புதன்கிழமை, ஜனவரி 22, 2020
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது

உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது

என்னைப் பொருத்தவரை இந்த ஆவணம் நம்நாட்டில் HRCE இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களின் ஒரு உன்னதமான முன்வடிவாகும். நான் இதன் பின்னணியைப்பற்றி சற்று விளக்கமாகக்கூறுகிறேன்.

தமிழ்நாடு சட்டத்தில் ஒரு இகழ்வான விதி எண் 45 உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கோயில் அல்லது அறக்கட்டளையும் நிர்வாகிக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அதன் முழு நிர்வாகப் பொறுப்பை ஏற்க அவருக்கு அதிகாரம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தமி்ழ்நாட்டு அறக்கட்டளை நிறுவனம் பற்றியஅந்தமாநிலத்திற்கு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியது. அந்த மாநிலத்திற்கு ஒருமாதிரி தனித்தன்மை, கோயில்களைப் பராமரிப்பதிலும், கோயில்களை அணுகும் முறையிலும் உண்டு. குறிப்பாக அரசாங்கம் ஒருபோதும் கோயில் நிர்வாகத்தில் முழுவதுமாகத்தலையிடாது ஏன் தெரியுமா? விதி எண் 25(2)(a) அரசாங்கத்திற்கு அளித்துள்ள அதிகாரம், மதசார்பற்ற நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தவும், அவற்றை கட்டுப்படுத்தவும்தான், நிர்வாகப் பொறுப்பை முழுவதும் தன் கையில் எடுத்துக்கொள்வதற்காக அல்ல. இதன் தாத்பர்யம் என்னவென்றால், ஒரு நிறுவனஅமைப்பில் குறைபாடு அல்லது நிர்வாகச்சீர்குலைவு சரிசெய்வதற்கான வரைமுறை வகுத்தபின்னர், அந்த சமூகத்தினரிடம் செயல்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான நபர்களை நியமனம் செய்யவும் அந்த வரைமுறைக்குள் செயல்படவும் பொறுப்பு ஒப்படைக்கப்படவேண்டும். அதை விடுத்து அரசாங்கமே அந்த வரைமுறைக்குள் புகுந்துவிட்டால், நிர்வாகம் முழுவதும் கைப்பற்றியதாக ஆகிவிடும்.

உச்சநீதிமன்றம் வெகு தெளிவாக தனது தீர்ப்பில் நிர்வாகத்தைமேற்பார்வையிடுதலுக்கும் தானே ஏற்று நடத்துவதற்கும் உள்ள வேற்றுமையை விளக்கியுள்ளது. மீண்டும் ஒரு தீர்ப்பில் 2014ம் ஆண்டுடிசம்பர் 6ந்தேதி, உச்சநீதிமன்றம், ஸ்ரீசுப்ரமணியம்ஸ்வாமி சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் வழக்கில், விதிஎண் 45 பற்றி பொருள் விளக்கம் தந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எவ்வாறு இத்தகைய சட்டங்களின் வரைமுறை அரசியலமைப்பின் அடிப்படை சமயசுதந்திர உரிமையை, விதி 26ன்படி, பாதிக்காமல், அரசாங்கம் அதைமதித்து தேவையான தலையீட்டிற்குமட்டும் வழிவகை செய்யவேண்டும், முழுவதுமாக நிர்வாகத்தைக் கைப்பற்றக்கூடாது என்று விளக்கியது. அவ்வாறு தெள்ளத்தெளிவாகக்கூறியுள்ளது. இந்த தீர்ப்பு எந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது? 1954ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை இந்த தீர்ப்புதினம்வரை நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடுமாநிலம் பூராவும் நியமிக்கப்பட்டுவந்தனர். ஒவ்வொரு கோயிலும் வருவாய் ஒரு லட்சமாக இருந்தாலும், பத்தாயிரமாக இருந்தாலும் அதற்குக் குறைவாக இருந்தாலும், நியமிக்கப்பட்டனர், நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை, ஏன் ஒவ்வொரு கோயிலும் நிர்வாக அதிகாரியின் முன்னிலையில் இயங்கவேண்டும் என்பதற்கான ஒரு விளக்கமான தீர்ப்பும் இல்லை.

ஒரு நிர்வாக அதிகாரியை ஒரு கோயிலுக்கு நியமிக்கும் முன்னர் ஏதேனும் குற்றம்குறை இருக்க வாய்ப்பு இருந்தால் அதை எழுத்துவடிவத்தில் கொணர்ந்து அதை நீக்க இந்த செயல் என்று கூறுவது என்பது நீதிக்கு உட்பட்டதாகும்.அரசாங்கம் ஒரு தனிமனிதன் அல்லது சமுதாய நிறுவனத்தில் தலையீடு செய்யும்போது,என்ன காரணத்தினால் இந்த தலையீடு உங்களது உரிமை என்றுவிளக்கவேண்டும். ஒன்றும்  தெரவிக்கவில்லை. ஒரு சாட்சியும் இல்லைஉச்சநீதிமன்றத்தில். இவ்வளவு நிர்வாக அதிகாரிகளை ஏன் மாநிலம் முழுவதும் நியமித்தது, காலவரம்பின்றி. குறைபாடுகள் இருப்பினும் அவை சரிசெய்யப்படும் வரையில்தான் அரசாங்க அதிகாரி கோயில் நிர்வாகத்தில் பங்கேற்கலாம். அதற்குப்பிறகு அவருக்கு அங்கே இருக்க உரிமை இல்லை. வேறு வழி ஒன்றுமில்லை. இல்லையேல், அவரை வெளியேற்றவேண்டும். எல்லா நியமனபத்திரங்களும் காலவரம்பின்றி வெளியிடப்பட்டவை. அதனால் ஒரு முறை உள்ளே நுழைந்துவிட்டால் அங்கிருந்து வெளிச்செல்லமாட்டார். எனவே உச்சநீதிமன்றம் தீர்மானமாகக் கூறியது… உங்கள் நியமனங்கள் யாவும் விதி எண் 45ன் கீழ்ஏற்படுத்தியவை இரண்டு முக்கிய சட்ட நிபந்தனைகளுக்குப் புறம்பானவை. என்ன குற்றம், தீங்கு சரி செய்ய என்று குறிப்பிடாதது, என்ன காலகட்டத்திற்குட்பட்டு இந்தநியமனங்கள் என்று குறிப்பிடாதது. இவை அரசியலமைப்புச்சட்டத்தின் விதி 26ஐ மீறிய செயலாகும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

Leave a Reply

%d bloggers like this: