சத்ரப சிவாஜி முடிசூட்டு விழாவிற்குப்பின்னர் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டு, அனேகமாக செஞ்ஜி வரை சாம்ராஜ்யத்தை விரிவாக்கி நிறுவினார். இது அவருடைய பேரரசின் மைய உள்பகுதியாகும். ஸ்வராஜ்யா கார்வாரிலிருந்து நாஸிக்கிற்கு வடக்கே அனேகமாக குஜராத் எல்லைவரை பரந்து விரிந்திருந்தும், 1676ம் ஆண்டில் சிவாஜி தென்திசை நோக்கி போர்வினைப்பயணம் மேற்கொண்டார். ஒரு காரணம் பொருள்வளம் நிறைந்து விளங்கிய அடில்ஷாஹி அரசு. அடில்ஷாஹி அரசும், குதூப்ஷாஹி அரசும் பாதி சுயாதீனமாக செயல்படும் இந்து அரசர்களாக விளங்கி பொருள்வளம் மிக்க நாடுகளை ஆண்டுவந்தனர்.
இரண்டாவதாக, சிவாஜி ஸ்வராஜ்யாவிற்குத் தெற்கில், வடக்கிலிருந்து வரும் தாக்குதல்களைச் சமாளிக்க கடைசிகட்டமுயற்சிக்காக சில இடங்கள் தேவைப்படும் என நினைத்தார். கொப்பாலாண்ட், வேலூர், செஞ்ஜி, போன்ற இடங்களைக் கைப்பற்றினார். துரதிஷ்டவசமாக அவருக்கும் மாற்றாந்தாய் மகன்களான தஞ்சை மராட்டியர்களுக்கும் சிறு பூசல் நிலவிவந்தது. ஆயினும் அதைசரிசெய்து சிவாஜி முழு நிலப்பரப்பையும் கைப்பற்றினார். செஞ்ஜிக்கோட்டையை ஒரு குண்டுவெடிப்பும், ஒரு போர்வீரன் கூட கொல்லப்படாமலும் கைப்பற்றினார் என்பது ஒரு சுவாரசியமான தகவல். அப்துல் மகம்மத் ஸையத் என்ற ஹப்ஷி, எதியோப்பிய அதிகாரி அடில்ஷாஹியிடம் செஞ்ஜியில்வேலை பார்த்துவந்தான். சிவாஜி முற்றுகையிட்டபோது அவன் கோட்டையின் உள்ளே இருந்தான். பீஜப்பூரிலிருந்து ஷேர்கான் லோதி என்பவனை சிவாஜி அழைத்து அவர்களுக்குள் கலகம் மூட்டி செஞ்ஜிக்கோட்டையை சுலபமாகக் கைப்பற்ற முடிந்தது. இந்த கோட்டை பிற்காலத்தில் சத்ரபதிராஜாராம் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. 1680ம் ஆண்டில் சிவாஜி மரணமடைந்தார். அதற்கு முன் அவர் எல்லா நடவடிக்கைகளையும் சமயோசிதமாக முன்கூட்டியே தீர்மானித்து, தேவையான இடங்களைக் கைப்பற்றி போர் தொடங்க இருந்த நிலையில் 1680ம் ஆண்டு உயிரிழந்தார்.