ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2021
Home > ஆரியன் ஆக்கிரமப்பைப்பற்றிய ஜோடனை > கீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது

கீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது

 

சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில் அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல் அரிது, என்ற நிலை. எனவே மதுரைக்கு வந்து சேரும் வியாபாரப் பொருள்கள் வரும் பெருவழிச்சாலைகள் எங்குள்ளன, மதுரையிலிருந்து ஒருநாள் பயணத்தில் சென்றடையக்கூடிய தொலைவில் உள்ள இடம் ஏதேனும் அகழாய்வுமுகாம் அமைக்க ஏதுவாகுமா என்று யோசித்து அந்த தொல்பொருள்  ஆய்வாளர் கீழடி வந்து சேர்ந்தார். அவருக்கு தங்கச்சுரங்கமே கிடைத்ததுபோல் கீழடியில் ஒரு நகரக்குடியிருப்பைக் கண்டெடுத்தார். வெகு நேர்த்தியான முறைகளைக் கையாண்டார் அந்த ஆய்வாளர். பல்வேறு கலைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைவிட சுவாரசியமான தகவல் யாதெனில் ஆய்வாளர்கள் சுமார் 4.5மீ ஆழம் வரை கீழடியில் தோண்டச்செய்தனர்.

ஆனால் தோண்டலின் மாதிரிமண் அமெரிக்காவில் ப்ளாரிடாவுக்கு கார்பன் அளவு மூலம் காலகட்டத்தை ஊகிக்க அனுப்பும்பொழுது 2மீ ஆழத்தின் மண்ணை மட்டுமே அனுப்பினர். அதன்மூலம் சுமார் கிமு 300 காலகட்டம் என்ற விவரம் கிட்டியது, பொதுவாக எல்லோருக்கும் சம்மதம். ஆய்வாளர்கள் சந்தோஷம் இந்த கண்டுபிடிப்பு பொதுவாக தெரிந்த விவரத்தை உறுதிப்படுத்துவதாக இருந்ததால் ஒருவரும் மறுக்க வாய்ப்பில்லை. ஆயினும் என் மண்டையில் ஒரு குடைச்சல். ASI சுமார் 4.5மீ ஆழம் தோண்டியதாக அறிக்கை வெளியிட்டதன்படி மேலார்ந்த மண் 2017ம் ஆண்டாக கணக்கிட்டால் 2மீ ஆழமண் 2200 ஆண்டுகள் என கார்பன்அளவை தெரிவிக்கிறது. அதை மேற்கொண்டு ஒவ்வொரு மீட்டர் ஆழமும் சுமார் 1100 ஆண்டுகள் என்ற கணக்கில் 4.5மீ ஆழமண்ணிற்கு சுமார் 5000 ஆண்டுகளாக அதாவது கிமு 3000 என்று கணக்கிடவேண்டும். ASIஏன் நடு ஆழமண்ணை மட்டும் கார்பன் அளவைக்கு எடுத்துக் கொண்டது என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற கலைப்பொருள்கள் ஒரு வரம்புக்கான காலகட்டத்தைக் குறிப்பன,சுமார் கிமு 3000 ஆண்டிலிருந்து சுமார்கிமு500 ஆண்டுவரை என்று கூறியிருக்கலாம். அதுவே உண்மையான விவரணமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் நடந்த ஆய்வின் பின்னணியை மனதில் கொண்டால் இது ஆச்சரியப்படவேண்டிய விஷயம் அல்ல. அக்டோபர் 2017ல் தமிழ்நாடு அரசு கீழடி அகழாய்வை தானே மேற்கொண்டது. தொல்பொருள் ஆய்வாளர்களை கீழடியிலிருந்து இடமாற்றம் செய்தது. இதனால் கீழடி அகழாய்வு விவரணங்களை முழுவதும் தங்கள்வசம் மேற்கொள்ளும் எண்ணம் மிகத்தெளிவாகிறது. கீழடி சுமார் கிமு 3000 ஆண்டுகால கலாச்சாரம் என்று பிரசுரித்தால் ஒரு நெருக்கடியான நிலையை சந்திக்கநேரும். திராவிடர்கள் சுமார் கிமு 500 ஆண்டிலிருந்து ஏன் பள்ளிப்பாடப்புத்தகங்களில் தோன்றியுள்ளன என்பதை விளக்க வேண்டும். அதன் பின்னர் வேதவகுப்புகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் சுமார் கிமு 300 ஆண்டு காலகட்டத்தில் மட்டுமே நகர்ப்புற குடியிருப்புகள் இருந்தன என்பதை விளக்கவேண்டும். எனவே நான் நினைக்கிறேன், அவர்கள் எளிதான வழியைத் தேர்ந்தெடுத்தனர் என்று. நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். ஆனால் இந்த ஆய்வின் காலகட்ட நிர்ணயம் நம் முன் வளர்ந்து நிற்கிறது.

அரிக்கமேடு கண்ணாடி  தொழிலகம் புதுச்சேரி அருகில் இருந்த ஒன்று, மிகவும் ரகசியமாகக் காப்பாற்றப்பட்டுவந்தது. புதுச்சேரிக்குச்சென்று நீங்கள் ஒரு ரிக்ஷாவிடம் அரிக்கமேடு செல்லவேண்டும் என்றுகூறினால் அவன் தலையைச்சொறிவான். அவனுக்குத் தெரியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒருநபர் என்னை காரில் அழைத்து செல்வதற்கு உடன்பட்டார். சிறிது தூரம் சென்றபின் பாதை சரிவர இல்லை. வயல்வெளிகளைக் கடந்து அரிக்கமேடு சென்றடைந்தோம். என்னை ஒருபுகைப்படம் எடுத்தார். இதைப்பற்றி ‘Periplus of the Erithrean Sea’ என்ற மாலுமிகளின் வணிகக் கையேட்டில் காணப்படுகிறது. அதில் ரோமாபுரி மாலுமிகளுக்கு எங்கெல்லாம் வணிகத்துறைமுகங்கள் உள்ளன என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் மஸ்லின் துணி, கண்ணாடி மணிகள் இவற்றில் வாணிபம் செய்தனர். மார்டைமர் வீலர் என்ற நபர் முதன்முதலாக இங்கு அகழாய்வில் ஈடுபட்டார். அவர்  குறிப்பின்படி சுமார் கிமு 100 ஆண்டிலிருந்து கிபி 100 ஆண்டுவரை இருக்கலாம் என்று கூறினார். அகஸ்டஸ் ஸீஸருடைய மார்பளவு உருவச்சிலை ஒன்று கிடைக்கப்பட்டதும் அதை கிமு 30 என்று கணித்தபின் ஆய்வின்முடிவில் கிமு 100 கிபி 100 என்ற காலகட்டமாக வெளியிட்டார்.

விமலா பெக்லிஎன்ற தொல்பொருள் ஆய்வாளர் 1989 முதல் 1992 வரை இருந்தவர். கிமு200 லிருந்து கிபி 700 வரை  இருக்கலாம் என கணித்தார். இந்திய பசிபிக் கடல் பகுதிகள் யாவற்றிலும் கண்ணாடிமணிகள் காணப்பட்டன. கூகிள் இணையதளத்தில் ஏராளமான தகவல்கள் இதைப்பற்றி உள்ளன. கண்ணாடிமணிகள் ஜப்பான், கொரியா, சீனா, பாலி, இந்தோனேஷியா முதலான நாடுகளில் காணப்பட்டன. அவற்றில் ரசாயன முத்திரைகள், அரிக்கமேடு கண்ணாடி தொழிற்சாலைகள் பெயரில், காணப்பட்டன. அதாவது அரிக்கமேடு தொழிற்சாலைகள் உபயோகித்த கனிமங்கள், மணற்சத்து இவை காணப்பட்டன. இவற்றை கிமு 300 என்ற காலகட்டமாகக் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து கலாச்சாரம் இதற்கும் முற்பட்டது என ஊகிக்கலாம். விமலா பெக்லியின் நாட்குறிப்பில் ஏழாவது அகழ்வெட்டியில் மிகத்தொல்மையான கலைப்பொருள் கிமு 200 ஆண்டு காலகட்டத்தை ஒட்டியது கிடைத்ததாகவும் அதற்கு கீழே தோண்டுதல் நீரோட்டம் காரணமாக தடைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். சக்திவாய்ந்த விசைக்குழாய்களாலும் தண்ணீரை வெளியேற்றமுடியாததால் அகழாய்வு கைவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கிமு 200 ஆண்டு என்பது எனவே மிகவும் பழமையானது என்று கூறமுடியாது, தொழில்நுட்ப இயலாமையால் மேலும் ஆழம்செல்லாததால் வந்த முடிவு எனலாம். இன்று ASI அந்த அகழாய்வை முடித்துவிட்டு, இப்போது அந்த இடத்தில் ஒரு தென்னந்தோப்பு  தென்படுகிறது. அதன் கீழே அரிக்கமேடு அகழாய்வு தொல்பொருள் எஞ்சியவை மறைந்துள்ளன.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: