திங்கட்கிழமை, ஜூலை 26, 2021
Home > இந்திய நாயகர்கள் > சத்ரபதி சிவாஜி பேரரசர் > மராட்டியர்களின் கொரில்லா போர் நடவடிக்கை முகலாயர்களை பல இடங்களில் வீழ்த்தியது

மராட்டியர்களின் கொரில்லா போர் நடவடிக்கை முகலாயர்களை பல இடங்களில் வீழ்த்தியது

1690ம் ஆண்டுகளில் மராட்டியர்கள் மிகவும் பலம்வாய்ந்த படைகளை நிறுவினர். பல்வேறு இடங்களிலும் அவர்கள் இந்த கொரில்லா போர்நடவடிக்கை மூலம், திடீர் தாக்குதல் ஓடிஒளிதல் என்ற முறையைப்பின்பற்றி எதிரிகள்படைகளின் தேய்மானத்திற்கு வழிவகுத்தார்கள்.

முகலாயரின் பணப்பேழைகள் விரைவில் காலியாகத் தொடங்கின. சுமார் 15000 படைவீரர்களை ஒவ்வொரு வருடத்திலும் இழக்க நேர்ந்தது. அக்பர் காலம் தொடங்கி ஷாஜஹான், ஜெஹாங்கீர் வரை கஜானாக்கள் வைப்பறைகள் திறக்காமல் இருந்த நிலைமாறி செங்கோட்டையில் அவை திறக்கப்பட்டு பணம் செலவழிக்க அவசியம் ஏற்பட்டது. பல இடங்களில் முகலாய படைத்தலைவர்களை மராட்டியர் கைப்பற்றி மீட்புப்பணம் தண்டல் செய்து, அவர்களை விடுதலை செய்து பின்வாங்குவர். வேறு இடங்களில் கோட்டை முற்றுகையிடப்பட்டிருந்தால், போரைநிறுத்தி, பணத்திற்கு கோட்டையை விற்றுவிடுவர். அந்தப்பணத்தை வைத்து படைபலத்தைப் பெருக்கி மீண்டும் வந்து கோட்டையைக் கைப்பற்றுவர். பெரும்பாலும் முகலாயர்கள் முற்றுகைப் போர்நடவடிக்கையிலேயே ஈடுபட்டனர். டோர்ணா கோட்டையை மட்டுமே தங்கள் வசம் கைப்பற்றினர். மராட்டியர் மாதிரி அதிரடிப்படை தாக்குதலோ, நடுநிசித்தாக்குதலோ, குறைந்த படைபலத்துடன் போரிடவோ முன்வரவில்லை. அனேகமாக முற்றுகைப்போர் மட்டுமே செய்தனர், எனவே அதிகபட்ச காலஅவகாசம் தேவைப்பட்டது, மீண்டும் கைப்பற்றிய கோட்டை வெகு சீக்கிரமே இழக்கவும் நேர்ந்தது.

1690ம் ஆண்டு காலகட்டத்தில், முகலாய படைத்தலைவர்களும், சர்தார்களும், போரில் தொடர்ந்து அக்கறை செலுத்த முன்வரவில்லை, ஏனெனில் ஏற்கனவே சுமார் 15 அல்லது 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து போரிட்ட காரணத்தால் அலுப்பு ஏற்பட்டது. பல போரில் தினசரி தோல்வியைச் சந்திக்க வேண்டிவந்தது. மராட்டியருக்கு அவர்களை திசைதிருப்பி இழுத்துவந்து மீட்புப்பணம் பெற்றபின் விடுவிப்பது எளிதாயிற்று. ஔரங்கசீப் இவ்வாறு 15,16,18 ஆண்டுகள் போரிட்டும், அதிக  அளவில் இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை, கைப்பற்றிய இடங்களையும் வெகுகாலம் தக்கவைக்க இயலவில்லை.

சுமார் 1698ம் ஆண்டில் மகாராஷ்ட்ர தேசத்தில் நிலைமையில் சற்று முன்னேற்றம் கண்டதும், சத்ரபதி ராஜாராம் செஞ்ஜிக்கோட்டையை விட்டுக்கிளம்பினார். அந்தக்கோட்டை முற்றுகையிடப்பட்டிருந்தும் தப்பி வெளியேறினார். அவரது தப்பி ஓடுதலைப்பற்றி பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையில் அவரது ராஜதந்திர நயமும் அடங்கும். சத்ரபதி ராஜாராம் ஜூல்பிகார்கான் என்ற முகலாய படைத்தலைவனிடம், தன்னை விடுவித்தல் எவ்வாறு அவனுக்குப் பயன் உள்ளதாகும் என்று நயம்படபேசி ஒப்புதல்பெற்றார். அவனும் ஏற்கனவே 8 ஆண்டுகள் முற்றுகையிட்ட நிலையில், அதைத் தொடர தயக்கம் காட்டினான். ஔரங்கசீப்பிற்கு வயது சுமார் 92, எப்போதும் இறக்கநேரிடலாம். முகலாய சர்தார்களின் அதிகாரம் ஓங்க வாய்ப்பு உண்டு. மராட்டியருடன் சுமுக உறவு பின்னால் உபயோகப்படும் என எண்ணினான். முற்றுகையைத் தொடரவில்லை. ராம்ஸேஜ்ஜில் 6 வருடம், செஞ்ஜியில் 8 வருடம் என 14 ஆண்டுகள் இந்த இரண்டு கோட்டைகளுக்கு மட்டும் போரிட்ட முகலாயர்கள் மஹாராஷ்ட்ரத்தில் சுமார் 300 கோட்டைகளைக்கைப்பற்றினர்.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.