ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
Home > சட்டவிரோத குடியேற்றம் > ரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல

ரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல

நீங்கள் ஒரு குடியரசு நாடாக இருந்தால் சட்டத்தின் ஆளுகை குடியரசுடன் சேர்ந்த ஒரு கொள்கையாகும், அது குடியரசுக்கோட்பாடுகள், அரசியலமைப்பின் பண்புகள் அவற்றுடன் ஒருங்கிணைந்து செல்லும் கொள்கையாகவே இருக்கவேண்டும். எனவே நான் கேட்கவேண்டிய கேள்வி, ஒரு நீதிமன்றத்தின் முன்னால் எனது செயற்பாடு சட்டத்திற்கு முரணானதா, அது சட்டத்தின் அடித்தளத்தில் சார்ந்து உள்ளதா என்பதே. நான் கூறுவது ஏதேனும் இந்தப்பிரச்சினையின் நான்குபக்க வரையரைக்கு வெளியே செல்கிறதா, அதைமட்டுமே நான் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் ஆய்வுக்கும் எடுத்து செல்லலாம். அதைத்தவிர நான் வேறு எந்தவித கருத்தைப்பற்றியும் சிந்திக்கத் தேவையில்லை.

உண்மையில், ரோஹிங்கியர் பிரச்சினை மனுவில், உச்சநீதின்றம் இந்தப்பிரச்சினையில் தலையீடு செய்தல் தேவையா, சரிதானா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஒரு காரணமும் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில், குடியரசுத்தலைவரின் தனிச்சிறப்புரிமை, அரசாங்க நிர்வாகத்தின் முன்னுரிமை என்று உள்ளதெல்லாம் முக்கியமாக சில அரசாங்க கொள்கைகள் அல்லது செயற்திட்டங்களில், நீதிமன்றம் தலையீடு செய்தல் தவிர்க்கப்படும். ஏனெனில், அதற்கான வல்லமை, நிபுணத்துவம் இல்லாதது ஒரு காரணமாகவும், அரசாங்க செயற்திட்டங்கள் நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படத் தேவையில்லை என்பது இன்னொரு காரணமாகவும் இருக்கலாம்.

ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்பொழுது அதற்கான அதிகாரம் வழங்கியதும், தங்கள் தொலைநோக்கின்படி ஆளுவதற்கு உரிமை உள்ளது. கொள்கைவிளக்க அறிக்கைகள் அதற்கான செயற்திட்டங்கள் யாவும் என்னிடம் உள்ளன. நான் அவற்றை செயலாக்க தீவிரமாக முற்படுகிறேன். ஏதேனும் தடங்கல் இருந்தால் 2019ல் பூர்த்தி செய்வேன். அப்போது உங்கள்பதில் தாருங்கள். அதுவரை உங்களது வாய்ப்புக்கு காத்திருங்கள். இப்போது உங்களது ஆட்சியல்ல, அதிகாரமும் உங்கள் கையில் இல்லை. எனவே, ஏதேனும் செயற்திட்டங்கள் இப்போது முலாக்கப்பட்டால் அவற்றை சட்டரீதியாக மட்டுமே எதிர்க்கலாம். அதை விடுத்து வேறு வழி, போக்கிடம் உங்களுக்கு இல்லை. உங்களது ஒழுக்கத்தற்பெருமை சார்ந்த அபத்தம், வெட்டிப்பேச்சு குப்பைத் தொட்டியை மட்டுமே நிறப்பும்.

Leave a Reply

%d bloggers like this: