அதற்குமுன் நாம் ஒரு விஷயத்தை நன்கு கவனிக்கவேண்டும். நாம் வசிக்கும் நாடு ஓர் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட முழுமையான நாடு. சில அனுமானங்களும், உண்மை எனக்கொள்ளும் நிலைகளும் நாட்டுஅரசு என்ற சொல்லில் பொருளாக அடங்கும். எனவே உதாரணத்திற்கு எனது நாட்டின் எல்லையைக் காக்கும் அதிகாரமும், கடமையும் இருக்கிறது. உலகமயமாக்குதல் என்று சொன்னால் ஒருநாட்டின்அரசு என்ற கோட்பாடு நடைமுறையில் மாறிவிடுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு இப்போதைய BREXIT.. இங்கிலாந்து தேசம் ஐரோப்பிய பொருளாதார கூட்டணியை விட்டு விலகிய நிகழ்வு. நமது நாட்டின் அடையாளச்சுவடுகளை அழிக்க இயலாது. மதம்சார்ந்த நடைமுறைகளை, தேசீய நடைமுறைகளை அழிக்க முடியாது. தேசபக்தி என்ற கோட்பாட்டைப்பற்றி விவாதத்திற்கு உட்பட்ட கேள்வி ஒன்றும் எழுப்ப இயலாது. தேசாபிமானம் என்பது தேவையற்றதாகக் கருத முடியாது. இவற்றை நாம் நன்கு உணரவேண்டும், ஏனெனில் இந்த விவாதத்தின் கரு உள்ளது. நமது நாட்டின் வரலாற்றில் பல குடியேற்றங்களது தாக்கம் இருந்திருக்கிறது என்பதை எதிர்தரப்பு வாதத்தில் பயன்படுத்தக்கூடும். என்னுடைய twitter ஊடகத்தில் ஒரு வாசகர் கூறுகிறார், கி.பி.700ம் ஆண்டிலிருந்து 1947ம் ஆண்டுவரை, முகாலயர் ஆதிக்கத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிவரை நடந்த நிகழ்வுகள் யாவும் குடியேற்றங்களே. அவரைப்பற்றி பரிதாபப்படுவதா, அல்லது எள்ளி நகையாடுவதா என்று தெரியவில்லை. அசடு, புறக்கணித்துவிடு, என்று சொல்லிக்கொண்டேன். ஒருவர் ஆதிக்கத்திற்கும், நாடு பெயர்ச்சிக்கும், குடியேற்றத்திற்கும், வேறுபாடுகளை உணரவில்லை என்றால், அவருடன் வாதிடுவதில் பயனில்லை. கடவுள்தான் காப்பாற்றவேண்டும். ஒருவேளை நமது கல்விமுறையில் சீரிய மாற்றங்கள் தேவை என்று நம்மால் உணரமுடிகிறது.
எனவே பிரச்சினை என்னவென்றால், இந்த இரண்டையும் கலந்து இணைவித்தல். இதில் ஒரு சௌகரியம் உள்ளது. சட்டரீதியாக ஒரு வலுவான ஆதாரம் இல்லையெனில், நீங்கள் தவறு என்ற முடிவு நிச்சயம், அப்போது மாற்று கருத்துக்குத் தாவி, உலகமயமாக்குதல், சமுதாயங்கள் ஒருங்கிணைப்பு என்பது போன்ற வாதங்கள் வெளிப்படும். ஒருநாட்டுஇனம் என்ற கோட்பாடு இப்போதும் ஏற்கத்தக்க ஒன்று. அதை எப்படியும் தள்ளுபடி செய்யமுடியாது. கண்டிப்பாக ஓர்நாட்டினம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. நமது இந்தியநாடு பெரும்பாலும் குடியேற்றங்களால் உருவான ஒன்று எனக்கூறினால், ஆரிய சமுதாயம் என்ற ஆதிக்கத்தை, விடுத்து அதை குடியேற்றமாகவே கருதலாம். அறிவுபூர்வமாக ஏற்காவிட்டாலும் ஒரு அற்பகாரணமாக இருந்தால் கூட அதை ஏற்கக்கூடும். ஆனால் இந்த ஆரியர்களின் ஆக்கிரமிப்பையும், எவ்வாறு ஆரியவம்சத்தினரின் அடக்குமுறையால் அட்டூழியம் செய்து திராவிடர்களை அடக்கிஆள முயன்றனர் என்பதையும் மறந்து வெறும் இவை நாடு பெயர்ச்சி,குடியேற்றம் என்று கூறினால், ஒவ்வொரு ஆதிக்கமும், ஆக்கிரமிப்பும் வெறும் குடியேற்றமாகும். இது வாதத்திற்கு ஒவ்வாது. இதற்கு தனியாக சீரிய நுண்ணறிவு தேவையில்லை. IQ 120 அல்லது 150 இதற்கு அவசியமில்லை. இரண்டையும் சமனாக்கி வாதிடமுடியும் என்பது சாத்தியமல்ல.
நாம் மிகத்தெளிவாக உணரவேண்டியது ஓர் நாட்டினம், அரசு என்பது மறுக்கமுடியாத அடிப்படைக்கோட்பாடு. இதை தள்ளிவைத்து மேற்கொண்டு வரும் பிரச்சினைகளை ஆய்வது ஒருசாரமற்ற செயல்முறைகளை அலசுவதற்கு ஒப்பாகும்.சிலர் கூறலாம்…. நீங்கள் இன்னும் dinosaur மாதிரி பழைய கற்காலத்தில் உழலுகிறீர்கள், நீங்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை, முற்போக்க எண்ணம் கொள்ளவில்லை, பரந்த மனப்பான்மை இல்லை, உலகமயமாக்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றெல்லாம் கூறி, அதனால்தான் நான், எனது நாடு, எனது நாட்டினம், அரசு, நாட்டு எல்லைகள் எனறெல்லாம் சொல்வதாகவும், சண்டை, போர் இவற்றால் என்ன பயன் என்றுகூட வாதிடுவர். ஆனால் திட்டவட்டமாகச்சொல்வேன், போர் அல்லது எந்தவித சச்சரவும் நம்நாட்டினம், அரசு என்ற அடிப்படையிலேதான் வெளிநாட்டு விவகாரங்கள் மூலம் வெளிப்படுகின்றன. உண்மையில் சில உள்நாட்டு விவகாரங்கள்கூட இந்த அடிப்படை கோட்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கலாம் என்பதில் துவங்குகின்றன. Naxalism நெக்ஸல் கம்யூனிஸ்ட்டானாலும், வெளிநாட்டு எதிரியானாலும், இரண்டுமே நமது நாட்டை எதிர்க்கும் செயல்களாகவே கருதப்படும்.
இந்தியா என்ற நாட்டினம், அரசு, என்பது ஒரு புனிதமான கோட்பாடு இந்தியமக்கள் யாவருக்கும். இந்த பிரச்சினையை எவ்வாறு அணுகவேண்டும் என்று கேட்கும்போது நமது சுதந்திர நாட்டின் எல்லையைக்காக்கும் உரிமையின் அடித்தளம் இந்த நம்நாட்டினம் என்ற கோட்பாடுதான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.