திங்கட்கிழமை, மார்ச் 30, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > சத்ரபதி சிவாஜியின் அடிப்படைத்திருத்தங்கள், ஹிந்தவி ஸ்வராஜ்யாவின் குறிக்கோளை உருவாக்கியமுறை

சத்ரபதி சிவாஜியின் அடிப்படைத்திருத்தங்கள், ஹிந்தவி ஸ்வராஜ்யாவின் குறிக்கோளை உருவாக்கியமுறை

 

சத்ரபதி சிவாஜி பல்வேறு நிர்வாக, படைத்துறை அடிப்படை மாற்றங்கள் புகுத்தினார். அவை மராட்டியர்களின் நலனுக்கு பிற்காலத்தில் மிகவும் உதவியது. திரு. ராமச்சந்திர பந்த் என்ற ஆசிரியரின் ‘ஆக்ஞா பத்திரம்’ என்ற நூலில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவரைப்பற்றி பின்னர் கவனிப்போம். அவர் சத்ரபதி சிவாஜியின் அரசாங்கத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த ஒரு’அமத்யா’. ‘அஷ்டப்ரதான் என்பவர்களுள் மிகவும் இளவயதினர். பிற்காலத்தில் மராட்டியர்களுடைய மிக்க செல்வாக்கு பெற்று, அரசியலில் முக்கியத்துவம் வாய்த்து விளங்கினார். சத்ரபதி சிவாஜி காலத்தில் செய்த மிகமுக்கிய மாற்றங்கள் அவருக்குப் பின்னர் ஆட்சிக்குவந்த பல தலைமுறைகளுக்குப் போரிட வெகுவாகப்பயன்பட்டன. ஒவ்வொரு கோட்டையும் ஒரு தனி சிற்றரசாகக் காணப்பட்டது. இந்த நிலையை மாற்றி ‘வட்டந்தரி நிறுவனத்தை ஒழித்து, கோட்டையை தங்கள்வசம் வைத்திருந்த ‘தேஷ்முக்’ அரசர்போல் இருந்த முறையை மாற்றி, ஊதியம் பெறும் படைத்துறையாக மாற்றினார். இந்திய நாட்டிலேயே அந்நாளில் மிக அதிகமான ஊதியத்தொகை வழங்க வழிசெய்தார் அரசாங்க பொதுத்துறை அலுவலர்களை விட மிக அதிகமான ஊதியத்தொகை இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே ‘வட்டந்தார்’ யாவரையும் அவருடைய படைத்துறையில் ஈர்க்க எளிதாயிற்று. இந்தபுதுமுயற்சி 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய முன்னோடியாக விளங்கிற்று.

சத்ரபதி சிவாஜி மேலும் முகலாய ‘மன்ஸப்தாரி’ முறையில் ஒரு பலவீனம் கண்டார். காஷ்மீரத்திலிருந்து கல்யாண் நர்மதாநதி வரை அந்த ஆட்சியும் வல்லரசும் இருந்த போதிலும் அந்த ‘மன்ஸப்தார்’ களை ஒரு குடையின் கீழ் இல்லாத நிலையைக் கண்டார். ஒவ்வொரு மன்ஸப்தாரும் மற்றவனைத்தாக்கி எவ்வாறு தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்கலாம் என்றே நினைப்பர். 500 மன்ஸப்தாரியிலிருந்து ஒரு தாக்குதலில் 1000 மன்ஸப்தாரியாக்குவதே நோக்கமாக இருக்க, ஒரு முகலாய வல்லரசை விரிவாக்கவோ முகலாயகொடியின் கீழ் போர் புரிவதாகவோ ஒருமுனை ஊக்கம் ஏதும் இல்லை. அது வெறும் தனிப்பட்ட நபர்களது போட்டிமனப்பான்மையில் பணபலம், படைபலம் இவற்றுக்குத்தக்கவாறு வல்லரசை விரிவாக்கம் செய்வதாகவே இருந்தது.

எனவே சிவாஜி இதை நன்கு உணர்ந்து ஊதியம் பெறும் இராணுவத்தை நிறுவி வட்டந்தாரி முறையை முற்றிலும் மாற்றியபின், இரண்டாவதாக ஹிந்த விஸ்வராஜ்ய என்ற கோட்பாடை உருவாக்கினார். நாம் இப்போது ஒரு குறிக்கோள் மேற்கொண்டு போரிடுவோம், இதுவரை ஒர் அரசனுக்காகப் போரிடுவது போல் அல்லாமல் இருக்கட்டும் என்றார், படைவீரர்கள் ஒரு நாட்டரசன் களத்தில் வீழ்ந்தால், எல்லோரும் சரணடைவது போல இல்லாமல். அப்படித்தான் இரண்டாம் பானிப்பட்போரில், ஹேமசந்திரன் ஓர் அம்பினால் வீழ்த்தப்பட்டதும், போர்வீரர் அனைவரும் தலைதெரிக்க நாலுதிசைகளில் ஓடி ஒளிந்தனர். ஒரு குறிக்கோள் ஏதும் இல்லை, அரசன் இல்லையேல் நாமும் இல்லை என்று, அல்லது யார் கையில் கோல் இருக்கிறதோ அவன் மேய்க்கும் மாட்டுமந்தை போல். ஹேமசந்திரன் என்ற ஒருவன் கையில் கோல் இல்லையேல் போர்க்களம் முழுவதும் வீழ்கிறது.

சத்ரபதி சிவாஜி இந்த உணர்ச்சிப்பாங்கான கருத்தை நுட்பமாகக் கையாள ஸ்வராஜ்யா என்ற கோட்பாடை உருவாக்கினார். நீங்கள் இந்த குறிக்கோளுடன் போரிடுகிறீர்கள், நம் நாட்டின் கொடியைக்காக்கப் போரிடுகிறீர்கள், இந்த நாடு என்னைப் பற்றியது மட்டுமே அல்ல, இந்த ஸ்வராஜ்யா என்பது கடவுளின் விருப்பம், என்னுடையதல்ல, சத்ரபதி சிவாஜியின் ஸ்வராஜ்யா அல்ல, கடவுளின் விருப்பத்திற்காகப் போராடுவீர், என்றெல்லாம் கூறி அடுத்த 27 ஆண்டுகாலம் இந்த குறிக்கோளை போரில் வாழவைத்தார். இது உலகரீதியான செயலின் வெளிப்பாடு.

Leave a Reply

%d bloggers like this: