ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17, 2021
Home > சட்டவிரோத குடியேற்றம் > அஸ்ஸாம் – சட்டவிரோதமாக குடியேறியமக்களை அடையாளம்காணும் நியாயசபை சட்டம் – எவ்வாறு வெளியேற்றத்தை மிகவும் சிக்கலாக்கியது

அஸ்ஸாம் – சட்டவிரோதமாக குடியேறியமக்களை அடையாளம்காணும் நியாயசபை சட்டம் – எவ்வாறு வெளியேற்றத்தை மிகவும் சிக்கலாக்கியது

 

அஸ்ஸாம் மாநிலத்தின் சமூகஇனத்தை காப்பாற்றுதல் ஒரு பெரிய பிரச்சினையாக வெகு காலமாக, இந்திய கூட்டரசுடன் இணக்கம் செய்தகாலத்திலிருந்தே, இருந்துள்ளது. அயல்நாட்டவர் சட்டம் 1946 க்குப்பிறகு, குடியேற்றவாசிகள்  வெளியேற்றல்சட்டம் 1950 இயற்றி அதை அஸ்ஸாமுக்கும் அமுலாக்கப்பட்டது. அதற்குப்பிறகும் முக்கியமான விளைவு ஒன்றும் ஏற்படாத நிலையே உள்ளது. நமது அடையாளம், தனித்துவம் எல்லாம் பிறரும் கைப்பற்றி ஏராளமான மக்கள் நம் தேசத்தில் புகுந்துகொண்டு வாழத்தொடங்கவே, நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே இந்திய அஸ்ஸாம் மாணவர்கள் கூட்டமைப்பு அமளி செய்யத்தொடங்கி, அதன் விளைவாக அஸ்ஸாம் உடன்படிக்கை 15 ந்தேதிஆகஸ்டு 1985ல் ஏற்பட்டது.

இதற்குமுன் வேறொரு நிகழ்வு. அரசாங்கம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணல் நியாயசபை சட்டம் 1983 ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி வெளிநாட்டவர் நியாயசபை, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நியாயசபை, என்பன நிறுவி அவர்களை வெளியேற்றம் செய்வதற்கான ஆயத்தம் செய்தது. அயல்நாட்டவர் சட்டம் 1946, குடியுரிமைச்சட்டம் 1955, இவற்றுடன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணல் நியாயசபை சட்டம் 1983ல் தோன்றியது, ஆக வெளிநாட்டவர் சட்டம் ஒன்று இருக்கையில், அவர்களை வெளியேற்றம் செய்ய ஏன் மீண்டும் ஒரு சட்டம் 1983ல் தேவையா? வெளிநாட்டவர் சட்டத்தின்படி வெளியற்றம் செய்ய நியாயசபைக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில், இரண்டு சட்டங்களின் தேவை ஏன்? இந்திய குடிமகன் அல்லாத ஒருவரை அயல்நாட்டவராகக் கருதி வெளியேற்றம் செய்ய வரையற்ற அதிகாரம் இருக்கையில், சட்டவிரோதமாக புகுந்த நபர் யார், அயல்நாட்டவரல்லவா, அவரை வெளியேற்ற ஏன் மற்றொரு சட்டம்?

சற்று சிந்தித்தால் இதன் உட்கருத்து விளங்கும். IMDT Act 1983 அரசாங்கத்தின்மீது புதிய சுமையை ஏற்றிவைத்துள்ளது. ஒருநபர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதை ருசுப்படுத்தும் கடமை அரசாங்கத்தின் மீதாகிறது. முதலில் அயல்நாட்டவர் சட்டத்தின்கீழ் வெளியேற்றம் செய்தல் இப்போது மேலும் கடினமாகிவிட்டது. அந்த சட்டத்தின் குறிக்கோளையே தோல்வியுறச்செய்துவிட்டது. அஸ்ஸாம் மாணவர் கூட்டமைப்பு பலமுறை மாநில அரசாங்கத்திற்கு மனு அளித்து, மாநில அரசாங்கம் மத்திய அரசுக்கு எழுதி, வெளியேற்றம் செய்ய முக்கிய தடங்கல் உண்மையில் அதே சட்டம் எது இந்த வெளியேற்றத்தை முறைப்படுத்த ஏற்பட்டதோ அதுவே முக்கிய தடங்கல் என்று கூறியது. மீண்டும் மீண்டும் இவ்வாறு கூறிய பின்னர், ஓர் உச்சகட்டத்தை அடைந்தது. அஸ்ஸாம் உடன்படிக்கை 1985ல் ஏற்பட்டது, ஆனால் 1983ம் ஆண்டு சட்டம் நீக்கப்பட்டதா என்றால், அதுதான் இல்லை, தொடர்கிறது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: