக் கைப்பற்றும். இந்தப் பிரிவு ஏற்படுத்தியதன் நோக்கமே சமயம்சார்ந்த நடவடிக்கைகளுக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மதசார்பற்ற உரிமைகளை ஒழுங்குபடுத்துவதற்குமே ஆகும். ஆனால் இதுவே விரும்பியோ, எதிர்பாராமலோ, இந்துமக்கள் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதாக அமைந்துவிட்டது. இந்த முடிவிலிருந்து தப்புவது சுலபமல்ல.

எந்த ஒரு சமயம்சார்ந்த செயல்பாடும் மதசார்பின்மை என்ற கோட்பாடுக்குள் வந்துவிடும் ஏனெனில் பணம் சம்பந்தப்பட்டதால். சமயம் தொடர்பற்ற பகுதி ஒன்று எல்லா செயல்பாடுகளில் இருக்கும்கால், அது முழுவதும் அரசாங்க அதிகாரத்தின்கீழ் வருமேயானால், சமயம் சார்ந்த நடவடிக்கைகளையும் அந்த வட்டத்திற்குள் தள்ளி, அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்படுத்திவிடும். முடிவில் சமயம் சார்ந்த உரிமைகள், ஏட்டில் மட்டும் இருந்து நிஜ வாழ்கையில் ஏமாற்றமே மிஞ்சும்.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: