ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19, 2021
Home > சட்டவிரோத குடியேற்றம் > இந்தியாவில் அகதிகளைக் கையாள்வதில் தரமான செயல்முறை விதிகள்

இந்தியாவில் அகதிகளைக் கையாள்வதில் தரமான செயல்முறை விதிகள்

 

 

நம்நாட்டில் அகதிகளைக் கையாள ஒருசட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் தரமான செயல்முறை விதிகள் 2011ம் ஆண்டிலிருந்து உள்ளன, நான் நினைக்கிறேன் 29 ந்தேதி டிசம்பர் 2011ல் இருந்து, பிறகு NDA அரசாங்கம் அவற்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. நான் அந்த தரமான செயல்முறை விதிகள்பற்றி சொல்கிறேன் ஏனெனில் அது உபயோகப்படும், மேலும் அதை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல்செய்துள்ளோம்.

6ம் தேதிஆகஸ்ட்டு மாதம் 2014ம் ஆண்டில் இந்தியஅரசாங்கம், உள்துறை அமைச்சரகம் வெளியிட்ட பொதுஅறிக்கையின்படி அகதிகள் விவகாரத்தில் நம்நாட்டின் நிலைப்பாடு என்ன என்பது புரிகிறது. தயவுசெய்து கூர்ந்து கவனியுங்கள்.

இந்தியா ஐக்கிய நாட்டு சபையின் 1951ம் ஆண்டு அகதிகள் பற்றிய மாநாட்டில் பங்கு பெறவில்லை. ஒப்புதலும் அளிக்கவில்லை. இது முதலாவது குறிப்பீடு. எனவே அந்த மாநாட்டில் கையொப்பம் இட்ட நாடுகள் ஏற்றுக்கொண்ட அனைத்து கடமைப் பொறுப்புகளும் நம்மை பாதிக்காது. அவற்றை நாம் ஏற்கவும் இல்லை, அந்த மாநாட்டில் நாம் அங்கத்தினரல்ல, கையொப்பமும் இடவில்லை. இது ஒருபுறம்இருக்க.

இரண்டாவதாக 1967ம் ஆண்டு உடன்பாட்டு வரைமுறை. ஒவ்வொரு ஆவணத்திற்கும் சர்வதேச ஆவணத்திற்கு ஒரு மூலப்பதிவேடு உண்டு, அதன்பின்னர் மாநாட்டில் வரைமுறைகள் அறிவிக்கப்படும். 1951ம் ஆண்டு மாநாட்டிலோ அல்லது 1967ம் ஆண்டு வரைமுறைகள் வெளியிட்டபோதோ நாம் உறுப்பனர்கள் அல்ல, கையொப்பமும் இடவில்லை. இது ஒரு முக்கிய குறிப்பீடு. அந்த வரைமுறை நிபந்தனைகள் நம்மைக் கட்டுப்படுத்தாது. இரண்டாவது தேசிய சட்டம் ஒன்றும் அகதிகள் விவகாரங்களைப்பற்றி இல்லை. இதுவே உண்மையான நிலவரம் இந்திய அரசாங்கத்தைப் பொருத்தவரை. 29-12-2011ல் மத்திய அரசு எல்லா மாநில அரசுகளுக்கும், வெளிநாட்டவர் நம் நாட்டில் அகதிகள் என்று உரிமை கோரினால், என்ன தரமான வரைமுறை விதிகளைப் பின்பற்றவேண்டும் என்று விளக்கி பொது அறிவிப்பு வெளியிட்டது. அண்ணே, உங்கள் மாநிலத்தில் ஒரு சட்டவிரோதமாக வந்த அகதி இருந்தாலோ அல்லது வந்துகொண்டே இருந்தாலோ, நீங்கள் என்ன செய்யவேண்டும் நிலைமையை சமாளிக்க என்பதற்கு செயல்முறை விதிகள் அடங்கிய ஓர் முன்வடிவம் உள்ளது. அதைப்பின்பற்றலாம் நீங்கள் என்று கூறியது. இந்த முன்வடிவே இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

ரோஹிங்கியர்களைப் பொருத்தவரை நாம் இந்த தரமான வரைமுறை விதிகளைப் பின்பற்றி அகதிகளை நடத்தியுள்ளோமா என்ற ஒரே கேள்விதான் மிஞ்சும். அதுமட்டுமே சட்டபூர்வமான ஒழுங்குமுறை அகதிகளைப்பற்றி உள்ளது. இதன் அடிப்படை குறிக்கோளின்படி, மாநிலஅரசாங்கங்கள் முதல்நோக்கில் எத்தனை நபர்கள், வெளிநாட்டவர், சமூகம்,மதம், பாலினம், நாட்டினம் அல்லது இனத்தோற்றம் காரணமாகத் துன்புறுத்தல் அனுபவித்து, பயம்கொண்டு வந்தவர்கள் என்று ஆய்ந்து, பாதுகாப்பு ஒப்பாய்வுக்குப்பின், மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சரகத்திற்கு, நீண்டகால நுழைவு உரிமைச்சீட்டு வழங்க சிபாரிசு செய்யலாம். இம்மாதிரி வெளிநாட்டவர் தனியார்துறையில் வேலைவாய்ப்பு தேடலாம். எனவே மாநில அரசு மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சரகத்திற்கு அவர்களது விவரங்களை முன்வைக்கலாம். உள்துறை அமைச்சரகம் பாதுகாப்பு ஆய்வு செய்தபின் நீண்டகால நுழைவுரிமைச்சீட்டு வழங்க முடிவு செய்யும்.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.