சனிக்கிழமை, அக்டோபர் 16, 2021
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது

இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது

இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணம் இரண்டு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கிறித்தவர்களின் புனித திருத்தல யாத்திரைக்கும்,      (முஸ்லிம்களின்)ஹஜ் உதவித்தொகைக்கும். இந்துக்களின் பணம் இவ்விதம் செலவிடப்படுகிறது. நான் கிறித்தவனாகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் என்னிடம் வசதி இல்லையா என்ன என்று கோபம்கொள்வேன். அதுவே அவர்களது முதல் கேள்வியாக இருக்கும் அல்லவா? எங்களுக்கு ஏன் இந்த சலுகை என்றுதான் கேட்பார்கள்.

முக்கியமாக அரசியலமைப்புக்கண்ணோட்டத்தில் இதைப்பார்ப்போம். இந்த செயல் விதி 27க்கு முரணானது, அதை மீறுகிறது, அதை எதிர்க்கிறது. விதி 27 மிகவும் தெளிவாகக்கூறுகிறது. வரிப்பணம் அல்லது பொதுமக்களிடமருந்து வந்த வசூல் எதுவும் ஒரு குறிப்பிட்ட மத வளர்ச்சிக்காக செலவிடக்கூடாது. விதி 27 குறிப்பாக அரசாங்கத்தை கோயில், கிறித்தவர்களின் ஆலயம், முஸ்லிம்களின் மசூதி இவற்றிலிருந்து வேறுபடுத்தி சற்று தள்ளியே வைத்துள்ளது. எனவே இந்து அறக்கட்டளை பணத்தை வேறு விதத்தில் செலவிடுவதற்கு தேவையான ஆவணங்கள் பல உள்ளன. இதில் அனுமானத்திற்கான அவசியம் இல்லை. அரசாங்கமும் இதை ஆமோதிக்கிறது. அப்படியானால் விதி 27ஐ மீறியதாகவே ஆகும்.

இப்படிப்பட்டவர்கள் நமக்கு அரசியலமைப்பின் கோட்பாடுகள் பற்றி போதனை செய்கிறார்கள்.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: