செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021
Home > சட்டவிரோத குடியேற்றம் > இந்தியா வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியசமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தாகவேண்டும்

இந்தியா வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியசமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தாகவேண்டும்

 

நமது நாட்டில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம், நமது பொருளாதார வசதிகள் பற்றாக்குறை உள்ளது, ஆதலால் மேலும் குடிபுகும் மக்களை ஏற்க சாத்தியமில்லை என்ற வாதத்தை நான் மேற்கொள்ளமாட்டேன். மன்னிக்கவும், அந்த நிலைப்பாடு நான் ஏற்கமாட்டேன், ஏனெனில் துன்புறுத்தலால் விரட்டியடிக்கப்பட்டு வந்த இந்திய சமுதாயத்தினருக்கு இங்கு அடைக்கலம் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அது எவ்வாறு தவறாகும்? அதே அடிப்படையில் இந்தியக்குடியுரிமைச்சட்டம் மாற்றி அமைக்க உள்ளது. நாம் கூறுவது என்னவென்றால் குறிப்பிட்ட சிறுபான்மையினர் இந்துக்கள், பாரசீகர்கள், ஜைனமதத்தினர், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள் அல்லது சாக்மாஸ் யாராயிருப்பனும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் என்ற மூன்று நாடுகளை தெரிந்தெடுத்து அங்கிருந்து குடியேறுபவர்களுக்கு நெடுங்கால நுழைவு உரிமைச்சீட்டு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. அவர்களை இங்கேயே குடிபுக அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறோம்.

நாம் வரலாற்று உண்மைகளை மறக்கக்கூடாது. பார்க்கபபோனால் அவர்கள் இந்த உபகண்டத்தைச் சார்ந்தவர்களே ஆவர். அவர்களுக்கு ஏதேனும் ஒருபகுதியில் வாழ வகைசெய்யவேண்டும் என்றபோது, ஏன் அவர்களது தாய்நாடான இந்தியாவிலேயே குடிபுக அனுமதிக்கக்கூடாது? மேலும் சட்டபூர்வமான வாதம் இவ்விஷயத்தில் உண்டு. நான் இவர்களில் யாரை வரவேற்றால் நமது சமூகம் பாதிக்கப்படாது என்று உணர்ந்து அவர்களுக்கே சம உரிமை வழங்க முடிவு செய்வேன். எனது இந்த அதிகாரம் அரசியலமைப்பு, சுய உரிமை குடியாட்சியின்படி தளையற்ற அதிகாரம், இதன்படி யாரை இங்கு குடிபுக அனுமதிக்கலாம், யாரை மறுத்து வெளியேற்றம் செய்யலாம் என்று ஆய்ந்து அதற்கான உள்ளார்ந்த காரணம் என்ன கோட்பாடு என்ன என்று விளக்கலாம்.

எனவே இம்மாதிரி இந்திய சமுதாயத்தினரை, யாரால் எவ்வித சமூகபாதிப்பும் ஏற்படாது என முடிவு செய்து, வரவேற்று குடிபுக அனுமதித்தால், சட்டவிரோதமானதோ அல்லது அரசியலமைப்புக்குப் புறம்பான செயலோ அல்ல. சிலர் உடனே முட்டாள்தனமாக நீங்கள் ஜோராஷ்டிரியர்கள், திபெத்தியர்களை வரவேற்றுள்ளீர்களே என்று கூறக்கூடும். ஆம், உண்மையில் அவர்களால் எந்த சமூகபாதிப்பும் இல்லை என்று விளக்கலாம். ஆனால் சுமார் 40000 நபர்கள் நம்நாட்டினுள் நுழைந்து அவர்களில் சுமார் 16000 பேர் பிரச்சினை மிகுந்த, கொதித்துக் கொண்டிருக்கும் ஜம்மு, காஷ்மீரத்தில் புகுந்து, அவர்களை உள்நோக்கத்துடன் ஆதரிக்கும் ஜிஹாதி வெறியர்களும், பிரிவினை கோரும் கட்சியினரும் சேர்ந்தால், அந்த நிலைமை வெகு மோசமானதாகும். உச்சநீதிமன்றம் இதைத்தான் அரசியல் காரணங்கள் பல இப்பிரச்சினையில் உள்ளன என்று கூறியது போலும். அதுவே உண்மையும்கூட.

இவற்றை மனதில் கொண்டு நாம் குடியேறிய மக்களின் அடையாளம் ஆய்ந்து யாரை வரவேற்கலாம், யாரை நிராகரிக்கலாம் என்ற தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் முற்படலாம், இந்த நிலைப்பாடு நமது அயல்நாட்டவர் சட்டம் தரும்அதிகாரம். மேலும் உச்சநீதிமன்றத்தின் இரண்டு திருப்புமுனை தீர்ப்புகள் இதை உறுதி செய்துள்ளன. 1991ம் ஆண்டில் ஒரு தீர்ப்பில் சட்டவிரோதமாக நுழைந்த நபர்களை வெளியேற்றம் செய்ய அரசாங்கத்தின் தளையற்ற அதிகாரம் உண்டு எனக்குறிப்பிட்டது. நான் கூறுவதெல்லாம் இதன் மறுபக்கமே, அரசாங்கத்திற்கு யாரை வரவேற்கலாம் என்பதற்கும் தளையற்ற அதிகாரம் இருக்கிறது. என்னிடம் தனிச்சிறப்புரிமை வெளியேற்றம் செய்ய இருப்பின், அதே உரிமை வரவேற்பதற்கும் பயன்படும். இது மறுபக்க உரிமை. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் சொல்லவேண்டுமானால் கொல்வதற்கு அனுமதி உண்டு எனில் கொல்லாமல் இருப்பதற்கும் அனுமதி உண்டு.

என்னைப் பொருத்தவரை, அயல்நாட்டவர் சட்டம் ஒன்றுமட்டுமே இந்தப்பிரச்சினைக்கு தீர்வுகாண பிரயோகிக்கப்படவேண்டும். அல்லது அதுவே உயரிடம் பெற்றிருக்கவேண்டும். அரசியலமப்பச்சட்டத்தின் 14ம் 21ம் விதிமுறைகளை மேற்கோள் காட்டுவது சரியல்ல. உச்சநீதிமன்றமே அதே தீர்ப்பில் அந்த விதிமுறைகளின்படி உரிமைகளும், சலுகைகளும் பெறத்தகுந்தவர்களே அவர்கள் என்று கூறியது. அதற்கு அர்த்தம் அவர்களுக்கு குடியிருப்பு வசதி இந்த நாட்டில் செய்துதரப்படும் என்பதல்ல. அப்படி செய்தால் நாட்டினுள் நுழையும் ஒவ்வோர் நபரும் அரசியலமைப்புச் சட்டம் விதிஎண் 21 மற்றும் 14 அடிப்படையில் சலுகைகள், உரிமைகள் எதிர்பார்ப்பர். இதன் விளைவு அரசாங்கத்தின் அதிகாரம் அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் ஒன்றுமில்லாமல் போய், வெளியேற்றம் செய்ய இயலாமல்போகும்.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: