ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2021
Home > இஸ்லாமிய ஆக்ரமிப்பு > இந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை

இந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை

எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The Citizenship Act என்ற சட்டம் ஒன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வேறு சட்டங்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது. 1985ம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தம் ஏற்பட்டபின், விதி எண் 6A என்பது அதில் சேர்க்கப்பட்டது.

இதன் பின்னணியை நான் சற்று விளக்குகிறேன். மூன்று காலகட்டங்கள் மனதில் கொள்ளவேண்டும். 1947ல் இருந்து 1966 வரை, 1966ல் இருந்து 1971 வரை, 1971ல் இருந்து தற்சமயம் வரை. 1966ம் ஆண்டிற்கு முன்பிலிருந்து அஸ்ஸாமில் வாழ்ந்துவரும் மக்கள் நமதுநாட்டு குடிமக்கள், அஸ்ஸாம் குடிமக்கள், எனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். 1966 லிருந்து 1971 வரை விதி எண் 6A Citizenship Act ன்படி தீர்வு செய்யப்படும். 1971ம் ஆண்டிற்குப் பின் IMDT Act செயற்படும். IMDT Act நீக்கப்பட்டுவிட்ட நிலையில், 1971ம் ஆண்டிற்குப்பின் குடியேறிய மக்களது வெளியேற்றம் Foreigners Act ன்படியே செயற்படும். 1966ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டுவரை அஸ்ஸாமில் குடியேறிய மக்களுக்காக அவர்களைக்காக்க சிறப்பு அம்சமாக விதி 6A இயற்றப்பட்டது.

சுமார் 2009ம் ஆண்டில் இந்த தனிசிறப்பான வழிவகை செய்யும் விதியை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் ஓர் நீதிப்பேராணை விண்ணப்பம் 2012ல் அஸ்ஸாம் ஸன்மிலித மஹாசங்கத்தின் பேரில் தாக்கல் செய்யப்பட்டது. 17 ந்தேதி டிசம்பர் மாதம் 2014ல் புதிய அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தீர்ப்பு வெளியிடப்பட்டது. உண்மையில் வேறொரு

ஆட்சி அதிகாரம் கைப்பற்றியதும் மனச்சாட்சியின் அடிப்படையில் இம்மாதிரி நெருக்கடியான பிரச்சினையில் நிலைப்பாடு மாறக்கூடும். ஆனால் அரசாங்கம் இந்த சிறப்பு வழிவகை செய்யும் விதி எண் 6Aவை நியாயமானதாகக்கூறியது. உச்சநீதிமன்றம் இந்த விதிமுறையை நீக்கம் செய்யவில்லை, அதை பிற்பாடு ஆய்வு செய்வதாகக்கூறிவிட்டு, தங்கள் அபிப்ராயத்தை வெளியிட்டது. அதன்படி 1960ம் ஆண்டிலிருந்து இந்த பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்து அரசாங்கத்தின் தலையீட்டை நாடியபோது, இன்றுவரை வெளியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொகை வெகுகுறைவு, லட்சத்தைத்தாண்டாது. ஆனால் மதிப்பிற்குறிய SK Sinha 1998-99ல் அறிக்கை சமர்ப்பித்தபோது சட்டத்திற்குப்புறம்பாக குடியேறிய மக்கள்தொகை சுமார் 14 லட்சம். அப்போது சட்டவிரோதமாகக் குடிபுகுந்த வங்கதேசமக்கள் டில்லிமாநகரில் சுமார் 3 லட்சம் பேர்.

இது நடந்தது 1998-99ல், டில்லிவரை சென்றுவிட்டனர். அரசாங்க தகவலின்படி இந்த எண்ணிக்கை 2 அல்லது 3 கோடி இருக்கலாம். அதாவது மேலும் 50% கூட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இத்தகைய மக்கள்தொகை உள்ளடங்கிய பிரச்சினை இது. உச்சநீதி மன்றத்தில் ஓர் தீர்ப்பில் தெளிவாகச்சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று வெளித்தள்ளும் காரணக்கூறுகள், மற்றொன்று உள்ளிழுக்கும் காரணக்கூறுகள். வெளித்தள்ளும் காரணக்கூறு வங்கதேசத்தின் பொருளாதார நிலையில் தொடங்குகிறது, உள்ளிழுக்கும் காரணக்கூறு நம் இந்திய நாட்டின் வாக்குரிமை வங்கியாக இந்த மக்களை சரிக்கட்டும் அரசியல்வாதிகளிடமிருந்து தொடங்குகிறது. இதற்காகவே இந்த மக்களைப் பரிதாபக்கண்ணோட்டத்தில் பார்ப்பதாக நீதிமன்றமே விமர்சித்துள்ளது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: