திங்கட்கிழமை, ஜனவரி 27, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > முகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்

முகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்

 

ஒருவருடைய குற்றப்பழியோ அல்லது அப்பாவித்தனமோ  முக்கியமானதல்ல. ஒரு நீதிபதியாக தீர்ப்பளிக்க வேண்டுமாயின் அது அப்போதைக்குத் தேவைப்படலாம். ஆனால் பொதுவாக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அது முக்கியமல்ல. ஔரங்கசீப்பின் கொடூர மனப்பான்மையினால் எல்லோருக்கும் ஏற்படும் அதிக கோபம் ஒரு உதாரணம். இத்தகைய எதிர்விளைவு ஒரு வீணானமூச்சு, அநாவசிய செயலாற்றல். ஔரங்கசீப்பின் குணாதிசயம் முக்கியமானதல்ல. அவன் ஒருகொள்கைக்கு அடிபணிந்து நடந்துவந்தான். அந்த கொள்கையை நாம்  விமர்சிக்கலாம். அதை விடுத்து அவனது குணாதிசயம் நமக்குத் தேவையில்லை.

எலினார்  ரூஸ்வெல்ட் என்பவர் சொன்னதாகக்கூறப்படும் மேற்கோள் ஒன்று உண்டு. இது நூறாண்டுகளுக்கு முன்னமிருந்தே வழக்கிலிருந்தது, ப்ராடெஸ்டன்ட் பாதிரியார் சொன்னதாகவும் கூறுவர்.  ஆனால் அவரும் வேறொரு ஆதாரத்தில் மேற்கோள் காட்டியிருக்கலாம். எதுவாயினும் அந்த வாக்கியமானது.. “சிறந்த சிந்தனையாளர்கள் கருத்துகளை ஆய்வர், சாதாரண மனிதர்கள் நடப்புகளை அலசுவார்கள், குறுகிய மனப்பாங்குடையோர் தனிமனிதர்களை விமர்சிப்பர்..” எனவே நான் ஔரங்கசீப் அல்லது பாபரின் குணாதிசயங்களை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் எந்தக் கொள்கையால் உந்தப்பட்டார்களோ அது நம்மிடையே இன்னும் இருப்பதால், அது முக்கியமானது. ஔரங்கசீப்பையோ பாபரையோ நாம் இன்று ஏதும் செய்ய இயலாது. ஆனால் அவரது கொள்கையின் தாக்கம் சிலமக்களிடையே இன்றும் இருப்பதால், அதைப்பற்றி எச்சரித்து அவர்கள் மனதை மாற்ற முயற்சி செய்யலாம்.

Leave a Reply

%d bloggers like this: