வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2020
Home > சட்டவிரோத குடியேற்றம் > கொடூரமான முறைதவறிய செயலைத்தவிர்த்தல் என்ற கொள்கைக்கு’அகதிகளை இந்தியாவில் வரவேற்று, குடியேற்றி, மறுவாழ்வு அளித்தல்’ என்பது மட்டும் பொருளாகாது

கொடூரமான முறைதவறிய செயலைத்தவிர்த்தல் என்ற கொள்கைக்கு’அகதிகளை இந்தியாவில் வரவேற்று, குடியேற்றி, மறுவாழ்வு அளித்தல்’ என்பது மட்டும் பொருளாகாது

என்னிடம் இப்படி ஒரு உதாரணம், நம்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான மூன்று தீர்ப்புகளின் ஒப்பதல் பெற்றுள்ள நிலையில், நான் கூறுவது எந்தவிதத்தில் உண்மைக்கோ, அல்லது சட்டத்திற்கோ புறம்பாக உள்ளது என்று புரியவில்லை. அதனால் அவர்கள் தற்பொழுது கூறுவது, நம்நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டம் இல்லை என்றாலும், சர்வதேச சட்டதிட்டங்களின் வழக்கப்படி, எல்லா நாகரிகம் வளர்ந்த நாடுகளும், அதை மதித்து இம்மாதிரி பிரச்சினைகளை அணுகவேண்டும் என்று கூறுகின்றனர்.

அப்படியானால் இந்த நிலைமேற்கொள்ள என்ன கோட்பாடு சர்வதேச சட்டதிட்டத்தில் உள்ளது என்று கூறுங்கள், இந்த மக்களை அகதிகள் என்று நாம் கருதுவதற்கு. இந்தக் கொள்கைக்கு ‘கொடூரமான முறைகேடான செயலைத்தவிர்த்தல்’ என்றுபெயர் என்பர். இதன் பொருள் என்ன? உதாரணமாக, ஒரு பெண்மணி பாகிஸ்தானிலிருந்து இந்தியா வருகிறார், அங்குள்ள துன்புறுத்தல் தாங்கமுடியாமல், தனது மதம்சார்ந்த நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வழியின்றி, அந்த சுற்றுச்சூழல் சௌகரியப்படாததால் இந்தியா வருகிறார். நீங்கள் அவரை வற்புறுத்தி மீண்டும் பாகிஸ்தான் அனுப்பஇயலாது. இதுவே அந்த கோட்பாடு. எந்த எரியும் நெருப்பிலிருந்து தப்பி வந்தாரோ, அதே நெருப்பில் மறுபடி தள்ளிவிடக்கூடாது என்பதுதான் குறிக்கோள். இந்த அளவுகோலின்படி ரோஹிங்கியர்கள் எங்கு துன்புறுத்தப்பட்டனர்? மயன்மாரிலிருந்தா அவர்கள் பாரததேசம் ஓடிவந்தனர்? வங்காளதேசத்தில் அவர்களுக்கென்று அத்தனை பெரிய அகதிகள் முகாம்கள் உள்ளனவே? நாம் அவர்களை திருப்பி அங்கு அனுப்பினால் அவர்கள் துன்புறுத்தப்பட்ட இடத்திற்கு அனுப்புவதாக ஆகுமா? எனவே     கொடுமையான முறைகேடான செயலைத்தவிர்த்தல் என்ற சர்வதேச கொள்கையை மீறியதாக ஆகாது அல்லவா?

இரண்டாவதாக, உங்கள் பிரச்சினை எந்த இடத்தில் துன்புறுத்தல் தொடங்கியதோ, அந்த அரசாங்கம் பொறுப்பு ஏற்க ஐக்கிய நாட்டு நிறுவனம் மற்ற அண்டை நாடுகளின் உதவியோடு மற்ற தேசங்களுக்குப் பரவும் நிலையை தடுக்கவேண்டும். துன்புறுத்தல் உண்மையாயின், இது ஒரு சமூகம் உயிர்வாழும் பிரச்சினையாகவும் இருக்கையில் இந்த நடவடிக்கை அவசியமாகிறது. இத்தகைய சூழ்நிலையில் 1971-72ல் இந்திராகாந்தி அமெரிக்காவிடம் வாதிட்டார். பாகிஸ்தானைப் பிரவுபடுத்த எனக்கு ஒருபோதும் எண்ணமில்லை. லட்சக்கணக்கான மக்கள்தொகை எங்கள் நாட்டில் புகுந்து ஓர் சமுதாய நெருக்கடி நிலைமையையும் மனிதாபிமான நெருக்கடி நிலைமையையும் உருவாக்கி உள்ளனர். நான் இதை சமாளித்து ஆகவேண்டும் என்று கூறினார். அதேபோன்ற சூழ்நிலையில் இப்போது கடைபிடிக்கும் வழியும் வேறல்ல. இந்திரா காந்தி அம்மை கூறியது சரியென்றால் இப்போது வேறொருவர் கூறுவதால் தவறாகிவிடுமா? எது எப்படி இருந்தாலும் ஒரு நடுநிலைவகித்து இப்பிரச்சினைக்கு வழிதேடினால், பல்வேறு விதங்களில் சமாளிக்க இயலும். அடிப்படை குறிக்கோள் அகதிகளுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பை குறைக்கவேண்டும். நிவாரண உதவி, பணஉதவியாகவும், பொருள் உதவியாகவும், மனிதாபிமான அடிப்படையில் இருக்க இடங்கள், முகாம்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அடிப்படை வசதிகள் மூலமாகவும், சௌகரியங்களுடன் சுகாதார வசதிகளுடனும் இருக்கவும், தேவையான இம்மாதிரி எல்லாவற்றையும் செய்தல் நலம். அதைவிடுத்து அகதிகளை வரவேற்று, குடியேற்றி உங்கள்நாட்டில் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற ஒன்றை மட்டும் வலியுறுத்துவது சரியல்ல.

Leave a Reply

%d bloggers like this: