செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2021
Home > இந்திய நாயகர்கள் > சத்ரபதி சிவாஜி பேரரசர் > அச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்

அச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்

 

தேவகிரிக்கோட்டைப்போர் எவ்வாறு நேர்ந்தது, தோல்வியுற்றது என்று கூறினேன். சிவாஜி பல்வேறு கோணத்தில் கோட்டைகளின் கட்டமைப்பை மாற்றினார். வெவ்வேறு நுழைவாயில்களும், வெளியே செல்வதற்கான வாயில்களும் உண்டாக்கப்பட்டன மகாராஷ்டிர மாநிலத்தில். இப்போது கோட்டைகள் விஷயத்திற்கு வருவோம். உதாரணமாக ஜூன்ஜார்மச்சியில் டோர்னாகோட்டையில், ஒருநுழைவாயில் இங்கிருந்தால், மற்றொன்று எதிர்புறம் புத்லாமச்சியில் காணலாம்.

பிறகு கோட்டை கட்டமைப்பிலும்சில மாறுதல் செய்யப்பட்டது. ராஜ்காட் கோட்டையில் இரட்டைச்சுவர்கள் நிறுவப்பட்டன. தேவையான தானியங்கள் சேமிக்கப்பட்டதுடன், கூடுதல் தானியவகைகள் பயிரிடவும் வழிவகை செய்து ஏராளமான நீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தத்தில் கோட்டைகள் சுயதேவை பூர்த்தி செய்து போரிடவும் ஆயத்தமாக இருந்தன. ராம்ஸேஜ் கோட்டை நாசிக்கின் வடக்கே உள்ள சிவாஜியின் ஒரு சிறிய கோட்டை. ஔரங்கசீப் தாக்கியபோது அந்த சிறிய கோட்டை மட்டும் தனியாக 6ஆண்டுகாலம் எதிர்த்து நின்றது. சத்ரபதி சிவாஜியின் திட்டங்களால் மராட்டிய கோட்டைகளின் செயல்திறன்கள் வலிமை வாய்ந்து விளங்கின.

முகலாயரின் பிடியிலிருந்த தப்பியதும் 1668ம் ஆண்டில், சிவாஜி தன்னைத்தேடி தக்ஷிணதேசம் வருவார்கள் என எதிர்பார்த்தார். அதற்கு முன்னமே சிலமுக்கிய மாறுதல்கள் கொணர்ந்தார். ஔரங்கசீப் வந்து தனது செயல்பாடுகள் எல்லாம் நாசமடையும் என்றும் எதிர்பார்த்து, 1670ம் ஆண்டிலேயே முன்னெச்சரிக்கையாக சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் வரை கோட்டைகளின் பராமரிப்புக்காக ஒதுக்கி வைத்திருந்தார், ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் வரை படைவீரர்கள் ஊதியத்திற்கும் அவர்களது பயிற்சிவசதிகளுக்கும் ஒதுக்கிவைத்திருந்தார். இந்த சேமிப்பு பணம் யாவும் ஒவ்வொர் கோட்டைக்கும் முறையே விநியோகம் செய்தார். 5000 சிங்ககாத் கோட்டைக்கு, 10000 டோர்ணா கோட்டைக்கு, 5000 ராய்காட் கோட்டைக்கு, என்று பட்டியலிட்டு வழங்கினார். ஏனெனில் அவருக்குத்தெரியும் முகலாயப்படை போரிடவந்த உடன் ராஐ்காட்போன்ற ஒரு மையமான இடத்திலிருந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் கடினம் என்று. கோட்டைகள் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்ட நிலையில், பணத்திற்காகவும், போதிய அவகாசம் இல்லாமையாலும், தொடர்பு கொள்ளத் தேவையான வசதியின்மையாலும், போரில் தோற்க நேரிடலாம், கோட்டையை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, போதிய பணத்தை ஒவ்வொரு கோட்டைக்கும் முன்ஜாக்கிரதையாக கொடுத்து வைத்ததால்,  முற்றுகையின்போது நீண்டகாலம் எதிர்த்து சமாளிக்க ஏதுவாயிற்று, பராமரிப்புக்கும் புதிய படைவீரர்களை உடனே சேர்ப்பதும் எளிதாயிற்று.

அவர் மேலும் இரட்டை ஜோடி கோட்டைகளையும் ஏற்படுத்தினார். ஒரு கோட்டை போரில் விழும் தருவாயில் இருப்பின், அல்லது படைகளுக்கான வழங்குபொருள் தேவையிருப்பின் அருகில் உள்ள ஜோடிகோட்டையிலிருந்து உதவிகள் வந்து சேரும். இதற்காகவே பல ஜோடிக்கோட்டைகள் உருவாக்கப்பட்டன. புரந்தர்காட், வஜ்ரகாட் ஜோடி, ராஜ்காட், டோர்ணா ஜோடி, ராம்சேஜ், த்ரிம்பக் ஜோடி, என்பன காணப்படுகின்றன. த்ரிம்பக் கோட்டையிலிருந்து உதவிப்பொருட்கள் ராம்சேஜ் கோட்டைக்கு அனுப்பப்பட்டதால்தான், சுமார் 6ஆண்டுகாலம் தொடர்ந்து போரில் ஈடுபட முடிந்தது. சிவாஜியின் பேரரசின் நடவடிக்கைகளின் ஒரு சாராம்சம் இது.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.