திங்கட்கிழமை, ஜனவரி 27, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜி கோர்ப்பாடே ஔரங்கசீப்பின் கூடாரத்தை திடீர் தாக்குதல்

மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜி கோர்ப்பாடே ஔரங்கசீப்பின் கூடாரத்தை திடீர் தாக்குதல்

 

ஒருசமயம் ஔரங்கசீப்பின் போர்முகாமிலேயே மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜிகோர்ப்பாடே ஒரு துணிகரமான திடீர்தாக்குதல் நடத்தினார். ஔரங்கசீப்பின் முகாம் அப்போது பூனாவிற்கு அருகே கோரேகாம் என்ற இடத்தில் தங்கி சக்கன் கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஸாந்தாஜிகோர்ப்பாடேயும் அவரது உளவாளிகளும் சேர்ந்து அந்த முகாமின் முழு வடிவமைப்பையும் துல்யமாகக் கண்டுபிடித்தனர். தேவகிரி யாதவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டுப்பார்க்கலாம். அவர்களுக்கு 15 மைல் தொலைவில் நடப்பவை தெரியவில்லை. ஸாந்தாஜி கோர்ப்பாடே போர்முகாமின் எல்லா வடிவமைப்பையும் வேவு பார்த்து, ஔரங்கசீப்பின் கூடாரம் எங்குள்ளது, படைவீரர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்பன முழுதும் அறிந்துகொண்டார்.

ஒருநாள் நடுநிசியில் முகாமிற்குள் சுமார் 50 போர்வீரர்களுடன் நுழைந்தார். அப்போது ஒரு காவலாளி தடுத்து நிறுத்தினான். திட்டம் என்னவென்றால் ஔரங்கசீப்பின் கூடாரத்திற்குள் நுழைந்து அவனது தலையைச்சீவி விஷால்காட்டிற்கு எடுத்துவர வேண்டும். சில மராட்டிய சர்தார்கள் ஔரங்கசீப்பிடம் பணி செய்துவந்தனர். நாங்கள் அன்னாருடன் வேலை செய்வோர் எனக்கூறிவிட்டு உள்ளே நுழையவேண்டும், உடன் காவலாளிகளைக் கொன்றுவிட வேண்டும் என்பது திட்டம்.

துரதிஷ்டவசமாக ஔரங்கசீப் அச்சமயம் கூடாரத்தில் இல்லை. ஸாந்தாஜிகோர்ப்பாடே பேரரசுக்கூடாரத்தை நெருங்கி அதன்கயிறுகளை அறுத்தெரிந்தார். அந்தக்கூடாரமோ சுமார் 500மீ நீளம், அதன் உச்சியில் தங்கத்தினால் ஆன கோபுரக்கூம்புகள், ஔரங்கசீப்பின் கூடாரம்எனத்தெரிய, ஸாந்தாஜி கோர்ப்பாடே கயிறுகளை அறுத்ததோடு, தங்ககூம்புகளையும் வெட்டி எறிந்தார். இதற்குப்பின் ஒரு பெரிய அபாய ஒலி எழுப்பப்பட்டது ஏனெனில் பேரரசின் கூடாரம் தரைமட்டமான காட்சி முகாமில் தெரிந்தது. கோர்ப்பாடே உயிரோடு தப்பி சிங்ககாட் வந்து சேர்ந்தார்.

Leave a Reply

%d bloggers like this: