வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2021
Home > இஸ்லாமிய ஆக்ரமிப்பு > ஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்

ஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்

 

ஔரங்கசீப் தனது 85ம் வயதில் ஒரு கடைசி போர்ப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து 1700ம் ஆண்டில் மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முழுவதுமாக எல்லா கோட்டைளையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை நிலைநாட்ட மேற்கொண்டான். அது ஒரு எளிதான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில் மராட்டியர்களிடமிருந்து ஒருதகவலும் இல்லை. 25 வயதான ஒரு பெண்மணி தலைமை தாங்கிய இடத்திற்கு விரைந்தான். அவனது கணக்கு முற்றிலும் தப்பிதமானது. ஒரு கோட்டையின் அருகே போருக்குச்சென்றபோது மகாராணி தாராபாய் தலைமையில் படைவீரர்கள் தயார்நிலையில் இருந்தனர். கில்தீர்கள் சுமார் ஓராண்டுகாலம் முகலாயப்  படையை எதிர்த்துப்போரிட்டனர். கடைசியில் ஔரங்கசீப் கோட்டைகளை மிக அதிகமான விலைகொடுத்து வாங்கத் தயாராயிருந்தான். போரில் ஜெயிக்காமலும் எப்படியாவது கைப்பற்றினால் போதும் என்ற கொள்கை அடிப்படையில். இது அவனது கடைசி பண்டகம் வாங்கும் பட்டியலுக்கு ஒப்பான செயல்.

விஷால்காட் கோட்டைக்கு 2 லட்சம்,சிங்ஹகாட் கோட்டைக்கு 50000, வேறு சில கோட்டைகளுக்கு 70000 என்று விலை கொடுத்தான். அந்நாளில் ஒரு படைவீரனுக்கு மாத வருவாய் 4 அல்லது 5 ரூபாய் மட்டும். இதைக்கணக்கிலிட்டால் மிக அதிகமான விலை கொடுத்தது விளங்கும். எனவே படைபலத்தை அதிகரித்து மீண்டும் கோட்டைகளைக் கைப்பற்றுவது எளிதாயிற்று. ராஜ்காட் கோட்டையின் வெளிப் பிராகாரங்களைக் கைப்பற்றியபின், சுமார் 15 நாட்கள் உள்கோட்டைப் பிராகாரம், பாலேகில்லா மட்டும் எதிர்த்துநின்றது. எப்படியானாலும், ஔரங்கசீப் மிகஅதிகமான பணத்தை செலவிட்டு இந்தக்கோட்டைகளைக் கைப்பற்றினான், டோர்ணாவைத் தவிர்த்து. டோர்ணா கோட்டையில் மட்டுமே,முகலாய சர்தார்கள், சத்ரபதி சிவாஜியின் படைவீரர்களைப்போல், நூலேணிகள் வழியாக கோட்டை மதில்களின்மீதேறி, போரிட்டு கோட்டையைக் கைப்பற்றினார்கள். பெரும்பாலான மற்ற கோட்டைகள் யாவையும் முற்றுகையிட்டு, பின்னர் அதிகவிலை கொடுத்து வாங்கியவையாகும்.

தாணாஜி ஜாதவ் 1703ம் ஆண்டு வடக்கில் குஜராத் வரை சென்று ரத்தன்பூர் என்ற  இடத்தில் ஓர் பெரும் முகலாயப்படையை எதிர்த்துப் போரிட்டார். அதில் முகலாயப்படைக்கு பெரிய அதிரடிச்சேதம் நேர்ந்தது. இந்த தோல்வியால் முகலாயப்படைகள் அனேகமாக குஜராத்திலிருந்து முழுவதுமாக விரட்டியடிக்கப்பட்டது. இதன்பின்னர் காந்தேராவ் தாபாடே மிகவலிமை பெற்று ஆட்சிசெலுத்தினார். முகலாயரின் இந்தப் படுதோல்வியால், ராஜ்புதானா, மால்வா போன்ற இடங்களில் முகலாய ஆட்சிக்கு எதிராக கலவரங்கள் ஏற்பட்டன. கடைசியில் ஔரங்கசீப் மேற்குமஹாராஷ்டிரத்திலிருந்து பின்வாங்கி கர்நாடகத்தின் வடக்குப்பகுதியில் வாகின்கேரா என்ற இடத்திற்குச் சென்றான்.

பேராட்கள் சிறந்த துப்பாக்கி வீரர்கள்.தாணாஜி ஜாதவ் அவர்களுடன் சேர்ந்துகொண்டு முற்றுகையை முறியடித்தார். ஏற்கனவே மராட்டியர்கள் வசமிருந்த பல கோட்டைகள் பணத்திற்கு கைமாறியவை மீண்டும் மகாராணிதாராபாய் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டன. சுமார்  1705ம் ஆண்டுக்குள் ஔரங்கசீப் தன்வசம் இருந்த தக்ஷிணத்தில் பெரும்பாலான கோட்டைகளை இழந்தான், கடைசிப்போர் பயணத்தில் வாங்கியவற்றையும் சேர்த்து. அவன் இந்நிலையில் அகமத்நகருக்குப்பின்வாங்கினான்.

வட இந்தியாவில் படைக்கலவரம் மூண்டது. முகலாயரிடம் ராஜபுத்திர சிப்பாய் ஒருவருமில்லை. இருந்த முகலாய சர்தார்கள் இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் மட்டுமே. இவ்வளவு காலமாக கொடுக்கப்பட்ட மாநிலங்களைப்பராமரித்து வந்ததால் அவர்களது பலம் ஓங்கியது. ஔரங்கசீப்பிடம் தேவையான படைபலம், பொருள்பலம் இல்லாத நிலையில் அந்த சர்தார்களை அடக்கமுடியவில்லை. ஔரங்கசீப்பலஇடங்களைக் கைப்பற்றியதும் செய்த முதல் காரியம் அந்த இடங்களின் பெயர்களை மாற்றியதுதான். பல அராபிய,பெர்ஷிய மொழிப் பெயர்களை வைத்தான், பிரம்மபுரி என்ற இடத்தில் 4 வருடங்கள் முகாம் அமைத்தபோது, அதன் பெயரை இஸ்லாம்புரி என மாற்றினான். இந்த நான்கு வருடங்களில் அவனது படைகள் சிதறி, பொருள்வளம் குன்றி, அவனது சர்தார்கள்தோல்வியுற்று, இம்மாதிரி சரிவு நிலையிலும் 1702ம் ஆண்டில் ஜெஜூரியில் இருந்த காந்தோபா கோயிலைத்தாக்க முற்பட்டான், தென்னிந்தியாவில் அவன் ஆதிக்கத்தில் இருந்த இடங்களில் ஜஸீயா என்ற வரியை சுமர்த்தினான்.

எனவே அவன் சில காலம் தங்கிய இடங்களைப்பெயர் மாற்றம் செய்வது வழக்கமாகிவிட்டது, அஜீம் தாரா,இஸ்லாம்புரி, ரெஹ்மான்பக்க்ஷ் என்பன போல். சிங்ஹகாட் பக்க்ஷிண்டாபக்க்ஷ்,கடவுள் தந்த பரிசு. ஆனால் மராட்டியர்கள் இந்தக்கோட்டைகளை மீண்டும் தங்கள்வசம் எடுத்த உடனேயே அவற்றின் பழைய பெயர்களுக்கு மாற்றிவிட்டனர். முகலாய பேரரசு நொறுங்கும் தருணத்தில் ஔரங்கசீப் அகமத்நகரில் முகாம் ஏற்படுத்தினான்.

ஔரங்கசீப் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் பெரும்படை, 5 லட்சம் பேர்  அடங்கிய ஒன்றின் தலைவன். இப்போது அகமத்நகரில், தாணாஜி ஜாதவ், நேமாஜிஷிண்டே தன்னைத்தாக்க வருவதாகக் கேள்விப்பட்டதும், அவனது தவீஸுடன் குரான் ஓதுவதை மேற்கொண்டான். அவனுடைய படைத்தலைவர்களுக்கும் அவற்றைக் கொடுத்து, உங்களுக்கு இவை மராட்டியர்களுடன் செய்யும் போரில் பயன்படும், என்று கூறினான். இதுவே முகலாய சக்ரவர்த்தியால் முடிந்தது. 1706ம் ஆண்டில் அவனது முகாம் தாக்கப்பட்டது. தாணாஜி ஜாதவ், நேமாஜிஷிண்டே இருவரும் ஔரங்கசீப்பை தாக்காமல் விட்டுவிட்டனர். ஏன் தெரியுமா? அவர்கள் இப்போது மிக்க வலிமைபொருந்தி இருந்ததால், சுலபமாக வடக்கு குஜராத்தில் மால்வா, போபால் வரை செல்லமுடிந்தது. டில்லியிலிருந்து குஜராத்திற்கு வரும், பணம், பொருள்கள் யாவற்றையும் வழியிலே மறித்து, தங்கள் படைக்கு உபயோகப்படுத்த வசதியாக இருந்தது ஔரங்கசீப்பைக் கொன்றுவிட்டால் இது நடக்காது. அவனை உயிரோடு விட்டுவைப்பதில் பலன் அதிகம் என உணர்ந்தனர்.

1707ம் ஆண்டில் ஔரங்கசீப் மரணம்எய்தினான். ஒருவருக்கும் போரைத்தொடர்வதில் நாட்டம் இல்லை. அவனுக்கு நான்கு மகன்கள், எல்லோரையும் டில்லிக்குஅழைத்துச் சென்றுவிட்டனர். போரில் பல்வேறு பொறுப்பேற்றிருந்தனர், ஆயினும் டில்லிக்கு வரவழைக்கப்பட்டனர். கோலாபூரில் மகாராணிதாராபாய்க்கு ஓர்சிலை வைக்கப்பெற்றது.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.