இந்நாள்வரை இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத்தைப்பற்றிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி நான் ஆலோசிக்க விரும்புகிறேன். தற்போதைய செய்தி முளைக்கூர்ச்சு எல்லோருக்கும் தெரிந்த ரோஹிங்கியர்கள் பிரச்சினை. ஆனால் பல ஆண்டுகளாக 1950, 1960ல் இருந்து கொதித்துக்கொண்டும், புரையோடிக்கொண்டும் இருக்கும் பிரச்சினை வங்காள தேசவாசிகள் நமது வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றம் செய்வது. இரண்டுமே சரிசெய்யவேண்டிய பிரச்சினைகள், இரண்டிற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு ஒன்றுமில்லை, இனம் வேறு என்பதைத் தவிர. உண்மையில் இனவேறுபாடும் இல்லை என்றே கூறலாம். பல புத்த அறிஞர்கள் ரோஹிங்கியர்கள் உண்மையில் சிட்டகாங்கைச்சேர்ந்த வங்காள முஸ்லிம்கள் என்று கூறுகின்றனர். ஆங்கிலேய ஆவணங்களில் அவர்கள் யாவரையும் சிட்டகாங்கியர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ரோஹிங்கியர் என்ற சொல்லை பலமதம் சார்ந்தவர்கள் கொண்ட ஒரு இனமாகக் கருதுவது உண்மைக்கும் வரலாற்றுக்கும் புறம்பான ஒன்று என்று நான் கருதுகிறேன். ரோஹிங்கியர் என்றாலே ரோஹிங்கிய முஸ்லிம்களையே குறிக்கும், வேறு மதம்சார்ந்தவர்கள் அல்ல. இதை நாம் நன்கு மனதில் கொள்ளவேண்டும். உச்சநீதிமன்றத்தில் நமது இடையீட்டு மனுவுடன் ஒரு கட்டுரை 2005ல் வெளியிடப்பட்டதை தாக்கல் செய்துள்ளோம். அது ஒரு அறிஞரால் SOAS Bulletin of Burma-வில் எழுதப்பட்டது. அவர் தனது ஆராய்ச்சியில் ரோஹிங்கியரின் தோற்றம் வரலாற்றின்படி முஸ்லிம்களின் வளாகம் ஒன்று ராகையின் அல்லது அராகன் என்ற இடத்தில் உருவானதாகத் தெரிவிக்கிறார். மேலும் பர்மாவிலும் இவர்கள் குடியேற்றங்களால் 1948ல் உண்டான தொல்லைகளையும் பற்றி விவரிக்கிறார். இந்தப்பிரச்சினை புதிதல்ல, 1948ல் இருந்து வந்துள்ளது எனலாம்.