ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > தட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்

தட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்

 

சுமார் கி.மு. 2000 ஆண்டு காலகட்டத்தில் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. மகரந்த தூள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும், மற்றும் அகேடியன் ஆவணங்களிலும்கூட அப்போது தீவிர வறட்சி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே காலத்தில் சரஸ்வதிநதியும் ஏற்கனவே சற்று வரண்டுபோன நிலையில் முழுவதும் வற்றிப்போய் முற்றிலும் மறைந்துவிட்டது அதனால் நதியோரம் இருந்த குடியேற்றங்கள் வேறிடங்களுக்கு மாறத்தொடங்கின.

இதேசமயம் எகிப்திலும் பழைய பேரரசு சரிந்துவிழ, அங்கிருந்து ஹாரப்பா நாகரிக கலைப்பொருள்களின் பங்கு வாணிபத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. மிகவும் தெளிவாக வணிகநிலையின் சரிவு தென்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மத்திய கிழக்கிலிருந்தோ அல்லது மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்தோ வந்த கலைப்பொருள்கள் ஒன்றும் ஹாரப்பா பகுதியில் கிடைக்கவில்லை. இது ஒரு புதிராக இருந்தது, ஏனெனில் ஹாரப்பாவிலிருந்து நிச்சயமாக பலபொருள்களையும், மக்களையும் ஏற்றுமதி செய்தனர், ஆனால் என்ன இறக்குமதி செய்தனர் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

எப்படியாயினும், ஹாரப்பா நகரங்கள் சரிந்தபின், தெற்குநோக்கி மக்கள் குடியேறத் தொடங்கினர், நர்மதை நதிக்கரையோரமும், கங்கைநதி சமவெளிப்பகுதிகளிலும். இந்த இடங்களில் எனவே ஒரு கலாச்சார தொடர்ச்சி காணப்படுகிறது, ஹாரப்பா கலாச்சாரத்திலிருந்து கங்கைக்கரை கலாச்சாரத்திற்கும். இது ஒருபக்கம் இருக்கட்டும். நமது முக்கிய ஆர்வம் கடலோரப் பகுதிகளைப்பற்றியது,அதற்கு வருவோம்.

உண்மையில், இதுவரை கூறியது ஏற்கனவே தெரிந்திருக்கக்கூடும். ஆனால் இனிவரும் செய்திகள் மிகவும் சுவாரசியமானவை. திடீரென மத்திய மேலும் தென்னிந்தியா புத்துயிர் கொண்டுவிடுகிறது. ஏதோ ஒரு காரணத்தினால் தென்னிந்தியா நமக்குத் தெரிந்தவரை குறிப்பாக உலோககாலத்தில் வெண்கல காலத்தைத் தாண்டி இரும்பு காலத்திற்கு நேரிடையாக வந்தடைந்தது. ஹாரப்பா கலாச்சாரங்கள் அனேகமாக வெண்கல காலத்தைச் சேர்ந்தவை. ஹாரப்பா சிதைந்தபின்னர் தென்னிந்தியாவில் இரும்பு காலம் தொடங்கிற்று.

இது மிகவும் சுவாரசியமான தகவல். நாம் நினத்தபடி இந்த இரும்பு உலோக சாதனங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்கு ஆர்யமக்கள் மத்திய ஆசியாவிலிருந்து பெரும்அளவில் வந்தபோது கொண்டுவந்தனர் என்றே நாம் நம்பினோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், இரும்புத்தாது முதன்முதலில் வட இந்தியாவில் கூட இல்லை, தென்னிந்தியாவில் ஹைதராபாத்திலும் அதைச்சுற்றிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அண்மையில் ஓராண்டுகாலம் முன்புதான், பல்வேறு இரும்பு சாதனங்கள், உலகிலேயே மிகப்பழமையானவை என்று கருதப்படுபவை, ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இது ஒரு சுவையான தகவல்.

Leave a Reply

%d bloggers like this: